இந்தியாவில் முதல் 10 இடங்களில் இருக்கும் தொழில்முனை பிராண்டுகள்!

0
வலை ஹாக்கிங் மூலமாக தேடல் உத்தியை பணமாக்கும் வித்தையை மிக சாமர்த்தியமாக செய்தது கூகிள். இதேப் போல் வன்பொருள் மற்றும் மென்பொருளை இணைத்து நுகர்வோர் இலகுவாக பயன்படுத்தவும் இதையே லைப்ஸ்டைல் ப்ராண்ட் ஆகவும் மாற்றியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

டௌக்லஸ் ருஷ்கோப், பேராசிரியர் - மீடியா தியரி மற்றும் டிஜிட்டல் எகனாமிக்ஸ், CUNY /Queens

அறிவுப்பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் வர்த்தகம் செயல்படும் போது தான் அது ஒரு பிராண்டாக உருமாறுகிறது. பல ப்ராண்ட் குருக்கள் கூறுவது போல் பிராண்டுகள் தங்களுகென்று தனித்துவத்தை வகுத்தக் கொள்ளவேண்டும். பொருட்களை உருவகமாக சித்தரிக்கும் போது அது வாடிக்கையாளர் மனதிலும் இடம்பெறுகிறது. குளோபல் பிராண்டுகளை உருவாக்குவதை நோக்கி என்ற கட்டுரையில் கலாரி கேப்பிடல் நிறுவனத்தின் தலைமை மேலாளர் வாணி கோலா கூறுகையில் "சிரத்தையுடனும் நோக்கத்துடனும் உருவாக்கப்படும் பிராண்டுகள் வலுவான பிராண்டாக உருவாகிறது" என்கிறார்.

சிலிக்கான் வேலியை ஒப்பிடுகையில் இந்திய தொழில்முனை நிறுவனச் சூழல் புதிது தான். ஆனாலும் பத்து வருடத்துக்குள்ளாகவே குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் தங்களை ப்ரனண்டுகளாக நிலை நாட்டியுள்ளன. பிராண்டாக உருவாக தொழில்முனை நிறுவனங்களுக்கு "ஐந்து கட்டளைகள்" என்ற தன்னுடைய கட்டுரையில் சுஷாந்த் சைனீ கூறுகையில் "பொருட்களால் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும் ஆனால் ஒரு ப்ராண்டால் மட்டுமே ஆசைகளை நிவர்த்தி செய்ய முடியும்" என்கிறார்.

இந்திய தொழில்முனை நிறுவனங்களை பற்றி யுவர் ஸ்டோரி ஒரு ஆய்வு நடத்தியது. நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்த ஆய்வை பூர்த்தி செய்தவர்களின் பட்டியலிலும் இருந்தது, எத்தனை முறை ஒரு நிறுவனம் தரவரிசையில் இடம்பெற்றது என்ற அடிப்படையில் எங்களின் இறுதி பட்டியலை தயார் செய்தோம்.

1. ஜோமாட்டோ (Zomato)

பல தொழில் நிறுவனங்களை நிறுவியரும் ஏஞ்சல் முதலீட்டாளருமான ரவி குருராஜ் ஜோமாட்டோ நிறுவனத்தை தனது பட்டியலில் ஆறாவதாக தேர்ந்தெடுத்தார். அவரை பொறுத்தவரை ஜோமாட்டோ, உணவு தொழில்நுட்ப பிரிவில் ராஜா. 'ஸ்டார்ட்அப் வில்லேஜ்' பிரணவ் சுரேஷ் கூறுகையில் "சர்வதேச விரிவாக்கம், பல்வேறு நகரங்களுக்கு இவர்கள் சேவையை எடுத்து சென்ற விதம், மெனுவில் தொடங்கி உணவு ஆர்டரை ஒருங்கிணைத்த விதம் இவையே எனது முதல் 10 பட்டியலில் ஜோமாட்டோ இடம் பெறக் காரணம்" என்கிறார். GHV ஆக்சிலரேட்டரின், விக்ரம் உபாத்யாயா கூறுகையில் "அசெட் லைட் என்ற கூற்றை பின்பற்றி உணவுத் தொழில்நுட்ப பிரிவில் சர்வதேச அளவில் இவர்கள் வளர்ந்த விதம் இவர்களை இந்த பிரிவின் முன்னோடியாக வைக்கிறது" என்கிறார்.

2. ஃப்ளிப்கார்ட் (Flipkart)

"தடைகளைத் தகர்க்கும் வலிமை, பயமற்ற முன்னேறும் உத்வேகம், யூனிகார்னுக்கெல்லாம் யூனிகார்ன், இவையே ஃப்ளிப்கார்ட் இந்த வரிசையில் இடம்பெற்றே ஆகவேண்டிய காரணிகள்" என்கிறார் ரவி. தொழில்முனைவோருக்கெல்லாம் முன்னோடியாக திகழும் காரணத்திற்காகவே பிரணவ் ஃப்ளிப்கர்ட் நிறுவனத்தை பட்டியலில் சேர்த்ததாக கூறுகிறார். இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தை மாற்றி அமைத்தது மட்டுமின்றி தொழில்முனை நிறுவனங்களின் மதிப்பீட்டை உயர்த்திப் பிடித்த முதல் இந்திய தொழில்முனை நிறுவனம் ஃப்ளிப்கார்ட் என்கிறார் விக்ரம் உபாத்யாயா.

