உலகின் பிரபல குழந்தைகள் ப்ராண்டுகளின் உரிமம் பெற்று இந்தியாவில் சந்தைப்படுத்தும் 'ஜின்ஜர் க்ரஷ்'

0

ராஜ்வி மக்கோல் வேலை முடித்து வீடு திரும்பியபோது அவரது 6 வயது மகன் அழுது கொண்டிருந்தான். அவர் மகன் "ஆங்கிரி பேர்ட்ஸ்" விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த விளையாட்டு சமந்தமான பொருட்கள் விற்பனை பற்றிய விளம்பரம் அந்த விளையாட்டின் நடுவில் வந்துள்ளது. அதுவே அவன் அழுகையின் காரணம்.

rajvi and saumya
rajvi and saumya

அவர் மகன் அந்த விளையாட்டின் தீவிர விசிறி என்பதால், அந்த பொம்மைகள் பொருத்திய காலணி வேண்டும் என்பதே அவன் கோரிக்கை." நான் இணையத்தில் தேடியதில் அப்படிப்பட்ட காலணிகள் பின்லாண்டில் மட்டுமே கிடைப்பதையும் அவற்றை இங்கு தருவிக்க எனக்கு 5000 ருபாய் செலவாகும் என்பதையும் உணர்ந்தேன்" என்கிறார் ராஜ்வி.

நிறுவனத்தின் பிறப்பு

அன்று இரவு ராஜ்வி, ரோவியோ நிறுவனத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அந்நிறுவனம் தான் ஆங்கிரி பர்ட்ஸ் விளையாட்டை தயாரிப்பவர்கள். அவர்களிடம் அவர்களின் பொருட்களுக்கு இந்தியாவில், தான் விநியோகஸ்தராக ஆக இயலுமா என வினவினார். ஆனால் அவர்கள் பதில் மூலம் அவர்களுக்கு விநியோகஸ்தர்கள் அவசியம் இல்லை என்பதும் அவர்களின் பொம்மைகளுக்கு உரிம பங்குதாரர்கள் தான் அவசியம் என்பதும் ராஜ்வி உணர்ந்தார். அப்படிதான் ராஜ்வி உரிமம் பெற்று தொழில் செய்யும் துறைக்கு அறிமுகமானார்.

உரிமம் என்பது, பிரபலமான ஒரு பொருளின் அடையாளத்தை அதன் குறியிடை, மற்றவர்கள் பொருட்களின் மீது உபயோகிக்க கொடுக்கும் அனுமதி ஆகும். ஆனால் அடையாளத்தின் முழுகட்டுப்பாடு சம்மந்தப்பட்ட நிறுவனத்திடமே இருக்கும். உரிமம் பெற்றவர்கள் அந்த அடையாளக் குறியீடை, அவர்களுக்கு வகுக்கப்பட்ட கால வரையறைக்குள், அவர்களுக்கு வகுக்கப்பட்ட நில அளவுகளுக்குள் உபயோகித்து கொள்ளலாம்.

2011ஆம் ஆண்டு ராஜ்வி மற்றும் அவரது மனைவி சௌமியா நிதி தங்களது உரிமத்தொழிலை, ஒரு டஜன் வெளிநாட்டு நிறுவனங்களோடு உரிம பங்குதாரராக இணைந்து ஆரம்பித்தனர். வதோதராவில் ஆரம்பித்த நிறுவனத்திற்கு அவர்கள் சூட்டிய பெயர் "ஸ்வதேஷ் ஈஸ்சபில்" (Swadesh Essfil)

ஜின்ஜர் க்ரஷ் வரையிலான பயணம்

ஹலோ கிட்டி, ஆங்கிரி பேர்ட்ஸ், மற்றும் ட்ரீம் வொர்க்ஸ் அணிமேஷன் ஆகிய நிறுவனங்களோடு அவர்கள் உரிம பங்குதாரராக செயல்பட்டனர். இதன் மூலம் ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனத்தின் குங்ஃபூ பாண்டா, மடகாஸ்கர், ஷார்க் ஆகிய வடிவங்களை அவர்கள் உபயோகிக்க இயலும்.

