பொது இடங்களில் தாய்ப்பால் அளிப்பதில் தவறில்லை: கேரள பத்திரிக்கை வெளியிட்ட அட்டைப்படத்தால் சர்ச்சை!

5

கிரிஹலக்ஷ்மி என்னும் கேரள பத்திரிக்கை, பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது இயல்பு மற்றும் இயற்கையான ஒன்று என்பதை பிரதிபலிக்கும் வகையில் தங்களது மார்ச் மாத இதழை வெளியிட்டுள்ளது. இதழின் முன் அட்டையில் மாடல் ஜில்லு ஜோசஃப் ஓர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போல் போஸ் கொடுத்தும்; ’தாய்மார்களே கேரளாவிடம் சொல்லுங்கள்... எங்களை உற்றுப்பார்க்க வேண்டாம் – நாங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்...’ என்ற தலைப்பும் எழுதப்பட்டு இருந்தது.

பல்வேறு இடங்களில் பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பதை பாலியல் தன்மையுடனே பார்க்கப்படுகிறது, பொதுவாக பெண்கள் உடல் உறுப்புகளும் அவ்வாறு தான் பார்க்கிறது. ஆனால் இந்த அட்டையில் போஸ் கொடுத்து இருக்கும் கவிஞர் மற்றும் மாடல் ஆனா ஜில்லு ஜோசஃப் மிக உறுதியாக அழகிய புன்னகையுடன் குழந்தைக்கு பாலூட்டுகிறார்.

அந்த முதல் பக்க கட்டுரையில் பல தாய்மார்கள் பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது பற்றிய சிரமத்தை விளக்கிக் கூறியுள்ளனர். இந்த கட்டுரை மற்றும் கேம்பெயின், முகநூலில் அம்ரிதா என்னும் தாய் பகிர்ந்த அனுபவத்தில் இருந்து தழுவி எழுத்தப்பட்டது. 23 வயதான அம்ரிதாவின் கணவர் தன் மனைவி பொது இடத்தில் தாய்பால் கொடுக்கும் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டார். அதுவே இந்த கட்டுரைக்கு முக்கியக் காரணம். அம்ரிதா 23, இதழுக்கு அளித்த பெட்டியில்,

 “நான் மருத்துவமனையில் என் குழந்தைக்கு பாலூட்டிய போது, பலர் மறைந்து கொடுக்கச் சொன்னார்கள். அதற்கும் மேல் மார்பகத்தை மறைக்காமல் தாய்பால் கொடுத்தால் சீக்கிரம் பால் தீர்ந்துவிடும் எனவும் பலர் கூறினர்...” என்றார்.

இந்த புகைப்படம் மற்றும் கட்டுரை பல சர்ச்சைகளை கூட்டியுள்ளது, முக்கியமாக குழந்தையுடன் போஸ் கொடுத்து இருக்கும் மாடல் உண்மையான தாய் அல்ல எனவே இது முறையானது அல்ல என கூறுகின்றனர். பெண்கள் உடல் உறுப்பை பாலியல் வகையில் பார்க்கும் பார்வையை மாற்றும் நோக்கிலே இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் தாய்கள் மற்றொரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது இயல்பான ஒன்று, என்கிறார் கிரிஹலட்சுமி பத்திரிகையின் ஆசிரியர்.

“இதை நான் செய்வதில் என்ன தப்பு?. நான் என் உடலைப் பற்றி பெருமைப்படுகிறேன், ஏன் அதை ஒரு சிறந்த காரணத்திற்காக பயன்படுத்தக்கூடாது? 

என்று ஜில்லு  கார்டியன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கேட்டுள்ளார். மேலும், “இது போன்ற விலக்கப்பட்ட செயலில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அந்த குழந்தையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மிக அன்புடன் என மார்போடு அணைத்துக்கொண்டேன்,” என்கிறார். 

ஆங்கில கட்டுரையாளர்: பின்ஜல் ஷா | தமிழில்: மஹ்மூதா நெளஷின்