ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள்!

0

கடந்த 19 ஆண்டுகளாக 3,000 படுக்கைகளை கொண்ட  “வாக்ஹார்ட் மருத்துவமனை(Wockhardt Hospitals) இரண்டாவது பெரிய மருத்துவமனையாக இருந்து வந்தது. அதோடு பெரிய மருத்துவமனை 7,000 படுக்கைகள் கொண்டதாக இருந்தது. தற்போது ஒரு படுக்கைக்கு 1,85,000 டாலர் செலவிடப்படுகிறது. இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று உள்கட்டமைப்பு வளர்ச்சியாகும்” என்று பெங்களூருவில் "யுனிடஸ் சீட் ஃபண்ட்" (Unitus Seed Fund ) நடத்திய டிகோடிங் ஹெல்த்கேர் மாநாட்டில் மெட்வெல் வென்ச்சர்ஸின் (Medwell Ventures) விஷால் பாலி (Vishal Bali ) கூறினார்.

நூறு கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மருத்துவ நல சந்தை 17 சதவீதமாக இருக்கிறது. நாட்டில் வேகமான வளர்ச்சி காணும் துறைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஐ.பி.இ.எப் அறிக்கைப்படி மருத்துவ நலத்துறை 2017ல் 160 பில்லியன் டாலர் மதிப்பிலானதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷால் பாலி,மெட்வெல் வென்சர்ஸ்
விஷால் பாலி,மெட்வெல் வென்சர்ஸ்

வளர்ச்சித்துறை- தடைகள் அதிகம்

இந்திய அரசின் சுகாதார நலத்துறை 2016 நிதியாண்டில் புற்றுநோய் மற்றும் காசநோய் சிகிச்சைக்கு 50 தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. தனிநபர் ஒருவருக்கான செலவு 100 டாலருக்கும் குறைவாக உள்ளது, 30% என அதிகரித்து வருகிறது.

சர்வதேச அளவில் தடுப்பு மருத்துவம் மற்றும் நலப்பிரிவை நோக்கி மாற்றங்கள் நிகழந்து கொண்டிருக்கிறது. சர்வதேச மருத்துவ நிறுவனங்கள் அணிகணிணிகள் (wearables), உயிரி சாதனங்கள் மற்றும் ஃபிட்னஸ் பிரிவில் அடியெடுத்து கொண்டிருக்கின்றனர். தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனமும் இந்த துறையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இந்தியாவில் தடுப்பு மருத்துவம் மற்றும் நலப்பிரிவு ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. 490 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது.

”ஆனால் அணுகும் வசதி மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டணம் ஆகிய சமனே இந்த துறையை இயக்குகிறது” என்கிறார் விஷால். வளர்ச்சி போக்கு இருந்தாலும் தேவைக்கும்,சேவைக்கும் இடையே இடைவெளி இருக்கிறது. உள்கட்டமைப்பு உருவாக்கம் தான் பெரிய தடையாக இருக்கிறது. இந்த இடைவெளியை சுட்டிக்காட்டும் விஷால், மருத்துவமனைக்கு வெளியே தான் நாம் பண முதலீடு, முயற்சி, புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஈடுபடுத்த வேண்டும் என்கிறார்.

மருத்துவமனை படுக்கைகளில் இருந்து செயலிகளை நோக்கி மாற்றம் நிகழ்வதாக அவர் சொல்கிறார்.” இது மருத்துவ துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக மேலும் எத்தனை படுக்கைகளை உருவாக்க முடியும் எனபதில் இருந்து தற்போதுள்ள படுக்கைகளை கொண்டு எந்த அளவு செயல்திறனை அளிக்க முடியும் என்பதாக உரையாடல் மாறியிருக்கிறது” என்கிறார் விஷால்.

மருத்துவ நலனின் நான்கு தூண்கள்

கண்டறிவது (Predictive) பங்கேற்பது (Participatory) தடுப்பது (Preventive) மற்றும் துல்லியமானது (Precise) ஆகிய நான்கு அம்சங்களே மருத்துவ நலத்துறையின் முக்கிய தூண்களாக கருதப்படுகின்றன. இவற்றில் கண்டறிவது பிரிவில் தான் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜினோமிக்சின் செலவும் முன்பை விட குறைந்திருக்கிறது. இனோமிக் ஆய்வுக்கு பல சாதனங்கள் உள்ளன.

