டெஸ்கோவின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குனர் வித்யா லட்சுமனின் பயணமும் சாதனைகளும்!

வித்யாவும் அவரது தொழில்நுட்ப சாதனைகளும்

0

அது ஒரு விறுவிறுப்பான திங்கள் பிற்பகல் வைட்ஃபீல்ட் டெஸ்கோ வளாகத்தில். அது தான் அந்த பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனத்தின் ஒரே தொழில்நுட்பம் மற்றும் நடவடிக்கை மையம்.

வரவேற்பு அறையில் காத்திருக்கும் நேரத்தில், ஒரு உற்சாகமான பெண்ணை ஹேக்கத்தான் அறையிலிருந்து வெளியே வருவதைக் கண்டேன். என்னை பார்த்தவுடன் வரவேற்று, மாடிப்படி வழியே செல்ல தேர்வு செய்தார். என்னிடம், இது அவர் செய்ய வேண்டிய உடற்பயிற்சி என்று சிரித்துத் கொண்டே சொன்னார், அதே நேரத்தில் அவருடைய குழு நண்பர்கள் லிஃப்ட் வழியே வந்து மாடியில் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.

செல்லும் வழியில், என் பின்னணி மற்றும் வளர்ப்பு பற்றிய விவரங்களைப் பணிவுடன் கேட்டார். அந்த ஒரு நொடி, அவர் இந்தியாவில் நிறுவன மாற்றத்தையும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை உருவாக்கி, இந்திய சில்லறை வணிகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு முன்னோடி என்பதை முற்றிலும் மறந்தேன்.

வித்யா லட்சுமன், பெங்களுரு டெஸ்கோ நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனராகவும், அனிதா போர்க் நிறுவனத்தின் பெண்கள் பிரிவின் தொழில்நுட்ப தலைவராகவும் இருக்கிறார்.

தொழில்நுட்பமும் வித்யாவும்

1989-ஆம் ஆண்டு, வித்யா தன்னை கணினி அறிவியல் பொறியியல் பிரிவில் சேர்ந்துக்கொண்டார். அந்த காலத்தில், தொழில்நுட்பம் என்பது பெண்கள் அதிகம் விரும்பப்படாத பிரிவு. அதனை முறியடிக்கும் வகையில் அந்த துறையில் சேர்ந்தார். அவருடைய சகோதரர் மற்றும் தந்தையின் ஊக்குவிப்பு இவருக்கு பெரிதாக உதவியது என்று கூறுகிறார்.

விண்டோஸ் விடியும் நேரம் அது ! கணினி என்பது ஒரு புதுமை ! ஆர்.வி. பொறியியல் கல்லூரியில், 3000 பேர் படிக்கும் இடத்தில் 54 பெண்கள் மட்டுமே இருந்தார். அதிலும், கணினித் துறையில் 18 பேர் தான்.

அந்த நேரத்தில் கணிதம் மற்றும் பகுப்பாய்வு மீது கொண்ட மோகம் தொடர்ந்து கொண்டே இருந்தது. என்னை பொறுத்தவரை, அவர் இன்றைய காலத்தின், சாதித்த மிகவும் அறிந்த ஒரு பெண்மணி என்றே கூறலாம்.

இராணுவ பின்னணியில் வந்த இவர், தான் வளர்ந்த சூழ்நிலைகளைப் பற்றி விவரித்தார். அதுவே, தொழில்நுட்ப மாற்றங்களை எளிதில் சமாளிக்கவும் பல தரப்பட்ட மக்களை மதிக்கும் தன்மையை கற்றுக்கொடுத்ததாகவும் கூறுகிறார். 

கிளவுட்டின் இன்டெர்னட் ஆஃப் திங்ஸ், இவரை மிகவும் ஆர்வமடைய செய்தது. இன்றைக்கு, அதை வைத்து தான் பலரை பணியில் அமர்த்த தேர்ந்தெடுப்பதாக கூறுகிறார்.

வித்யாவின் பன்முகத்தன்மை

தனிநபராக, வித்யா பல பன்முதத்தன்மை முயற்சிகள் எடுத்தார். மேலும், நாஸ்காம் பன்முக உச்சி மாநாட்டில் பிரபலமான பேச்சாளராக இருந்திருக்கிறார். டெஸ்கோவில் சேர்வதற்கு முன்பு, தாட்வர்க்ஸ் என்னும் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக இருந்திருக்கிறார்.

ஆனால், வித்யா இதையெல்லாம் தன் சொந்த வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்துகிறார். "வளரும் போதும், பொறியியல் படிப்பு முடிக்கும் போதும், நான் முன்மாதிரியாகக் கொள்ள ஒரு பெண் தலைவரை தேடினேன், மாநாடுகள் செல்லும் போதும், ஆண்கள் பேசுவதை மட்டுமே பார்த்தேன்".

தன் பணி அனுபவத்தில், பெண்கள் எண்ணிக்கைக் குறைவதைப் பல நேரங்கள் உணர்ந்திருக்கிறார். ஆனால் தன் பாதையில் தான் தனி ஒரு பெண்ணாக இருந்தாலும், அவர் மாற்றத்தை நோக்கி செல்கிறார்.

"பல மேலாளர்கள் என்னை பார்க்கும்போது "இவள் குடும்பத்தைத் தொடங்கப் போகிறவள் தான் என்ற நினைப்பு அவர்களிலுள் ஓடிக்கொண்டிருக்கும் என அறிவேன். ஆனால், எட்டு மாத கர்ப்பமாக இருந்த நேரத்திலும் என் வேலையை நேர்மையாக செய்தேன். இந்த அர்ப்பணிப்பைப் பார்த்து தான் அவர்களுக்கும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணம் வந்தது."