3. இன்மோபி (InMobi)

கூகிள் நிறுவனத்திற்கு நிகராகவும் புதுமைகளை புகுத்துவதாலும் 'இன்மோபி' நிறுவனத்தை தனது பட்டியலில் இரண்டாவதாக வைத்துள்ளார் பிரணவ். இதை ஆமோதிக்கும் விதமாக ரவி கூறுகையில் "உலக முன்னோடி நிறுவனங்களுக்கு இணையாக உள்ள ஒரு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இன்மோபி" என்கிறார். "உலக சந்தையை பிடித்த முதல் முன்னோடி தொழில்நுட்ப இந்திய நிறுவனம் இன்மோபி" என்கிறார் விக்ரம் உபாத்யாயா.

4. பேடிஎம் (Paytm)

ஆன்லைன் வர்த்தகத்தில் தற்போதைய நிலையை மேற்கொண்டதற்கும் வேகமான வளர்ச்சிக்கும் பேடிஎம் நிறுவனத்தை தனது பட்டியலில் பத்தாவது நிலையில் வைத்துள்ளார் பிரணவ்.

5. பிராக்டோ (Practo)

"தனக்கென்று தனித்துவத்தை உருவாக்கி இந்திய தொழிநுட்ப தொழில்முனை சூழலில் பிராண்டாக உருபெற்றவர்கள் அந்தத் துறையின் முன்னோடி என்றே கருதுகிறேன். நுகர்வோர் நம்பிக்கை மற்றும் புது பயன்பாட்டினை அறிமுகப் படுத்தியுள்ளனர்" என்கிறார் GSF ஆக்சிலரேட்டரின் ராஜேஷ் சஹானி.

6. புக் மை ஷோ (Book my show)

"விரல் நுனியில் வசதி" என்ற காரணத்தால் புக் மை ஷோ நிறுவனத்தை தனது பட்டியலில் ஐந்தாம் இடத்தில் வைத்துள்ளார் ரவி.

7.  ஓலா (Ola)

வேகமான செயல்பாட்டிற்காக, ஓலா நிறுவனத்தை பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறுகிறார் பிரணவ். தேவையான நேரத்தில் உபெர் மாதிரி கிடைக்கும் வசதி உள்ளதால் பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறுகிறார் ரவி

8. ஸ்னாப்டீல் (Snapdeal)

"வருடம் முழுவதும் தள்ளுபடிகள், தள்ளுபடிகள் மேலும் தள்ளுபடிகள் " இதுவே இந்நிறுவனத்தை நான்காம் இடத்தில் பட்டியலிட வைத்தது என்கிறார் ரவி. 'முன்னிலை பெற்ற விதம் மற்றும் வளர்ச்சி" இவற்றிற்காக இந்நிறுவனத்தை சேர்த்ததாக கூறுகிறார் பிரணவ்.

9. ப்ரெஷ்டெஸ்க் (Freshdesk)

SaaS முன்னோடி மட்டுமல்லாது இந்தத் துறையின் ஒட்டுமொத்த எதிர்காலமும் இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் உள்ளது என்கிறார் ரவி. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்காக ஒன்பதாம் இடத்தில பட்டியலிட்டுள்ளார் பிரணவ்.

10. ரெட்பஸ் (RedBus)

யுவர்நெஸ்ட் ஏஞ்சலை சேர்ந்த சுனில் கே கோயல், ரெட்பஸ் நிறுவனத்துக்கு தனது பட்டியலில் முதல் இடத்தை கொடுத்துள்ளார். சமீப காலத்தில் வளர்ந்த மற்றும் வாடிக்கையாளர் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை தேர்ந்தெடுதேன். குறைந்த நிதியோடு புதுமை படைத்து வாடிக்கையாளரின் மனதில் இடம் பிடித்த நிறுவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். முந்தைய தொழில்முனை பிராண்டுகள் என்றால் இண்டிகோ, லெமன்ட்ரீ, மைக்ரோமாக்ஸ், நோக்ரீ.காம், மேக்மைட்ரிப், ஜஸ்ட்டயல் போன்ற நிறுவனங்கள் நினைவுக்கு வருகின்றன.

ஹப் பார் ஸ்டார்ட்அப் ப்ராஜக்ட் ரௌட் கூறுகையில்

பல்வேறு அளவுருக்கள் அடிப்படையில் தொழில்முனை நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த கான்சப்ட் சந்தை படுத்தும் விதமாக உள்ளதா, முன்னிலைப் படுத்தும் நிலைக்கு வருமா, முதலீட்டாளர் அவரது முதலீடை திரும்ப பெரும் சாத்தியம் உள்ளதா என்ற அடிப்படையில் ஒரு முதலீட்டாளர் பார்வை இருக்கும். முக்கியமாக நிறுவனத்தின் உள்ள குழுவின் ஆர்வம், அர்ப்பணிப்பு போன்றவையும் கருத்தில் கொள்ளப்படும்.

மேலும் அவர் கூறுகையில் "நிறுவனத்தின் பொருள் மற்றும் சேவையின் தரம், விலை, மதிப்புக் கூட்டு சேவை மற்றும் அந்நிறுவனத்துடன் ஏற்படும் அனுபவம் இவையே வாடிக்கையாளரின் விருப்பதை முடிவு செய்கிறது."

"நிறுவன குழுவின் செயல்பாடு, நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் சந்தையில் அதற்குள்ள மதிப்பு இவையே வருங்கால ஊழியர்களை ஈர்க்கும்" என்கிறார்.

இந்த மூன்று தரப்பிற்குமே வளர்ச்சி விகிதம் மற்றும் துரித வளர்ச்சி நல்ல எண்ணத்தை உண்டு பண்ணக் கூடியது, வளர்ச்சியே நம்பகத்தன்மையை ஊட்டுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்நிறுவனங்கள் சர்வே பொறுத்தே இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன)

ஆக்கம்: அபராஜிதா சௌத்ரி, தீப்தி நாயர் | தமிழில்: சந்தியா ராஜு