2012 ஆம் ஆண்டு, ராஜ்வி ஃபிலிப்கார்ட் நிறுவனத்தோடு இணைந்து, "பாக் டு ஸ்கூல் சேல்" அறிமுகபடுத்தினார். முதல் நாளில் 10,000 மதிப்பில் இருந்து அடுத்த சில நாட்களில் 40 லட்சமாக நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்தது.

அடுத்து, சௌமியா நிதி, ஒரு நினைவாற்றலை பரிசோதிக்கும் விளையாட்டை 2013 ஆம் ஆண்டு உருவாக்கினார், அதன் பெயர் "சிம்ப் சேலன்ஞ்". ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கிழ் இந்த விளையாட்டை துவக்கினர், அதற்கு, படிபிற்கான சிறந்த விளையாட்டு பொருள் என்ற அவ்வருடதிர்க்கான விருதை, "ஆல் இந்தியா டாய் மானுபாக்ச்சர்" இவர்களுக்கு வழங்கினார்கள்.

ஆஹா ! தருணம்

ஆண்டு வருமானம் 9 கோடி ரூபாயாக இருந்தாலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தை ராஜ்வி மற்றும் சௌமியா உணர்ந்தனர். பல வகை ப்ராண்ட்ஸ் இருந்தாலும், அவற்றை முயற்சித்து பார்க்க வாடிக்கையாளர் விரும்பவில்லை. எனவே அவர்களுக்கு வேண்டியவற்றை வேண்டியது போல வடிவமைத்து பிறகு எங்களிடம் கூறினால் அவர்களுக்கு அவற்றை நாங்கள் அனுப்பி வைப்போம்.

அப்படித்தான் 'ஜின்ஜர் க்ரஷ்' (Ginger Crush) உருவாகியது. அதனை ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி துவக்கினோம். அது வாடிக்கையாளர்களின் விருப்பதிற்கேற்ப, தேவைக்கேற்ப, பொருளை தேர்வு செய்து, அதன் வடிவத்தை தேர்வு செய்து பின், விற்பனை ஆணையை அவர்கள், அனுப்பலாம்.

ஜின்ஜர் க்ரஷ் தனித்தன்மை

தற்போது அவர்களிடம் 85 உரிம பங்குதாரர்களும், 28 சர்வதேச கலைஞர்களின் வடிவங்களை இவர்களது நூலகத்தில் வாடிக்கையாளர் பயன்படுத்த வைத்துள்ளனர்.

டிஸ்னி, பிக்சார் மூவீஸ், மார்வெல், லூக்காஸ் பில்ம்ஸ், ஹிட் என்டர்டெய்ன்மென்ட், மேட்டல், பிஷெர் பிரைஸ், பீநட்ஸ், ஷான் தி ஷீப், நிக்கலோடியன், டோரா, பிடோ டிடோ மற்றும் மேலும் பல நிறுவனங்களின் அடையாளங்களை உபயோகிக்கும் உரிமபங்குதாரராக உள்ளனர்.

இதில் பிடோ டிடோ என்ற கார்டூன் நீண்ட நாட்களாக எங்கும் பார்க்க முடியாமல் இருந்த வேளையில், அதை, மீண்டும் ஜின்ஜர் க்ரஷ் கொணர்ந்தது. "அதை உருவாக்கியவர்களை சந்தித்து, அவர்களின் தயாரிப்புக்கு உரிமம் கோரியபோது, அவர்கள் மிகமகிழ்ச்சியோடு ஒப்புக்குக்கொண்டனர் என்கிறார் ராஜ்வி.