இந்த சூழ்நிலைகளில், நிறுவனம் தொழிலாளர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு உதவ வேண்டும். அதே நேரத்தில், தொழிலாளர்களும் திறந்த மனதோடு பணிபுரிய வேண்டும். வித்யாவை பொறுத்தவரை, பெண்கள் தங்கள் தகுதிக்கேற்றவற்றை பெற வேண்டும். ஒரு தனிப்பட்ட சம்பவத்தைக் கூறுகிறார்.

"எவர்க்ரீன் இன்வெஸ்ட்மண்ட்ஸ் நிறுவனத்தில், வாய்ப்பைத் தேடி சென்றேன். நான் பணி புரிந்த என் மேலாளருக்கு நான் முயற்சி செய்யும் இந்த வேலையை பற்றி தெரியும் என நினைத்தேன். பின்னர், நான் அதைப்பற்றி கூறிய போது அவர் ஒருபோதும் அதைப் பற்றி நினைக்கவில்லை என்று கூறினார். மேலாளர்களுக்கு நம்முடன் நுண்ணுணர்வு இருக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது அல்லவா ?"

வித்யா இன்று

சவால்களை தாண்டி, இன்றைய சாதனைகளைப் பற்றி பேசும் போது, "பெண்கள் என்றைக்கும் தெளிவாக இருப்பது கடினம் என்றும் கூறினார். ஷெரில் சான்ட்பெர்க் கூறுவது போல், லட்சியம், குறிக்கோள் என்று இருக்கும்போது, அதிகார உணர்வு வருவது சகஜம். ஆனால், நான் முடிந்தவரை என்றைக்கும் விடாமுயற்சியுடன் வெற்றியை நோக்கி செல்ல மட்டுமே விரும்புகிறேன்" என்று கூறினார்.

ஒருமுறை, வித்யா வேலையிலிருந்து வெளியேற எண்ணினார். 2001 ஆம் ஆண்டில், 7- மாத பேறு காலத்தில் ஒரு தேர்வுக்கு சென்றேன். அது என் கனவு வேலை. நான் அதில் சேர தயாராக இருந்தேன். ஆனால், நான் கர்ப்பமாக இருந்தால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு இடைவேளை எடுக்க எண்ணினேன். என் தந்தை, "என் பிள்ளைகள் என்னைப்பற்றி என்ன யோசிப்பார்கள்? என்று என்னிடம்கேட்டார். அம்மாவோ நான் துவண்டு விட்டேன் என அதிர்ச்சியுடன் இருந்தார். இராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து, என்னால் இயலும் போது உன்னால் ஏன் முடியாது என்று என் அம்மா கேட்டார்."

வித்யா, அந்த நேரத்தில், குடும்ப ஆதரவு அமைப்பு மிகவும் முக்கியம் என்று உணர்ந்தார்.

முன்மாதிரி

வித்யா என்றைக்குமே தன் தாயாரை முன்மாதிரியாக எண்ணுவார். இன்றைக்கும், சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு, சமூகத்திற்கு திரும்ப வழங்குவதைப்பற்றி கற்றுக்கொடுப்பார். இதுவே முக்கியமாக கருதினார்.

தொழில்நுட்பவியலாளர்

டெஸ்கோவின் பகுப்பாய்வு துறையில், வித்யா இயந்திரக் கற்றல், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், டேடா மைனிங் போன்றதை சவாலாக எண்ணுகிறார். பெரும்பாலான நிறுவனங்கள் இதை உபயோகப்படுத்துகின்றனர்.

இந்தியாவில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி கேட்கும்போது, அவர் "இந்தியா தொழிமுனைவோர் சமூகத்தை நன்றாக ஊக்குவிக்கிறது. மேலும், இளைய தலைமுறையினர் தங்கள் கனவை நோக்கி பயணிக்கும் விடாமுயற்சி பாரட்டுக்குரியது. மக்கள், ஒரு வேலையில் இருந்து மற்றொன்றுக்கு செல்ல இந்திய சூழல் ஏதுவாக இருக்கிறது. திறனுடன் இயக்கவும் தெரிவதே அவசியம். ஒரு தொழில்நுட்பவியலாளராக, வணிக முன்னோக்கு பார்வை மிக அவசியம். அதனுடைய பலங்களை டெஸ்கோவிற்கு அளிக்கிறேன்" என்று கூறினார்.

உரையாடலை முடிக்கும் நிலையில், தொழில்முனைவோருக்கு ஒரு செய்தியை அளிக்க ஆசைப்பட்டார்.

"இன்று பெண்கள் பச்சாதாபம், எதிர்த்து போராடுவது, வேறுபட்ட கண்ணோட்டம் மற்றும் நகைச்சுவை உணர்வுகளை அலுவலக சந்திப்புகளில் வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை, பெண்கள் வாழ்க்கையைத் தீவரமாக பார்க்கக்கூடாது. தான் செய்யும் எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்க்கக்கூடாது. தான் செய்வதிலும், மற்றவர் எதிர்ப்பார்ப்பதிலும் நம்பிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக, கற்றலை என்றைக்கும் நிறுத்தக் கூடாது".

வித்யாவைப் பார்க்கும்போது, இந்த உலகத்தில் பெண்கள் நிச்சயமாக ஆட்சி செய்வதை உணர்ந்தேன்.