மின் வணிகத்தில் நீங்கள் மிளிர - 'டிவிக்ஸ்டர்'

1

நமது நாட்டில் மின் வணிகம் வந்த பின்பு, பொருட்களை வாங்குவது என்பது முன்பு இல்லாததை விட இப்போது மிகவும் எளிதாகி விட்டது. இந்த வளர்ச்சி சிறிய மற்றும் பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. அவர்கள், தங்கள் எல்லைகளை தாண்டி விற்பனையை பெருக்க, மின் வணிகம் அவர்களுக்கு கதவுகளை திறந்துள்ளது.

நர்மதா சோனிக்கு 31 வயது. யுஎஸ்ஏ வில் "வேல்ஸ் பார்கோ" நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது இந்த வணிக போக்கினை, தனது சக பணியாளர் ப்ரியா ராமகிஷ்ணனோடு சேர்ந்து கூர்ந்து கவனித்து வந்தார். எனவே இந்தியா வந்து இங்கு சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரத்யேகமாக ஒரு தளம் அமைத்து, அவர்களை, தற்போதைய வணிக சூழலுக்கு ஏற்றவாறு மாற்ற நினைத்தார்.

அப்படி தான் "டிவிக்ஸ்டர்" (Twikster) பிறந்தது. அதில் சிறிய மற்றும் சற்று பெரிய வணிகர்கள், தங்கள் பொருட்களை, தங்களுக்கு ஏற்ற முறையில், ஏற்ற விலையில், இணையத்தில் விற்க இயலும். அதற்கான தளத்தை, இந்நிறுவனம் அமைத்து தருகின்றது.

360' கோண அணுகுமுறை :

டிவிக்ஸ்டர் நிறுவனத்தின் 360 கோண அணுகுமுறை காரணமாக, மின் வணிகத்தில் நுழைவதோடு நில்லாமல், அதை வளர்க்க தேவையான கருவிகளும் நமக்கு கிடைகின்றன. மின் வணிகத்தின் ஆதி முதல் அந்தம் வரை அதாவது, ஆன்லைன் ஸ்டோர் நிறுவுவது, பணப் பரிவர்த்தனைக்கு தேவையான நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்வது, மின் வணிகத்தில் தன் பொருளை சந்தை படுத்துவது என, ஒரு வணிகருக்கு தேவையான அனைத்த சேவைகளையும், இந்நிறுவனம் வழங்குகிறது.

இவர்களை போன்று சந்தையில் "மேக்னிடோ", "ஷாப்பிஃபை","பிரஸ்டாஷாப்" என போட்டியாளர்கள் இருந்தாலும், தங்களின் விலை பட்டியல் வணிகருக்கு ஏற்ற வகையில் இருப்பது தங்கள் தனித்தன்மை என நர்மதா கூறுகிறார். இந்தியாவில் உள்ள மின் வணிகத்தை செயல்படுத்தும் தளங்களில், வணிகர்கள் தங்களுக்கு ஏற்ற விலை பட்டியலை தேர்வு செய்யும் வசதி இல்லை. மிகமுக்கியமான மிக அத்யாவசியமான சேவையை பெறுவதற்கு, வணிகர்கள் விலை அதிகமுள்ள திட்டத்திற்கு மாற வேண்டியுள்ளது. ஒரு வருடத்திற்கு 64000 முதல்,84000 வரை அவற்றின் விலையுள்ளன. அப்படி ஒரு வணிக மாதிரியை சேர்ப்பது, மின் வணிகத்தில் அனைவரும் சமமாக போட்டியிடும் வாய்ப்பை தடுப்பதாக அமையும், என்கிறார் அவர்.

தற்போது இந்நிறுவனம், முன்று விதமான விலை மாதிரிகளை, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றது.

"எங்களது அடிப்படைத் திட்டமான "டிவிக்ஸ்டர்- கோ" வில் யார் வேண்டுமானாலும், வாழ்நாள் இலவச சேவையை பெற இயலும். இதற்கு மாத சந்தா கிடையாது, அதோடு அந்த ஆன்லைன் ஸ்டோர் தொலைபேசிகளில் இயங்குவதற்கு ஏற்ப எளிமையாக அமையும். அங்கிருந்து, வாடிக்கையாளர், தங்களால் இயன்ற போது, தங்களுக்கு தேவைப்படும்போது, சில சேவைகளுக்கு கட்டணம் செலுத்தி, அவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த வணிக மாதிரி, வாடிக்கையாளர்க்கு தேவையானவற்றை அளிப்பதோடு, மாத சந்தாவில் இருந்து விடுதலையும் தருகின்றது என்கிறார் நர்மதா.

டிவிக்ஸ்டர் நிறுவனம், "ப்ரிஃபர்ட்", மற்றும் "ப்ரோ" என மேலும் இரண்டு திட்டங்களை அளிக்கின்றது. அவற்றில், தங்களின் ஆன்லைன் ஸ்டோரை நிறுவ ஒரு முறை கட்டணம் மற்றும், வருடா வருடம், அவற்றின் பராமரிப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி, தங்களுக்கு தேவையான சேவைகளை பெற இயலும்.

