போக்குவரத்து சேவை வணிகங்களை இணைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த ’Mera Transport'

0

வீட்டிற்கான லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடாகட்டும் அல்லது நிறுவனங்களுக்கான போக்குவரத்தாகட்டும் லாஜிஸ்டிக்ஸ் என்பது அனைவருக்குமே கடினமான விஷயம்தான். சரியான வெண்டாரை கண்டறிவது முதல் சரியான விலையை நிர்ணயிப்பது வரை லாஜிஸ்டிக்ஸ் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் சிக்கல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இந்த சிக்கலான வழியைக் கண்டறிந்தனர் 40 வயதான ரூபா வெங்கட் மற்றும் 42 வயதான அஜித் வெங்கடேஷ் ராமசந்திரன்.

இவர்கள் இருவரும் 2002-ம் ஆண்டு இடம்பெயர்தல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான க்ளோபல் மூவிங் அண்ட் ஸ்டோரேஜ் கம்பெனியைத் துவங்கினர். இந்நிறுவனம் மெட்ரோக்கள் அல்லாத பகுதியிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ட்ரக்குகள் தேவைப்படுகிற பேக்கிங் மற்றும் மூவிங் சேவைகளுக்கான மிகப்பெரிய ஒப்பந்தத்தில் நுழைந்தது. ஏராளமான விநியோகம் இருந்தாலும் சரியான வெண்டாரை கண்டறிவது எவ்வளவு கடினம் என்பதை இவர்கள் உணர்ந்தனர்.

தொழில்நுட்பத்தின் தேவை

அஜித் விவரிக்கையில், 

“நாங்கள் இந்த திட்டம் குறித்தும் இந்த வணிகத்தின் சாத்தியக்கூறுகள் குறித்தும் சில நாட்களாகவே விவாதித்து வந்தோம். சரியான தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டால் வளர்ச்சி, சாத்தியக்கூறு, திறன் ஆகியவை மேம்படும் என்று கருதினோம். கிட்டத்தட்ட அதே நேரத்தில் சஞ்சய் மற்றும் ஹரி ஷர்மாவும் தொழில்முனைவு குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தனர். இந்த திட்டம் அவர்களுக்கும் பிடித்திருந்ததால் மேரா ட்ரான்ஸ்போர்ட் துவங்க தீர்மானித்தோம்.”

சரியான நேரத்தில் டெலிவரி, திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவையே லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் முக்கியமானதாகும். இவர்களது மேரா ட்ரான்ஸ்போர்ட் தொழில்நுட்பம் சார்ந்த தளம். இது அனைத்து பங்குதாரர்களையும் ட்ரக்கிங் சுற்றுச்சூழலில் இணைக்கிறது. தேவை மற்றும் விநியோக தரப்பு இரண்டிற்கும் சேவை வழங்குகிறது.

தங்களது லாஜிஸ்டிக்ஸை நிர்வகித்தல், கண்காணித்தல் மற்றும் அனுப்பப்படும் சரக்குகளை ஆய்வு செய்தல் போன்றவற்றை தொழில்நுட்பத்தால் ஒருங்கிணைந்த ஆர்டர் மேலாண்மை தளங்கள், செயலிகள் மற்றும் டேட்டா அனாலிடிக்ஸ் வாயிலாக இக்குழுவினர் மேற்கொண்டு க்ளையண்டுகளுடன் பணிபுரிகின்றனர்.

தேவையிருப்போர் பார்வையில் படும் விதத்தில் சரக்கு போக்குவரத்து சேவையளிப்போர்களும் இந்த தளத்தில் பட்டியலிட்டுள்ளனர்.

குழு

எனினும் தொழில்நுட்பம் ஊடுருவதற்கும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் அவகாசம் எடுத்துக்கொண்டது.

”பயனர்களின் எதிர்வினை நேர்மறையாகவும் உற்சாகமளிக்கும் விதத்திலும் இருந்தது. ட்ரக்கர்கள், ஓட்டுநர்கள், தரகர்கள் போன்றோர் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதையும் எளிதாக பயன்படுத்துவதையும் பார்க்கையில் ஒழுங்கற்ற சந்தையும் தொழில்நுட்பத்தின் தலையீட்டை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது என்றே தோன்றுகிறது,” என்றார் ரூபா.

