சென்னையில் இந்தியாவின் முதல் 'தந்திரக் கலை அருங்காட்சியகம்' 

இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் இருப்பதோடு, ஒருவித வேடிக்கையான செய்கையுடன் பங்கேற்பாளரின் பங்களிப்பை கோருவதாகவும் இது இருக்கும். 

0

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது 'க்ளிக் ஆர்ட் மியூசியம்'. விஜிபியில் இருக்கும் இது, இந்தியாவின் மாபெரும் ஸ்னோ கிங்டத்தில் 2000 சதுரடி இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமாகும் (Trick Art Museum). இந்த மியூசியத்தை நடிகரும் இயக்குனருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தொடங்கிவைத்து, இந்த ஓவியங்களுடன் விதவிதமாக  புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த “தந்திரக் கலை” மூலம் இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாண ஓவியமாகத் தெரியும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு முன் ஓவியம் என்பது அழகியல் தன்மை கொண்டது, கலைப் பொருள் சேகரிப்பாளர்களுக்கான முதலீடு அல்லது தெய்வீகமானது என்ற எண்ணமே மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்துள்ளது. ஆனால் ஓவியம் அல்லது ஓவிய அருங்காட்சியகமானது வேடிக்கையானதாக, நகைச்சுவை ததும்பும் விதமாக, உரையாடல்தன்மை கொண்டதாக இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தந்திரக் கலையானது “ஒளியியல் மாயக் கலை” (Optical Art) அல்லது முப்பரிமாண ஓவியங்கள் (3D Art) என்றும் அறியப்படுகிறது. அதாவது இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் இருப்பதோடு, ஒருவித வேடிக்கையான செய்கையுடன் பங்கேற்பாளரின் பங்களிப்பை கோருவதாகவும் இருக்கும். பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். இதற்கு முன்னர் ஓவியக் கலை என்பது இப்படி ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் இருந்ததில்லை.

இந்த தந்திரக் கலையை வடிவமைத்திருக்கும் ‘க்ளிக் ஆர்ட் மியூசியம்’ என்பது மாபெரும் ஒளியியல் மாய ஓவியங்கள் நிறைந்த இடமாக, பார்வையாளர்களின் மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் ஓர் இடமாக இருக்கும். கச்சிதமான உள்கட்டமைப்பும், புதுமையான ஓவியங்களும் பார்வையாளரை வேறொரு உலகத்திற்கு, ஒரு மாய உலகிற்குக் கூட்டிச் செல்லும். அம்மாய உலகில் நீங்கள் மோனா லிசாவின் விருந்தாளியாகவோ, அட்லஸின் நண்பராகவோ இருக்கக் கூடும்.

தந்திரக் கலை பற்றிய வரலாறு

இக்கலையானது, 2,000 வருடங்கள் பழமையானது என்றும், மறுமலர்ச்சி காலத்தில் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஓவிய வடிவமாக உருவாகிற்று என்றும் சொல்லப்படுகிறது. ‘டொம்போ-ல-ஈல்’ என்பது இதன் பிரெஞ்சுப் பெயர். அதற்கு தமிழில் ‘கண்களை ஏமாற்று’ என்று பொருள். இரு பரிமாண ஓவியங்களை முப்பரிமாணத் தன்மையுடன், ஒரு நிஜப் பொருளாக காண்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட வடிவமிது. அரைகள், உண்மையில் இருக்கும் அளவைக் காட்டிலும் பெரியதாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் இந்த ஓவிய வடிவம் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. மேற்கத்திய ஓவியங்களில் பல காலங்களாக இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக மேற்கூரை வரைய அக்காலத்தில், தட்டையானதொரு மேற்கூரையைக் கூட கவிந்த கூரையாகக் காட்டும் அளவுக்குத் திறமை வாய்ந்த ஓவியர்களாக இருந்தார்கள்.

14 ஆம் நூற்றாண்டில் கட்டிடக் கலையில் தோன்றிய தொலைவுத் தோற்ற (perspective) காட்சியாக்கத்தின் விளைவாக, ஓவியக் கலை மற்றும் கட்டிடக் கலையில் பரந்த காட்சி வித்தைகளின் தேவை அதிகரித்தது. ஒளியியல் மாயை மூலம் கண்களை ஏமாற்றும் அந்த காட்சிக் கலை தொழில்நுட்பமானது பின்னர் மாய-யதார்த்த உருவப் படங்கள் வரைவதற்கான ஒரு பாணியாக மாறி 17ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மேல்தட்டு வர்க்கத்தினர் மத்தியில் பிரபலமானது. கிரேக்கம் மற்றும் ரோமத்தில் அதன் வேர்களைக் கொண்ட இக்கலையானது போம்பெய் போன்ற பழமைவாய்ந்த நகரங்களில் இன்றும் காணலாம். பண்டைய கிரேக்க ஓவியர் ஜீயுசிஸ் மற்றும் அவரது பரம எதிரி ஃபர்ஹாசியஸின் கதை ஓவியம் பிரபல உதாரணங்களில் ஒன்று.