உலக அளவில் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட 23 சதவீத நோயாளிகளுக்கான சிகிச்சையில் தான் 72 சதவீத தொகை செலவிடப்படுகிறது என்கிறார் விஷால். இதன் பொருள் மருத்துவ நல தொகையில் 90 சதவீதத்தை தீவிர நோய் சிகிச்சைக்கும் 10 சதவீதத்தை வருமுன் தடுப்பிற்கும் செலவிடுகிறோம்.

”தனிப்பட்ட சாதனங்கள் மற்றும் மருத்துவ நல செயலிகளில் நிறைய முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மேலும் பங்கேற்பு தற்போது 10 மில்லியனாக உள்ள அணி கணிணிகளை மேலும் அதிகரிக்கும். மருத்துவ நலத்துறையில் ஏற்பட்டு வரும் புதுமை காரணமாக பொதுவான செயல்பாடு குறைந்து வருகிறது” என்கிறார் அவர்.

செயலி வழி சிகிச்சை

2014 ல் 103 மருத்துவ செயலிகள் எப்.டி.ஏவால் அங்கீகரிக்கப்பட்டன. இந்தியாவில் செயலி உருவாக்கம் அதிகரித்திருப்பதால் 2015 ல் இந்த எண்ணிக்கை 160 ஆக உயர உள்ளது. இதனால் இனி மருத்துவர்கள் மாத்திரைகளுடன் செயலிகளையும் பரிந்துரைக்கலாம் என்கிறார் விஷால். செயலிகள் மருத்துவ துறையில் மாற்றத்தை உண்டாக்கி வருவதால் இந்தியாவில் மருத்துவ நலன் சார்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இன்று நாம் காணும் மருத்துவமுறை பழமையானதாக மாறிவிடும் என்கின்றனர். அதிக அளவில் மற்றும் அதிக தரத்தில் சீராக திரட்டப்படும் தரவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது மருத்துவ நலத்துறைக்கு தரவுகளை இன்னும் சிறப்பாக அலசி ஆராயும் முறையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் பார்கின்சன்ஸ் நோய் தொடர்பான ஆய்வில் மைக்கேல் ஜே பாக்ஸ் அறக்கட்டளையுடன் இண்டெல் இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அணி கணிணிகள் மூலம் திரட்டப்படும் தகவல்களை கொண்டு நோயின் போக்கை கண்டறிவதில் இந்த ஆய்வு கவனம் செலுத்துகிறது. மருத்துவத்துறையில் உள்ள எல்லா சாதனங்களையும் தரவுகளை சேகரிக்கும் சாதனமாக கருதி நோய்கூறு கண்டறிதலை மேம்படுத்த பயன்படுத்திக்கொள்ளலாம்.

”மொபைல் போன்கள் மருத்துவ துறையின் நுழைவு வாயிலாக ஆகிக்கொண்டிருக்கிறது என்கிறார் விஷால். எனினும் இந்த துறையில் பங்கேற்புத்தன்மை இல்லாதது பெரும் குறை என்கிறார். இதில் பங்கேற்புத்தன்மையே முக்கியம் என்றும் கூறுகிறார். இந்த தன்மை நுகர்வோருக்கு மருத்துவ சேவைகள் எப்படி அளிக்கப்படுகின்றன என்பதை புரிய வைக்கும்.

இந்த துறை 2017 ல் 160 பில்லியன் டாலரையும் 2020 ல் 280 பில்லியன் டாலரையும் தொட உள்ளது. இந்தியாவில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பில் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

தொலை மருத்துவத்தில் புதிய நுட்பங்கள் ,மருத்துவ துறையில் பிக்டேட்டா, எம்-ஹெல்த் மற்றும் அணி கணிணிகள் பிரபலமாகி வருகின்றன. புதிய நிறுவனங்களுக்கு இந்த சந்தை வாய்ப்பாக இருப்பதோடு ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பாக உள்ளது. இந்த துறை மீதான கவனமும் அதிகரித்துள்ளதால் முதலீடுகளும் அதிகரித்து மேலும் பல மாற்றங்கள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.