இந்தியன் ஏஞ்சல், நேடிவ் ஏஞ்சல் நெட்வர்க் இடமிருந்து நிதி பெற்றது பாரம்பரிய ஸ்னாக் விற்பனை நிறுவனம் 'nativespecial'

2

இந்திய இனிப்புப் மற்றும் ஸ்நாக்ஸ் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'நேடிவ் ஸ்பெஷல் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் (IAN) மற்றும் மதுரையைச் சேர்ந்த நேடிவ் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க் (NAN) ஆகியவற்றிடமிருந்து வெளியிடப்படாத ஒரு தொகையை நிதியாக பெற்றுள்ளது.

IAN சார்பில் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தையில், ஏஞ்சல் முதலீட்டாளரான நாகராஜ் ப்ரகாசம் தலைமை வகித்து இதை முடித்துள்ளார். IAN-ன் முன்னணி முதலீட்டாளரான கே.ப்ரேம்நாத் வழிகாட்டுதலுக்காக இணைந்துகொள்வார் என்றும் இந்நிறுவனம் தெரிவித்தது.

nativespecial நிறுவனர்கள் (இ) பார்த்திபன்,, (வ)  பாஸ்கரன்
nativespecial நிறுவனர்கள் (இ) பார்த்திபன்,, (வ)  பாஸ்கரன்

'நேடிவ் ஸ்பெஷல்' (nativespecial) தனது ஆய்வக வசதிகளுக்கும் புதிய சந்தையின் விரிவாக்கத்திற்கும் இந்த நிதித்தொகையை பயன்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

”அமெரிக்காவில் வசிக்கும் தென்னிந்திய என்ஆர்ஐ-களிடையே நடைபெற்ற சோதனை விற்பனையில், நேடிவ் ஸ்பெஷலுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்ட இந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய வணிக வாய்ப்பு இருப்பதை உணர்ந்து அங்கு சந்தையை கைப்பற்றி விரிவுப்படுத்தும் முயற்சியில் இயங்கி வருகிறோம்.”

என்று நேடிவ் ஸ்பெஷல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான பாஸ்கரன் வேலுசாமி கூறினார். இந்நிறுவனம் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஸ்கரன் நிறுவினார். இதைத் துவங்குவதற்கு முன் அவர் ஹெச்பி நிறுவனத்தில் எட்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றினார்.

நேடிவ் ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறப்படும் பாரம்பரிய இனிப்பு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறது. தற்போது 42க்கும் மேற்பட்ட பொருட்களையும் 20க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களையும் கொண்டுள்ளது.

7,500 க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், 6,900 க்கும் மேற்பட்ட ஆர்டர்களை இதுவரை டெலிவரி செய்துள்ளது. நேடிவ் ஸ்பெஷல் சரக்கு இருப்பு சார்ந்த வணிக மாதிரியை பின்பற்றி புலம்பெயர்ந்து செல்பவர்களையும், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளையும் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.

நேடிவ் ஸ்பெஷன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதைப் பற்றி பேசிய ஏஞ்சல் முதலீட்டாளர் நாகராஜா ப்ரகாசம், 

“ஒரு பெரிய அமைப்பான IAN, மாநில அமைப்பான NAN போன்றோருடன் இணைந்து ஒரு முதலீடை செய்ததற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இது. குறிப்பாக மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள தொழில்முனைவோரை தேசிய அளவில் உயரித்திட இந்த கூட்டு முயற்சி உதவியுள்ளது.” 

மற்றொரு IAN முதலீட்டாளரான ப்ரேம்நாத் இது பற்றி கூறுகையில், “நேடிவ் ஸ்பெஷல் குறிப்பிட்ட சந்தையை நோக்கி இயங்கி வருகிறது. அவர்களின் தொழில், வளர்ச்சி அடையவும் விரிவுப்படுத்தவும்  தொழில்நுட்ப துணையோடு இந்திய ஸ்னாக் வகைகளுக்கான சந்தையை பெருகிட வாய்ப்புள்ளது,” என்றார். 

நேடிவ் ஏஞ்சல் நெட்வர்கின் முதலீட்டாளர் ஆனந்த் தங்கராஜ் கூறுகையில்,

“அழிந்து வரும் பாரம்பரிய உணவுவகைகளை திரும்பப்பெறவும், அதன் மூலம் ஊரக பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் நேடிவ் ஸ்பெஷல் முயற்சித்து வருகிறது. இந்திய அளவில் இவர்களுக்கான சந்தை வாய்ப்புகள் இருகிறது,” என்றார். 

டிலைட் ஃபுட்ஸ் எனும் ப்ராண்டட் இந்திய உணவுகளுக்கான இ-காமர்ஸ் தளமும் ஃபுட்டிபாபா எனும் இந்திய இனிப்பு வகை சார்ந்த நிறுவனமும் இந்தத் துறையில் இருக்கும் மற்ற போட்டி ஸ்டார்ட் அப்கள் ஆகும். கடந்த வருடம் அக்டோபர் மாதம் டெல்லியைச் சேர்ந்த ஃபுட்டிபாபா நிறுவனம் iProspect இந்தியாவின் சிஇஓ விவேக் பார்கவாவிடமிருந்து 20 லட்சம் ரூபாயை (30,000 டாலர்) உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் ஏஞ்சல் நெட்வர்க்

உலகின் மிகப்பெரிய ஏஞ்சல் குழுமமான இந்தியன் ஏஞ்சல் நெட்வர்க்கில் 450 மேற்பட்ட முதலீட்டாளர்கள் அங்கம் வகிக்கின்றனர். உலகின் 7 இடங்களில் செயல்பட்டு வரும் IAN, 10 நாடுகளை சேர்ந்த முதலீட்டாளார்களை கொண்டுள்ளது. வெற்றி தொழில்முனைவோர்கள், தொழிலதிபர்கள், சிஇஒ’க்கள் என்று பலரும் இதில் முதலீட்டாளர்களாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4000 ஸ்டார்ட்-அப் கள் IAN இல் தங்களது தொழில் ஐடியாவை  பகிர்ந்து நிதி பெற விண்ணப்பிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 55 நிறுவனங்களில் IAN முதலீடு செய்துள்ளது. 

நேடிவ் ஏஞ்சல் நெட்வர்க் குழு, மதுரையில் இருந்து செயல்படும் ஒரு அமைப்பாகும். இவர்கள் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து செயல்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி உதவி அளித்து ஊக்குவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுதும் உள்ள பலர் இதில் முதலீட்டாளார்களாக அங்கம் வகித்து, தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தில் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.