இதன் அறிவியல் பின்னணி தான் என்ன ?

புத்திசாலித்தனமான நிழலோவியமும், சுற்றளவுக்கு வெளியே வரையப்பட்டிருக்கும் செய்கையும் பார்வையாளரிடம் ஒருவித மாய புலனுணர்வைத் தூண்டுகிறது, அவ்வோவியத்தில் காணப்படும் செய்கைக்கு ஈடாக அல்லது பதிலாக ஒரு செய்கையில் ஈடுபட தூண்டுவதன் மூலம், இது பார்வையாளர் பங்கேற்பைக் கோருகிறது. ஒரு ஓவியக் களத்தில் ஓவியரும் பார்வையாளரும் போரில் ஈடுபடுவது போன்றதொரு நிகழ்வானது, அந்த ஒளியோவிய மாயையானது மனிதருக்குள் இருக்கும் இயல்பான ஆர்வக் கோளாறை தூண்டி, கண் முன் இருக்கும் அந்தப் பொருள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க மூளைக்குக் கட்டளையிடுகிறது. 

எந்த ஒன்றையும் சரியாகக் கண்டுபிடித்தே ஆக வேண்டும், அறிந்தே ஆக வேண்டும் என்ற மனித இயல்பூக்கங்கள் இங்கே தூண்டப்பட்டுவிடுகின்றன. அதனால் மூளைக்கும் கண்களுக்கும் இடையில் ஒரு யுத்தமே நிகழ்ந்துவிடுகிறது. அனுபவங்கள் வாயிலாகவும், அனுமானங்கள் மற்றும் முன் முடிவுகள் மேற்கொள்ளும் பண்புகளாலும் மூளையில் முன்பதிவாக இருக்கும் காட்சிப் படிமங்கள் எதிரில் தெரியும் ஓவியம் என்ன சொல்கிறதென சட்டென முடிவெடுக்கத் தூண்டுகிறது, அதேவேளை ஆழ் மனதோ உண்மையைக் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தப் போராடுகிறது. இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தான் கிளிக் ஆர்ட் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு கோணத்திலிருந்தும், இடத்திலிருந்தும் காணும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தந்திரக் கலை ஓவியங்களும் வேறு வேறு மாதிரித் தெரியும். புகைப்படக் கருவி கொண்டு காண்கையில் அந்த ஓவியங்களின் மாய அழகு பிரம்மாண்டமாகத் தோன்றும்.

இந்தத் தந்திரக் கலை ஓவியங்களைக் காண்பதால் மூளை ஆரோக்கியமானதொரு புறத் தூண்டுதலைப் பெறுவதாக சமீப கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளை அனுபவிக்கும் மாற்றங்கள் மனிதனின் அடிப்படை இயல்பூக்கத்திற்கு சவாலாக அமைவதால் இத்தூண்டுதல் நல்ல மன எழுச்சியைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிளிக் ஆர்ட் மியூசியத்தில் செய்யப்பட்டிருக்கும் வசதிகள்

பார்வையாளர்களின் மூளைக்கு வேடிக்கையானதொரு பயற்சிகள் அங்கு கிடைக்கின்றன அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் சில:

1. “மாமா – யு வான ஹேட் மீ” – ஆதாம் ஆப்பிள் கொடுப்பது போன்ற ஓவியம்.

2. “… இப்போது சிறந்த அவார்டைப் பெறுபவர்” – ஆஸ்கர், ஆஸ்கர் அவார்ட் தரப்போகிறார்.

3. “நீங்களும் தேவதைகளே” – உடலற்ற இரண்டு தேவதைகள் இருக்கும். நீங்கள் அங்கு தேவதைகளாவீர்கள்.

4. “டால்ஃபினும் நானும்” – சட்டகத்திலிருந்து குதிக்கும் டால்ஃபினுக்கு வளையம் கொடுங்கள்.

5. “தி கட்டிங் எட்ஜ்” – மாயக் கலை நிபுணர் ஒருவர் உங்கள் உடலை இரண்டாக வெட்டி அருகில் வைத்தால் எப்படி இருக்கும்?

6. “நடுவுல கொஞ்சம் கதவைக் காணோம்” – நீங்கள் கழிப்பறையில் இருக்கும்போது யாரேனும் எட்டிப் பார்த்தால் எப்படி இருக்கும்?

7. “நீ என்ன பெரிய அப்பா டக்கரா” – அந்த சட்டகத்திலிருந்து சீறிக் கொண்டுவரும் நாகப் பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் உள்ளதா?

8. “வெனிஸ் ஒன்றும் தூரமில்லை” – வெனிசில் படகில் போகும் கனவு காண்பவரா நீங்கள், அப்படியென்றால் இது உங்களுக்கான இடம்.

