3 கோடி ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு 'ஆன்லைன் உணவகச் சேவை' தொடங்கி வெற்றி நடைபோடும் ராஜூ பூபதி!

6

'ஹலோ கறி - பாஸ்ட் இந்தியன் புட் (Hello Curry - Fast Indian Food),' இது ராஜு தொடங்கிய முதல் ஆன்லைன் துரித உணவகச் சேவை. வீடுகளுக்கு நேரடியாக துரித உணவினை கொண்டு சேர்க்கும் நிறுவனம். இன்று மெக்-டி அளவுக்கு இது பிரபலமாகி உள்ளது.

ஒரு சோதனைக்கூட உதவியாளராக பணியில் சேர்ந்த போது அவர் வாங்கிய சம்பளம் 1000 ரூபாய்.

பின்னர், தகவல் தொழில் நுட்பத் துறையில் நுழைந்து 15 ஆண்டுகளுக்குப் பின் அந்த பெரிய நிறுவனத்தின் தலைவராக அவர் உயந்த போது அவர் வாங்கிய சம்பளம் ஆண்டுக்கு 3 கோடி! தற்போது அந்த வேலையை உதரிவிட்டு சொந்தமாக அவர் தொடங்கிய 'ஆன்லைன் துரித உணவகம்' நாடுமுழுதும் பிரபலமாகி உள்ளது.! 

அப்பாவைப் போல் தானும் டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ராஜுவின் சிறுவயது ஆசை. அனால் பலரையும் போல் வாழ்க்கை திசைதிரும்பி வேதியியல் படித்து அவர் வந்து சேர்ந்ததோ ஒரு லேப் உதவியாளராக. கிடைத்த சம்பளம் ஆயிரம் ரூபாய். அவரது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள். தோல்விகள் மூலம் பல பாடங்களை கற்றுக் கொண்டேன். தோல்விகளில் துவளாமல் மன உறுதியுடன் இருந்தால் ஒருநாள் நிச்சயம் என்பது ராஜுவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

அன்று லேப் உதவியாளர் பணிக்கு சராசரியாக 5000 ரூபாய் சம்பளம் இருந்தது. ஆனால் ராஜுவுக்கு வழங்கப்பட்டதோ 1000 ரூபாய் பின்னர் அவரது உழைப்பை பார்த்து 1500 ரூ கொடுத்தார்கள்.

புதிதாக பணிக்கு வருபவர்களுக்கொ 10000 முதல் 15000 வரை கொடுக்கப்பட்டது. பட்ட மேல் படிப்பு பட்டம் தனக்கு சம்பளம் குறைவு. ஆனால் வெறும் பட்ட படிப்பு படித்தவர்களுக்கு சம்பளம் அதிகம். இது ஏன் என்று ராஜு சிந்திக்கத் தொடங்கினார். சமூகத்தில் மருத்துவருக்கும், பொறியாளருக்கும் மட்டுமே மதிப்பு. தன்னைப் போல் பி.ஜி. முடித்தவருக்கு மரியாதை இல்லை என்பதை உணர்ந்து கொண்டார். ஐ.ஐ.டி., எம்.பி.ஏ மாணவர்களுக்கு மட்டுமே பெரும் நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்து. இதனை முறியடிக்க வேண்டும் என்று ராஜு உறுதி பூண்டார்.

அந்த உறுதியை தனது வேலையில் முழு வீச்சில் செலுத்தினார். அதன் பலனாகத் தான் பணியாற்றும் ஆப் லேப் நிறுவனத்தில் பணியாற்றி 10 ஆண்டுகளில் மேலாளர், முதன்மை ஆலோசகர், துணைத் தலைவர் என்கிற முக்கிய பதவிகளுக்கு உயர்ந்தார். ஆனால், அமெரிக்காவில் பணியில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு வர வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டது. அதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார் ராஜு. ஆனால் அந்த நிறுவனத்தின் சி.இ .ஓ அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது அவரது மனைவி கர்பிணியாக இருந்ததால் ராஜினாமா முடிவை கைவிட்டு மேலும் 5 ஆண்டுகள் அதே பணியில் தொடர்ந்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு வந்த ராஜு மீண்டும் அமெரிக்க செல்லவே முடிவெடுத்தார். காரணம் தனது தாயின் ஆலோசனை, உறவினர்கள் அமெரிக்காவுக்கு குடி ஏறியது போன்றவை அவர் மனதை மாற்றியது. தொடர்ந்து 500 பணியாளர்களின் மேல் அதிகாரியாக பணியாற்றும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவிலேயே ஒரு வீடும் வாங்கினார் ராஜு.

"அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்த போதுதான் இந்தியாவிலிருந்து சி.இ.ஓ.-வின் தொலைபேசி அழைப்பு வந்தது. முதலில் நான் மறுத்தாலும் 500 பேரிலிருந்து 5000 பேரை வேலை வாங்கும் பணி, உயர் பதவி என்பதால் ஒத்துக் கொண்டு இந்தியா திரும்பினேன். எனது 12 ஆண்டு பணிகாலத்தில் 14 வீடுகளுக்காவது மாறி இருப்பேன். அப்போதுதான் எதற்காக இந்த வாழ்க்கை என்று சிந்தனை வந்தது."

தகவல் தொழில் நுட்பத்துறையில் பல ஆண்டுகள் பணி செய்தாகிவிட்டது. இனிமேல் இந்த துறையில் செய்வதுக்கு என்ன இருக்கிறது என்று ராஜு சிந்தித்ததன் விளைவு - ராஜினாமா. பலரும் கனவுகாணும் அந்த உயர்பதவியை ராஜு துறந்தார். பின்னர் தனக்கு விருப்பமான இசை துறையில் நுழைந்து ஆல்பம் ஒன்று வெளியிட்டாலும் அது எடுபடவில்லையாம்.

"15 ஆண்டுகள் பிறகும் நான் யார் என்பதை உறுதி செய்யமுடியவில்லை. மனைவி உதவியாக, ஆறுதலாக இருந்ததால் மிகப்பெரிய வேலையை விட்டாலும் குற்ற உணர்வு ஏற்படவில்லை. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் எனது அப்பா குறித்து ஒரு புத்தகத்தை இரண்டே மாதத்தில் எழுதி முடித்தேன். ஒரு மருத்துவராக ஒரு லட்சம் பேரிடம் அவர் கொண்டிருந்த உறவு அப்போதுதான் புரிந்தது. அப்பாவுடன் நான் அதிகமாக இருந்ததில்லை என்பதால் புத்தகம் எழுதிய அந்த கால கட்டத்தில்தான் அப்பாவை புரிந்து கொண்டேன்."

அதன் பின்னர், மீண்டும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவியில் சேரலாம் என்றாலும், ஒரு நிறுவனம் தொடங்கினால் என்ன என்று ராஜு ரிஸ்க் எடுத்ததன் விளைவுதான், ஹலோ கறி துரித உணவக சேவை. ஆனால், ஆரம்பம் அவ்வளவு லாபம் தரவில்லை பெங்களூரு நகரில் தொடங்கிய ஆறு கிளைகளில் நான்கை சில மாதங்களிலேயே மூட வேண்டிவந்தது. மனம் தளராத ராஜுவின் முயற்சி படிப்படியாக லாபத்தை தந்தது.

வேலையை விட்ட பிறகு என்ன செய்வது என்று எந்த திட்டமும் இல்லாமல் இருந்தது. அப்போதுதான், நலன் விரும்பியான சந்தீபை சந்தித்தேன். அவருடன் சேர்ந்து உணவு வணிகத்தில் ஈடுபட முடிவு எடுத்தேன்.

"5 ரூபாய்க்கு இட்லி தயாரித்தால் 50 ரூபாய்க்கு விற்க முடிந்தது. அப்போது புதிதாக யோசித்ததுதான் ஆன்லைன் உணவு வணிகம். ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று நேரடியாக வீடுகள்தோறும் சென்று கொடுத்தால் என்ன என்று யோசித்தது நிஜமாகவே க்ளிக் ஆனது. அதுவே புதிய ஸ்டார்ட் அப் ஆக உருவெடுத்தது.."

இன்று இந்த புதுமையான வணிகத்துக்கு பல வழிகளில் நிதி சேரத் தொடங்கி உள்ளது. அதன் மூலம் இந்த ஹலோ கறி டாட் காம் உலகம் முழுதும் பயணிக்கத் தொடங்கி உள்ளது.

வாழ்க்கையின் வெற்றிக்கு தொடர் லட்சியம் தேவை அதனை சரியாக பயன்படுத்தினால் ஒரு நாள் வெற்றி நிச்சயம் என்பது ராஜுவின் வாதம். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முயன்றதன் பலன் தான் இன்று பூபதியை வெற்றி பெற வைத்திருக்கிறது!

ஹிந்தியில்: அர்விந்த் யாதவ் | தமிழில் ஜெனிட்டா

(கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ். இவர் யுவர்ஸ்டோரி பிராந்திய மொழிகளின் நிர்வாக ஆசிரியர்)