46 பேர் அடங்கிய குழுவாக மேரா ட்ரான்ஸ்போர்ட் செயல்படுகிறது. மேரா ட்ரான்ஸ்போர்ட் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் மாதிரியை (Asset-light model) பின்பற்றி ஒவ்வொரு ட்ரக்கிற்கும் 10 சதவீத லாபம் வசூலிக்கிறது. ஜோதி லேப்ஸ் லிமிடெட், கோத்ரெஜ், ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட் போன்ற நிறுவனங்களுடன் பணிபுரிவதாக இக்குழு தெரிவிக்கிறது.

இந்நிறுவனம் வருவாய் குறித்த தகவல்களை வெளியிடவில்லை எனினும் இவர்களது மொத்த வருவாயில் பெரிய கார்ப்பரேட்களிடமிருந்தே கிட்டத்தட்ட 50 சதவீத வருவாய் ஈட்டப்படுவதாக குழுவினர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டபோது சீட் நிதி உயர்த்தியுள்ளனர். சமீபத்தில் பெயர் வெளியிடப்படாத முதலீட்டாளர்களிடமிருந்து 10 கோடி ரூபாய் நிதி உயர்த்தியுள்ளது மேரா ட்ரான்ஸ்போர்ட்.

வளரந்துவரும் சந்தை

லாஜிஸ்டிக்ஸ் சார்ந்த ஸ்டார்ட் அப்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் புதிய நிறுவனங்களும் சந்தையில் தொடர்ந்து நுழைந்தவண்ணம் இருக்கிறது. மின் வணிக உலகத்தின் வளர்ச்சியைப் பொருத்து லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சியும் அமையும்.

லாஜிஸ்டிக்ஸ் மார்கெட் இன் இந்தியா 2015-2020 தகவல்படி சந்தை ஆய்வாளர் நொவோனஸ் (Novonous) நடத்திய ஆய்வில் நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் துறை 300 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருப்பதாகவும் 2020-ல் 12.17 சதவீத CAGR வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-17-ம் ஆண்டில் சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் 5,000 கிலோமீட்டர் வரை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட திட்டமிட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 7.69 பில்லியன் அமெரிக்க டாலர்.

தனித்துவம்

Rivigo நிறுவனம் 115 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது. இந்த வருடம் மேலும் அதிக தொகையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. Blackbuck ஏற்கெனவே 100 மில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ட்ரக்கிங் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்திவருகிறது. நகரத்திற்குள் டெலிவரியை நிர்வகித்து கிடங்குகளை கையாளவதை சேவையாக வழங்கும் நிறுவனமான Delhivery இந்தப் பகுதியில் செயல்படுகிறது.

அத்துடன் GoBolt, Truckky போன்ற புதிய நிறுவனங்களும் இந்தப் பிரிவில் செயல்பட்டு வருகிறது. Blume Ventures பின்னணியில் இயங்கும் இயந்தர கற்றல் சார்ந்த தளமான Locus, லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்குவோர் சரியான இடத்தில் சரியான நேரத்தில் டெலிவர் செய்ய உதவுகிறது.

எனினும் ஒரு நிலையான, நெகிழ்திறன் கொண்ட வளர்ச்சியடையக்கூடிய தொழில்நுட்ப தளத்தை உருவாக்க விரும்புகிறது மேரா ட்ரான்ஸ்போர்ட். இது சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து பங்குதாரர்கள் மீதும் கவனம் செலுத்தும். லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னர்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்துவதிலும் மைக்ரோ ஃப்ரண்டென்ஸ் உருவாக்கவும் திட்டமிடுகிறது.

”லாஜிஸ்டிக்ஸ் பகுதியை விரைந்து செயல்படும் மேலாண்மை வழிமுறைகளைக் கொண்டும் அறிவார்ந்த தீர்வுகளைக் கொண்டும் ஆதரவளிக்க விரும்புகிறோம். இதனால் வாடிக்கையாளர்களும் வெண்டார்களும் விரைவாக தீர்மானிக்க உதவும்.” என்றார் ரூபா.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்