9. “காபியைக் காட்டிலும் அந்த புன்னகை ஆவலைத் தூண்டக்கூடியது” – மோனலிசாவின் விருந்தாளியாக விரும்புகிறீர்களா? உங்களுக்காக அவள் காபியோடு காத்திருக்கிறாள்…

10. “மோனலிசவுடன் காபியும் இசையும்” – உங்களுக்கு காபி கொடுத்து இசைக்கவும் காத்திருக்கிறாள் மோனலிசா.

11. “அம்மாவின் கருவறை” – தாயின் கருவரைக்குள் மீண்டும் செல்லும் உணர்வு அந்த மாபெரும் குமிழியில்.

12. “செல்ஃபி புள்ள” – சிம்பான்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் பாவம் அதை பயமுறுத்திவிடாதீர்கள்!

13. “அப்பாடா, ஒருவழியாக வைர மோதிரம் கிடைக்கப் போகிறது” – அட்லஸ் உங்களுக்காக காத்திருக்கிறார்.

14. “மண்டைத் தீவு” –மண்டையோட்டுக் கோட்டைக்குள் படியேறிப் போகும்போது கவனம்!

இந்தப் பட்டியல் வெறும் ட்ரெய்லர் மட்டுமே. உண்மையில் க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில் இதுபோல் மொத்தம் 24 ஓவியங்களுடன் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு எந்த விதிகளும் கிடையாது, உண்மையில் செய்யக்கூடாதவை என்று எதுவுமில்லை, வழக்கமாக இதுபோன்ற பொது இடங்களில் எதையெல்லாம் அனுமதிக்க மாட்டார்களோ அதற்கெல்லாம் “க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில்” இடமுண்டு. விருப்பம் போல் புகைப்படம் எடுங்கள், காட்சிப் பொருள்களைத் தொட்டுப் பாருங்கள், சத்தமாக சிரித்து மகிழுங்கள், தேவைப்பட்டால் தரையில் படுத்து உருளுங்கள், ஏனென்றால் அங்குள்ள ஓவியங்களைக் காணும்போது உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது! கலை நயத்துடன் கூடிய ஒரு வேடிக்கை விநோத மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரே கலை அருங்காட்சியகம் க்ளிக் ஆர்ட் மியூசம் மட்டுமே. கிளம்புங்கள், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நடிகரை, ஒளிப்பதிவாளரை அல்லது இயக்குனரை வெளியே விடுங்கள்! அவர் சொல்வதை மட்டும் கேளுங்கள்!

உள்ளே ஒரு சுற்றுலா:

அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும், அங்கிருக்கும் உதவியாளர் ஒருவர் அருங்காட்சியகம் பற்றியும் அங்குள்ள ஓவியங்கள் குறித்தும் அங்கு நீங்கள் எப்படிச் சுற்றித் திரியலாம், எங்கு நின்று எப்படி புகைப்படம் எடுக்கலாம் என்றெல்லாம் விளக்குவார். உள்ளே, முக்கியமான இடங்களில் விளக்கக் காணொளிப் படங்களும் திரையிடப்பட்டிருக்கும், அது உங்களை ஒரு ‘கலைப் போருக்குத்’ தயாராக்கும்.

இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கியவர்:

க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகம் எனும் இந்த கருவையும் வடிவத்தையும் உருவாக்கியவர் ஓவியர் ஸ்ரீதர். இவர் காரைக்குடி அருகில் இருக்கும் பள்ளத்தூர் எனும் ஒரு கிராமத்தில் பிறந்தவர். வெற்றியை இலக்காக வைத்து ஒரே வடிவிலான ஓவியங்களோ அல்லது தொழிலையே மேற்கொள்ள விரும்பாத இவர் ஒரு சிறந்த ஓவியர், ஓவியத் துறையில் இரு சாகசக்காரர் என்றே சொல்லலாம். யாரும் எடுக்கத் துனியாத பாதையில் பயணிப்பதே இவருக்குப் பிடித்தமானது.

இதுவரை அவர் 62 ஓவியக் கண்காட்சிகள் வைத்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. வித்தியாசமான சிந்தனையுடன், புதுமையான தொழில்நுட்பத்துடன் இவர் படைக்கும் ஓவியங்கள் கமலஹாசன், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளை அலங்கரித்துள்ளது. இதுதவிர இவரது ஓவியங்கள் மாபெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் பிரதான தேர்வாக இருக்கிறது. விருதுகள், பிரபலங்களின் பாராட்டுகளோடு இவர் ஓய்ந்துவிடவில்லை, என்றென்றைக்கும் புதிய உற்சாகத்துடன் புதிய புதிய விஷயங்களைப் படைக்கும் ஆர்வத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறார். இதுபோன்ற எண்ணற்ற புதுவகையான படைப்புகளை நமக்காக படைக்க விரும்பும் ஸ்ரீதரின் வேட்கை என்றைக்கும் தணியாது.

இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு:  ஸ்ரீதர் 9884035121

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Related Stories

Stories by YS TEAM TAMIL