தஞ்சையின் ருசியை மும்பையில் மணக்கச் செய்த கீதாஞ்சலி!

0

சில வருடங்களுக்கு முன், கீதாஞ்சலியின் தாயார் திடீரென இறந்துவிட்டார். அதன் பிறகு தான், வாழ்க்கையில் நடப்பவை யாவும் எதிர்ப்பாராதவை என்று புரிந்து கொண்டார் கீதாஞ்சாலி. அன்றிலிருந்து தன்னை மகிழ்ச்சியாக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

கீதாஞ்சலி, இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் பல்கலைகழகத்தில், இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் மற்றும் சேன்ஜ் மேனேஜ்மென்ட் (International Marketing and change Management) துறையில் எம்.பி.ஏ. படித்தவர். படித்து முடித்தவுடன், லாபகரமான விளம்பரத் துறையில் ஐந்து வருடம் பணி புரிந்தார். ஆனால் அவருக்குத் தான் செய்த பணியில் திருப்தி ஏற்படவில்லை. அதனால், தான் அதிகம் நாட்டம் கொண்ட உணவை மையமாக வைத்து தொழில் செய்ய யோசிக்கத் தொடங்கினார் கீதாஞ்சலி.

அவர் எம்.பி.ஏ படித்த காலத்தில், இங்கிலாந்தில் உள்ள ஒரு MC.Donald's கடையில், பார்ட் டைம் வேலை செய்து வந்தார். அந்த அனுபவம், அவருக்கு குய்க் சர்வீஸ் ரெஸ்டாரன்ட் (Quick service restaurant)- இல் பணியை பற்றிய செயல்பாடுகளையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அந்தத் துறையில் தொழில் புரிவதே தனது விருப்பம் என்பதை உணர்ந்து கொண்டார் கீதாஞ்சலி. அதே போல, மக்களை ஒன்று கூடச் செய்து, அவர்களை மகிழ்விக்கக் கூடிய செயலை செய்யவும் ஐடியா தீட்டினார்.

தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, கீதாஞ்சலி, "தஞ்சாவூர் பை அன்கி" என்ற பெயரில், தஞ்சாவூர் உணவு வகைகளை ஸ்பெஷலாகக் கொண்ட ஒரு சைவ உணவகத்தைத் தொடங்கினார். டிசம்பர் 2014-இல், இந்த உணவகத்தை மும்பையில் ஆரம்பித்தார்.

கீதாஞ்சலி ராம்ஜி
கீதாஞ்சலி ராம்ஜி

தொழிலில் தஞ்சாவூர் வாசம்

"என் இங்கிலாந்து தோழி கிம்பெர்லே, என் பெயரை உச்சரிக்க முடியாமல், என்னை 'அன்கி' என அழைப்பார். 'தஞ்சாவூர்' என் பாரம்பரியத்தைக் குறிக்கும். 'அன்கி' எனும் பெயர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும். தமிழ் பிராமண கல்யாணத்தில் அல்லது தென்னிந்திய வீடுகளில் கிடைக்கும் உணவையே, நாங்கள் எங்கள் உணவகத்தில் அளிக்கிறோம்" என்றார், கீதாஞ்சலி.

வீட்டில் அம்மா, பாட்டி, சித்தி என அனைவருடன் வளர்ந்த கீதாஞ்சலி, அவர்களைப் போலவே சமையல் செய்ய 15 வயதிலேயே கற்றுக்கொண்டார்.

கீதாஞ்சலி, மூன்று ஊழியர்களைக் கொண்டு இந்த உணவகத்தைத் தொடங்கினார். பிரியா ஷின்டே மற்றும் நம்ராடா பவார் என்பவர்களை வாடிக்கையாளர் சேவை செய்பவர்களாகவும், சமையலில் 20 வருடம் அனுபவம் கொண்ட கிஷோர் ஜதாவ் என்பவரை தலைமை சமையல்காரராகவும் பணியில் வைத்து கொண்டார். இந்த உணவகத்தை நிறுவ, அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெரிதும் பக்கபலமாய் இருந்ததாகக் கூறினார்.

ஒரு பெண்ணாக எதிர்கொள்ளும் சவால்

உணவைக் கொண்டு சேர்க்க வேண்டிய சரியான இடம் பற்றி தெரிந்து கொள்ளுதல், ஆர்டர் செய்தவுடன் உணவு கிடைக்கமாறு பார்த்துக்கொள்ளுதல், வரவு செலவு மற்றும் வரி கணக்கு பார்த்தல், தேவையான பொருட்கள் வாங்குதல், நல்ல சூழலை மேற்கொள்ளுதல் என பல வேலைகள் தனக்கு இருந்தாலும், அவற்றை எல்லாம் விட, பெரும்பாலும் ஆண்கள் ஈடுபடும் துறையில், ஒரு பெண்ணாக நான் ஈடுப்பட்டுள்ளது தான் எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது என்றார்.