ஜின்ஜர் க்ரஷ் மீதான வேலை, சென்ற வருடமே துவங்கினாலும், அது முடிவடைய ஒரு வருடம் எடுத்துக்கொண்டது. மேலும் காப்புரிமை பெற்ற அவர்களது மென்பொருள், வெறும் 9 நிமிடங்களில் 28,000 பொருட்களை வடிவமைக்கும் திறன் படைத்தது.

தற்போது அவர்கள் தளத்தில், டி-ஷர்ட்ஸ், கோப்பைகள், தொலைபேசி உரைகள் உள்ளன, விரைவில் மேலும் பல பொருட்களை சேர்க்க இருப்பதாக கூறுகின்றனர். மேலும் வாடிக்கையாளர், அவர்களுக்கு வேண்டிய வடிவத்தையும் இவர்கள் தளத்தில் உருவாக்கிக்கொள்ளலாம்.

தற்போதைய நிலைமை

துவங்குவதற்கு முன்பே 1 மில்லியன் அமேரிக்க டாலர்கள் திரட்டிய இந்நிறுவனம், தற்போது பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதன் தளம் மூலம் விற்றுள்ளது. "அதிகமான விற்பனை வந்தது, டி-ஷர்ட்ஸ், கோஸ்டெர்ஸ் மற்றும் கோப்பைகளில் இருந்து தான். அதே போல் ஸ்டார் வார்ஸ், பீ கிரியேட்டிவ், பிடோ டிடோ போன்ற வடிவங்களே அதிகம் விரும்பி வாங்கப்பட்டன" என்கிறார் ராஜ்வி

சந்தை நிலவரம்

உலகளாவிய உரிமத் தொழில் சந்தையை மேற்பார்வையிடும் "லிமா"வை பொறுத்தவரை, சில்லறை விற்பனையாக சர்வதேச நிறுவனங்களின் அடையாளங்களை தாங்கிய பொருட்களின் விற்பனை 241.5 பில்லியன் அமெரிக்க டாலர்கலாகவும், அவற்றின் மூலம் ராயல்டி மூலம் கிடைக்கும் வருமானம் 13.4 பில்லியனாகவும் உள்ளது.

இந்திய சந்தையின் பெரிய புள்ளிகள்

தற்போது நான்கு நிறுவனங்கள் உரிம சந்தையை ஆக்ரமித்துள்ளன. அவை : பிரிண்ட்வெண்யு, சூமின், விஸ்டாபிரிண்ட் மற்றும் வாக்ஸ்பாப்.

சூமின் 1.5 மில்லியன் வாடிக்கையாளர் மூலம், 38 கோடி வருவாயாக ஈட்டியுள்ளது. சென்ற வருடம், 8 மில்லியன் அமெரிக்க டாலர்கலை, லைட் பாக்ஸ் வென்ச்சர்சிடம் இருந்து பெற்றது.

ராக்கெட் இன்டர்நெட் மூலம் ஊக்குவிக்கப்படும் பிரிண்ட்வெண்யு, தினமும் 1000 விற்பனை ஆணைகள் கிடைப்பதாகவும், அதன் மூலம் சென்ற வருடம் 7.8 கோடி வருவாய் ஈட்டியதாகவும் கூறியுள்ளனர். மேலும் ராக்கெட் இன்டர்நெட்டிடம், 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டியுள்ளது.

நாஸ்டாக் பங்குச்சந்தையில் பதியப்பட்டுள்ள, விஸ்டா பிரிண்ட், தற்போது, ப்ரிண்ட்பெல் என்ற இந்திய நிறுவனத்தை வாங்கியதன் மூலம், இந்திய சந்தைக்குள் நுழைந்துள்ளது. சென்ற வருடம் அதன் லாபம் 11.5 கோடிகள்.

இதே போன்று வாக்ஸ்பாப் ஒரு மாதத்திற்கு 2 கோடி ருபாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளது

வலைத்தளம்.

ஆக்கம் : அபர்ணா கோஷ் | தமிழில் : கெளதம் தவமணி.