பெரு நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 6 திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்... 

0

நிறுவனங்கள் தற்போது, வெற்றிக்கான ஈடுபாடு கொண்டவர்களையே பணிக்கு அமர்த்திக் கொள்ள விரும்புகின்றன. வேலைவாய்ப்பை நாடுபவர்கள் பெற்றிருக்க வேண்டிய ஆறு முக்கிய வேலைத்திறன்கள் இவை:

நிறுவனங்கள் தங்கள் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் மட்டும் ஊழியர்களை வேலைக்கு நியமிப்பதில்லை. தொழில்முறை அனுபவம் காரணமாக நிறுவன தலைவர்களின் அணுகுமுறையும் மாறியிருக்கிறது. அதிகரிக்கும் போட்டிக்கு மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றி முன்னிலை வகிக்கக்கூடியவர்களையே நிறுவனங்கள் விரும்புகின்றன. அந்த வகையில்,

வேலைவாய்ப்பை நாடுபவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஆறு முக்கிய திறன்கள் இவை:

1. பிரச்சனைக்கு தீர்வு காணும் திறன் : தாங்கள் செய்யும் ஓவ்வொரு வேலையிலும் தர்கரீதியான சிந்தனையை பயன்படுத்தக்கூடியவர்கள், மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இத்தகைய ஊழியர்களிடம் இருந்து நிறுவன மேலதிகாரிகள் நடைமுறை சார்ந்த பயனுள்ள பதில்களை எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சிந்தனை பிரச்சனைகளை தீர்க்க முக்கியமானது. அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தும் போது தீர்வுகளை கண்டறிவது எளிதாகிறது.

2. தகவல் தொடர்பு மற்றும் மற்றவர்களுடன் உரையாடும் ஆற்றல்: ஆர்வம் உள்ளவரும், தனது துறையில் அனுபவம் மிக்கவர் மற்றும் தொழில்முறை தன்மை கொண்டவரால் மட்டுமே, ஒரு உத்தியை வெற்றிகரமாக மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும். ஆனால் மற்றவர்கள் சொல்வதை கேட்டு புரிந்து கொள்வதும் முக்கியமாகும். ஒருவர் என்ன சொல்கிறார், எப்படி சொல்கிறார் என்பது தொழில்முறை வெற்றிக்கு முக்கியம்.

3. சுய ஊக்கம்: தங்கள் சொந்த ஆர்வத்தால் ஊக்கம் பெறுபவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தர வேண்டியதில்லை. செயலாக்கக் கூடிய ஐடியாக்களை தெரிவித்து மேலாளர்களை அவர்களால் திருப்தி படுத்த முடியும் என்றால் பாதி வெற்றி அடைந்ததாக பொருள். அவர்கள் சிறந்த ஆளுமைகளாகவும் திகழ்வார்கள்.

4. அழுத்தத்திற்கு மத்தியில் பணி: வேலையில் நெருக்கடி இருக்கும். இத்தகைய அழுத்ததிற்கு மத்தியில் பணியாற்றுவது ஒரு திறன். நெருக்கடியும் ஒரு ஊக்கமாக அமைந்து, ஊழியர்களை மேலும் திறன் பெற்றவர்களாக மாற்றுகிறது. எனவே தான் நெருக்கடிக்கு மத்தியிலும் ஈடுபாட்டுடன் செயல்படக்கூடியவர்களை மேலாளர்கள் நாடுகின்றனர்.

5. குழு பணி: சிறந்த ஊழியர் ஒரு அணியாக செயல்படக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும். பல பாத்திரங்களை கொண்ட ஒரு குழுவை கையாள்வது கடினமானது. எல்லோராலும் எப்படி சிறந்த பங்களிப்பை செலுத்த முடியும் என்பதை திறமையான ஊழியர்கள் கண்டறிவார்.

6. கற்றல் திறன்: பணிக்கு மத்தியில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் மிகவும் அவசியம். எனவே எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட ஊழியர்களை தான் முன்னணி நிறுவனங்கள் விரும்புகின்றன. இது ஊழியர்களுக்கு மட்டும் அல்ல நிறுவனங்களுக்கும் பலன் அளிக்கும்.

ஆங்கில கட்டுரையாளர்: சந்தீப் குமார் | தமிழில்: சைபர்சிம்மன்

(இது ஒரு யுவர்ஸ்டோரி சமூக பதிவாகும். இதில் உள்ள உள்ளடக்கம், படங்கள் சம்பந்தப்பட்டவர்களுடையது. இதில் ஏதேனும் காப்புரிமை மீறல் இருப்பதாக உணர்ந்தால், mystory@yourstory.com எனும் முகவரிக்கு எழுதுங்கள்.)