பொதுவாக உணவகங்களில் ஆண்கள்தான் நிறுவனர்களாய் இருப்பர். முதல் முறை தொழில் முனையும் ஒரு பெண்ணாகவும், பங்குதாரர்களில் கூட ஆண்கள் துணை இல்லாதவராய், ஊழியர்களை வேலையில் ஈடுபட செய்து, தொழில் நடத்துவது, மிக பெரிய சவாலே. ஒரு பெண் என்பதால் என்னிடம் வியாபாரம் செய்ய யோசிக்கின்றனர், ஆனால் அந்த நிலைமை இன்று மாறிக் கொண்டுவருகிறது என்கிறார் கீதாஞ்சலி.

உணவகத்திற்கு வருபவர்கள் மற்றும் டெலிவரி ஆர்டர் செய்வோர்கள், 60 : 40 எனும் விகிதத்தில் உள்ளனர். இதுவே, மும்பை கோலாபா நகரில் உள்ள தஞ்சாவூர் பை அன்கி உணவகத்தின் தற்போதிய வருவாய் நிலவரமும் ஆகும். ஆர்டரை உடனுக்குடன் டெலிவரி செய்ய ஸ்விகி (Swiggy) -யுடன்  இணைந்துள்ளதாகக் கூறினார்.

பருவகாலத்திற்கு ஏற்ப தேவைப்படும் உணவுவகைகளுக்கும், வகைவகையான உணவுவகைகளுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டது, உணவக தொழில் செய்துவருவதில் நான் கற்ற ஒரு தந்திரமாகும்.

உணவகத்திற்கு வந்து செல்வோருக்கும், டெலிவரி ஆர்டர் செய்வோர்க்கும் இடையே சமநிலை மேற்கொள்ளுதலே, உணவக தொழிலில் தேவையானது என்கிறார் கீதாஞ்சலி.

வளர்ந்து வரும் உணவகங்கள்

உணவிற்கும், தொழில்நுட்பதிற்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தாலும், உணவகங்களும் தொழில்நுட்பம் போல் அதிவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேசிய உணவகங்கள் சங்கத்தின் அறிக்கைப்படி, 'உணவுகளை ருசிப்போம்' என ஆர்வம் தூண்டும் போக்கு, இந்தியாவில் 48 பில்லியன் டாலர்கள் காணும் தொழில்துறையை உருவாக்கியுள்ளது.

அதில் 70% குய்க் சர்வீஸ் உணவகங்களும் (QSRs), 12% பார்ஸ், கிளப்ஸ் மற்றும் பப்ஸ் ஆகியவையும், 8% கெபே (Cafes) மற்றும் 10% காத்திருப்பு அறைகளாவும் உணவகங்களாவும் இருக்கிறது என மேலும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

உணவுகளில் ஊரின் ருசி

தஞ்சாவூர் பை அன்கி, இதுவரை தனது வருவாயாய் 4 மில்லியன் ரூபாயையும், தினமும் 100 உணவு வகைகளையும் செய்கிறது. முதல் வருடம் தனது தொழிலை வளர்ப்பதில் ஈடுப்பட்டது. இந்த வருடம் மார்க்கெட்டிங்-கில் கவனம் செலுத்தியுள்ளது.

வருங்காலத்தில், மக்கள் அவர்களது ஊரின் ருசியை உணவில் உணருமாறு, தனிப்பட்ட ஊர்களின் உணவு வகைகள் கொண்ட உணவகங்களை உருவாக்கப் போவதாக கீதாஞ்சலி, தன் வருங்காலக் கனவைப் பகிர்ந்து கொள்கிறார். மேலும், அவர் உணவகத்தை விரிவடைய செய்ய, மும்பையில் இன்னும் மூன்று உணவகங்களும், சிங்கபூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் உணவகங்கள் திறக்கவும் உள்ளார். அதற்காக முதலீட்டாளர்களை எதிர்நோக்கி உள்ளார்.

"குடும்பமாக பார்த்துக்கொள்வதும், பல தலைமுறைகளாய், தஞ்சாவூர் பகுதிக்கு சொந்தமான உணவு வகைகளின் ருசியை, ரகசியமாய் பாதுகாத்து வருவதும் தான், போட்டியில் எங்களைச் சிறப்புடன் தனித்து இருக்கச் செய்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கென தனி சுவை உள்ளது. அதை மக்களுக்கு உணர்த்தி மகிழ்விப்பதே எங்கள் குறிக்கோள். அதன் ஆரம்பமாய்தான், தஞ்சாவூரின் சுவை கொண்ட, ஆரோக்கியமான உணவு வகைகளை, "தஞ்சாவூர் பை அன்கி" மூலம் வழங்கிறோம், என்றார் கீதாஞ்சலி ராம்ஜி.

"தஞ்சாவூர்-பை-அன்கி"யின்  இணையதளம் 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்