Narmadha Soni
Narmadha Soni

டிசம்பர் 2013ல், டிவிக்ஸ்டர் நிறுவனதின் உருவாக்கத்தில் ஈடுபட்ட நர்மதா, அதன் பீட்டா பதிப்பை, மே 2014ல், வெளியிட்டார். விரைவில், சிக்கலான சந்தையை உடைத்து உள்புகும் வழியை அவர் கண்டறிந்து, அதற்கான விலை மாதிரியை, மே 2015தில் அவர் உருவாக்கினார். மேலும் திருத்தி அமைக்கப்பட்ட விலைப்பட்டியலோடு, மின் வணிகத்திற்கு தேவையான அணைத்து சேவைகளும் கிடைக்கும் தளமாக டிவிக்ஸ்டர் உருவெடுத்தது.

தற்போது, நாங்கள் போக்குவரத்து நிறுவனங்கள், பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள், பல்வழியில் நமது ஆர்டர்களை நிறைவேற்றும், "யுனிகாமர்ஸ்" நிறுவனம், சந்தையாக செயல் படும் "இன்ஸ்டாமோஜோ" நிறுவனத்தோடும், கூட்டுவைத்துள்ளோம் என்கிறார் நர்மதா.

சவால்கள்

தனது சேமிப்பில் இருந்து, நிறுவனத்தை நர்மதா துவங்கியபோது, பிரியா நிறுவனத்தின் ஆரம்பக்கட்டத்தில் இணைந்தார். முதலீடு ஒரு சவாலாக இல்லை. ஆனால் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை தலைமை ஏற்று நடத்த தகுதியான ஒருவர் தேவைப்பட்டார். மேலும் இங்கு மக்களின் மனப்போக்கை அறிந்து, அதற்கு ஏற்ப நடப்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அப்போதுதான், மிகப்பெரிய தேடலுக்கு பின் "வினய் சைனி" யை நாங்கள் சந்தித்தோம். தற்போது அவர் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், சிடிஓ(CTO) வாகவும் உள்ளார். அமெரிக்காவில் நான் முற்றும் வேறு ஒரு கலாச்சாரத்தில் பணிபுரிந்தேன். இங்கு ஏன் மக்கள் கொடுத்த வேலைகளை தாமதிக்கின்றனர், மற்றும் கூறியது போல் செய்வது இல்லை என்பதை அறிவதே எனக்கு சவாலாக இருந்தது என்று, இந்திய தொழில் சூழலை பற்றி கூறுகையில் நர்மதா குறிப்பிடுகிறார்.

Vinay saini - CTO twikster
Vinay saini - CTO twikster

தற்போது இந்நிறுவனம் 8 பேர் கொண்ட குழுவாக பெங்களுருவில் இயங்கி வருகின்றது. 6 மாதங்களில், நிறுவனத்தை பெரிதுபடுத்த அவர்கள் முதலீடு திரட்ட திட்டமிட்டுள்ளனர். டெல்லி, ஜெய்பூர், ஹரித்வார், பெங்களூர், மைசூரில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிறுவனம் தற்போது மற்ற நகரங்களுக்கும் விரிவாக்க பணிகளை துவங்கி உள்ளனர்.

கைவினை, ஆடை, மற்றும் சில்லறை வணிகமாக, கைவினை பொருட்களை தயாரிப்போர் தற்போது இவர்கள் வாடிக்கையாளராக உள்ளனர். "ஆர்ட்ஸ்ப்பேஸ்" என்ற, ஓவியர்களுக்கான மின் சந்தையை இந்நிறுவனம் தற்போது துவக்கி வைத்துள்ளனர். அடுத்த வருடத்தில், அத்தளத்திற்கு தேவையான அனைத்து சேவைகளிலும் தங்கள் கவனம் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

மின் வணிக (இ-காம்) வளர்ச்சி

பிடபில்யுசி வெளியிட்ட அறிக்கையின் படி, மின் வணிகத்தின் வளர்ச்சி இந்தியாவில், 2009ல் இருந்து 34% ஆக இருந்து, 2015ல், 16.4 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. தற்போது 70% சந்தை பங்கை, மின்-பயணம் ஆக்கிரமித்துள்ளது. சில்லறை மற்றும் மின் வணிக சந்தை என்பது கடந்த 5 வருடங்களில், 56% வளர்ச்சி பெற்று மிக வேகமாக வளரும் துறையாக மாறியுள்ளது.

பல சிறிய மற்றும் பெரிய வணிகர்கள் மின் வணிகத்தில் நுழைவதால், டிவிக்ஸ்டர் போன்ற நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும் போட்டி அதிகரிக்கையில், விலை பட்டியல் முக்கிய முடிவெடுக்கும் காரணியாக அமையும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். "ஆர்ட்பீட் பெயின்டிங்ஸ்", "கிலி ஷாப்", மற்றும் "கேண்டி ஷெல்வ்ஸ்" ஆகிய நிறுவனங்கள் டிவிக்ஸ்டரோடு இணைந்து தங்கள் மின் வணிக தளங்களை உருவாக்கி உள்ளனர்.

இணையதள முகவரி: Twikster