’எவரும், எங்கும் வாக்களிக்கலாம்’- புதுமையான பயோமெட்ரிக் வாக்கு இயந்திரம் உருவாக்கியுள்ள சென்னை கல்லூரி!

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரித்து, வாக்குப்பதிவேட்டில் பெயருள்ள எவரும் எந்த சாவடியிலும் வாக்களிக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயந்திரத்துக்கு விருது!

0

சென்னையை அடுத்த சோலிங்கநல்லூரில் அமைந்துள்ள செயிண்ட்.ஜோசப் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள CDCE – MSME Centre of Excellence in Factory Automation & Robotics அதாவது, தொழிற்சாலை தானியங்கி மற்றும் ரோபோடிக்ஸ் சிறப்பு மையம் அண்மையில் உருவாக்கியுள்ள ’பிழையில்லா வாக்கு இயந்திரம்’ (Fool Proof Centralized Voting Machine using Biometric), சிறந்த புதுமையான திட்டத்திற்கான விருதுக்கு இந்தியன் தேசிய அறிவியல் அகாடமி (INAE), டெல்லியிலியால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  

கல்லூரி குழுவினர் இதை உருவாக்கியுள்ள முக்கிய நோக்கமே வாக்கு எண்ணிக்கை சதவீதத்தை பெருக்குவதே ஆகும். இந்த இயந்திரம் பயோமெட்ரிக் முறையில் வடிவமைக்கப்பட்டு, போலி வாக்குப்பதிவை முற்றிலும் தவிர்த்துவிடும். மேலும் வாக்காளர் பதிவேட்டில் உள்ள எவர் வேண்டுமானாலும் எந்த வாக்குச்சாவடியிலும் தங்கள் வாக்கை பதிவு செய்யமுடியும் வகையில் இது அமைந்துள்ளது. 

பிழையில்லா வாக்கு இயந்திரம் (இடது)
பிழையில்லா வாக்கு இயந்திரம் (இடது)

வாக்கு இயந்திரம் உருவான கதை:

கடந்த 2014 மத்திய தேர்தல் நடைப்பெற்ற சமயத்தில் நாடு முழுதும் அதிகபட்சமாக 70 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தது அனைவருக்கும் தெரியும். அப்போது அதுகுறித்து ஆராய்ந்தபோது, மக்கள் தங்கள் இடங்களை விட்டு, தங்கள் பெயர் இருக்கும் வாக்குச்சாவடி இடத்திற்கு செல்வதை சிரமமாக நினைப்பது தெரியவந்தது. இதுவே அவர்கள் ஓட்டு போடாததற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது. அதன்படி, வாக்குப் பதிவு எண்ணிக்கையை உயர்த்தவும், போலி வாக்காளர்களை தவிர்க்கவும் ஒரு இயந்திரம் உருவாக்க முடிவெடுத்தனர் KCT-CDCE குழுவினர். 

“Anyone can vote anywhere, என்ற முக்கிய கோட்பாடை முன்னிறுத்தி இந்த பயோமெட்ரிக் வாக்கு இயந்திரத்தை வடிவமைத்து, உருவாக்கியுள்ளோம். இதை பயன்படுத்தினால் வாக்குப்பதிவு சதவீதம் வருங்காலத்தில் அதிகரிக்க உதவும்.”

இக்குழுவில், ராஜசேகர், CDCE ஆட்டோமேஷன் தலைவர் திட்ட வடிவமைப்பாளராகவும், தியாகராஜன், திட்டத்தின் தலைவர் மெக்கானிகல் அசெம்ப்ளி மற்றும் பாப்ரிகேஷன் செய்தும், Dr.ஞனானகெளசல்யா, இசிஇ துறைத்தலைவர், ப்ரோகிராமிங் பணிகளையும், நவீன் குமார், ஆட்டோமேஷன் பொறியாளார், பயோமெட்ரிக் பணிகளையும் இணைந்து செய்துள்ளனர். 

“திட்டத்தின் மொத்த செலவு 1 லட்ச ரூபாய் ஆகும். அதற்கான நிதியை cdce செய்து, ஓர் ஆண்டில் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.” 

சமூக நோக்கோடு, மக்களுக்கும் அரசுக்கும் உதவும் வகையில் இந்த இயந்திரத்தை உருவாக்கியதாக குழுவினர் தெரிவித்தனர். தற்போது INAE Indian National Academy for Engineering, இவர்களின் தயாரிப்பை சிறந்த புதுமையான திட்டம் விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். அந்த விருது டிசம்பர் மாதம் வழங்கப்படும். 

தற்போது மாதிரி இயந்திரம் தயாரித்துள்ள இவர்கள் வரும் மாதங்களில் இந்திய அரசாங்கத்துடன் இது பற்றி கலந்துரையாடி, இந்த வாக்கு இயந்திரத்தை தேர்தலில் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளனர். செயிண்ட்.ஜோசப் நிறுவன தலைவர் மற்றும் இயக்குனர் Dr.பாபு மனோஹரன் இக்குழுவினருக்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் அளித்து, இத்திட்டம் வெற்றி பெற உறுதுணையாக இருந்துள்ளார். 


Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan