ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் சலுகை பெற உங்கள் ஸ்டார்ட் அப் தகுதியானதா?

0

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள சலுகைகளால் பல தொழில்முனைவோர் உற்சாகமடைந்துள்ளனர். இந்தச் சலுகைகள் முக்கியமானவை என்றாலும், எல்லா ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இதற்கு தகுதி உடையவையா? எனும் கேள்வி எழுவதையும் கவனிக்க வேண்டும்.

இந்தச் சலுகைகளை பெறுவதற்கான தகுதியான அம்சங்களை கீழ்கண்ட வரைபடம் விளக்குகிறது. (இந்த வரைப்பட விவரம் வரிச்சலுகை கோரும் ஸ்டார்ட் அப்களுக்கு பிரத்யேகமாக பொருந்தக்கூடியது).

இவை தவிர ஒரு நிறுவனம் ஸ்டார்ட் அப்பாக கருதப்பட வேண்டும் என்றால்...

1. ஸ்டார்ட் அப் நிறுவனம், கம்பெனிகள் சட்டம் 2013 கீழ் தனியார் நிறுவனமாக அல்லது, இந்திய பங்குதாரர்கள் சட்டம் 1932 கீழ் பதிவுசெய்யப்பட்ட பங்குதாரர் நிறுவனமாக அல்லது குறைந்தபட்ச பொறுப்பு பங்குதாரர் சட்டம் 2008 கீழ் பங்குதாரர் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்க அல்லது நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

2. நிறுவனம் துவங்கி அல்லது பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.

3. முந்தைய ஆண்டின் விற்றுமுதல் (கம்பெனிகள் சட்டம் 2013 வரையரை படி) ரூ.25 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. ஸ்டார்ட் அப் நிறுவனம் புதுமை, வளர்ச்சி, புதிய பொருள் உருவாக்கம் அல்லது அதை வர்த்தகமயமாக்குவது, தொழில்நுட்பம் அல்லது அறிவு சொத்துரிமை சார்ந்த பொருள் அல்லது சேவை தொடர்பானவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

5. ஸ்டார்ட் அப் நிறுவனம் கீழ்கண்ட நோக்கங்களை கொண்டிருக்க வேண்டும்;

அ) புதிய பொருள் அல்லது சேவை உருவாக்கம் அல்லது வர்த்தகமயமாக்கல்.

ஆ) வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டலை வழங்கும் வகையில் ஏறகனவே உள்ள சேவை அல்லது பொருளை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்துவது.

6. ஸ்டார்ட் அப் கீழ்கண்ட செயலில் ஈடுபட்டிருக்க கூடாது;

அ). வர்த்தகமயமாக்கல் வாய்ப்பு இல்லாத சேவை அல்லது பொருளை உருவாக்குதல்.

ஆ) வேறுபடுத்த வாய்ப்பில்லாத சேவை அல்லது பொருள் உருவாக்கம்.

இ) வாடிக்கையாளர்கள் அல்லது செயல்முறைக்கு போதிய அளவு மதிப்பு கூட்டலை வழங்க வாய்ப்பில்லாத சேவை அல்லது பொருள் அல்லது செயல்முறை தொடர்பான செயல்பாடுகள்.

7. ஏற்கனவே உள்ள வர்த்தகத்தில் இருந்து பிரிந்து அல்லது மாற்றி அமைத்து நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்க கூடாது.

8. ஸ்டார்ட் அப் நிறுவனம் டிஐபிபியால் அமைக்கப்படும் அமைச்சக குழுவிடம் இருந்து வர்த்தகத்தின் புதுமைத்தன்மை தொடர்பாக சான்றிதழ் பெற வேண்டும் மற்றும்;

அ) இந்தியாவின் முதுகலை கல்லூரி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இன்குபேட்டர் மையத்தில் இருந்து டிஐபிபி குறிப்பிடும் வடிவத்தில் வர்த்தகத்தின் புதுமை தன்மை தொடர்பாக பரிந்துரை பெற வேண்டும் அல்லது,

ஆ) புதுமையை ஊக்குவிப்பதற்கான திட்டத்தின் கீழ் இந்திய அரசின் நிதி பெற்ற இன்குபேட்டரின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும் ( திட்டம் தொடர்பாக) அல்லது,

இ) இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இன்குபேட்டரிடம் இருந்து டிஐபிபி குறிப்பிட்ட வடிவில் (வர்த்தகத்தின் புதுமைத்தன்மை தொடர்பாக) பரிந்துரை பெற வேண்டும் அல்லது,

ஈ) வர்த்தகத்தின் புதுமைத்தன்மையை உணர்த்தும் வகையில், செபியால் அங்கீகரிக்கப்பட்ட இன்குபேஷன் நிதி/ஏஞ்சல் நிதி/தனியார் சமபங்கு நிதி/ஆக்சலேட்டர்/ஆஞ்சல் நெட்வொர்க் நிதி பெற்றிருக்க வேண்டும்,அல்லது,

(டிஐபிபி இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெற பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட நிதிகளின் பட்டியலை வெளியிடும்)

உ) புதுமையை ஊக்குவிப்பதற்கான இந்திய அரசு திட்டத்தின் ஆதரவு பெற்றிருக்க வேண்டும் அல்லது,

ஊ) வர்த்தகம் தொடர்பான துறையில் இந்திய பேட்டண்ட் மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்திடம் இருந்து பேடண்ட் பெற்றிருக்க வேண்டும்.

நமது பார்வை

”பொருள் அல்லது சேவை புதிதாக அல்லது ஏற்கனவே உள்ள பொருளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இருக்க வேண்டும்” என்பது ஒரு தகுதியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் அல்லது அமேசான் போன்ற இணைய சந்தை பிரிவில் செயல்படும் ஒரு ஸ்டார்ட் அப்பை எடுத்துக்கொள்வோம். ஆக, ஒரேத் துறையில் செயல்படும் புதிய ஸ்டார்ட் அப் ஏற்கனவே உள்ள சேவையை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தாவிட்டால் இந்த திட்டத்தின் கிழ் தகுதிபெற முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட இன்குபேட்டர் மையத்திடம் இருந்து பரிந்துரை கடிதம் பெறுவது அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்படுவது அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிதியிடம் இருந்து ஆதரவு பெறுவது மற்றொரு தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமான செயலாகும்.

இந்தத் தகுதி அடிப்படையில் பார்த்தால் தற்போதுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 60 சதவீத நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் தகுதி பெற வாய்ப்பில்லை.

ஆக்கம் ரோகித் லோஹடே | தமிழில் சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்!