'மதிப்பீடுகளால் கட்டப்படும் கலாச்சாரம் ஒரு நிறுவன வெற்றிக்கான திறவுகோல்': ஸ்ரீகாந்த் கர்னகோட்டா

0

சத்யா நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாகப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில், தனது பணியாளர்களுக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர், தானும் தனது ‘லெப்டினட்டு’களும் தங்களது நிறுவன கலாச்சாரத்தில் நன்கு தெரியும்படியான மாற்றத்தை உருவாக்க மிக முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். “எந்த ஒரு நிறுவனத்தினுள்ளும் கட்டமைக்கப்படும் கலாச்சாரம் முக்கியமானது மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் அனைத்தும் அதுதான்” என்று அந்த கடிதம் கூறியது.

ஸ்ரீகாந்த் கர்னகோட்டா, இந்தியப் பிரிவின் தலைவர், மைக்ரோசாப்ட் அஸூர்
ஸ்ரீகாந்த் கர்னகோட்டா, இந்தியப் பிரிவின் தலைவர், மைக்ரோசாப்ட் அஸூர்

யுவர் ஸ்டோரி ஏற்பாடு செய்திருந்த டெக்ஸ்பார்க் கருத்தரங்கில் வெள்ளியன்று பேசிய மைக்ரோசாப்ட் அஸூர் நிறுவன இந்தியப் பிரிவுத் தலைவர் ஸ்ரீகாந்த் கர்னகோட்டா, எந்த ஒரு நிறுவனத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மதிப்பீடுகளும் கலாச்சாரமும் எந்த அளவுக்கு அவசியம் என்பது குறித்துப் பேசினார்.

“மதிப்பீடுகள் எனும் பகுதிகளைக் கொண்டுதான் கலாச்சாரம் எனும் கட்டிடம் கட்டப்படுகிறது” என்றார் ஸ்ரீகாந்த். “மதிப்பீட்டின் நோக்கம் ஒரு சரியான கலாச்சாரத்தைக் கட்டமைப்பதுதான். உங்களுடைய அன்றாட நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்துத்தான் சரியான கலாச்சாரம் அமைகிறது. வாடிக்கையாளரின் திருப்தி, அரவணைப்பு, ஒருங்கிணைந்த மைக்ரோசாப்ட் அதே சமயத்தில் வித்தியாசம் காட்டும் நடவடிக்கை போன்றவற்றை தனது பணியாளர்களின் கலாச்சாரமாகக் கட்டமைக்க வேண்டும் என்பது மைக்ரோசாப்ட்டின் நோக்கம்.” என்றார் அவர்.

ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உள்ளே மற்றும் வெளியே ஏற்படுத்தப்படும் மதிப்பீடுகளை வைத்துத்தான் அந்த நிறுவனத்தின் கலாச்சாரம் கட்டமைக்கப்படுகிறது. “போட்டியைக் கண்டு பயப்படக் கூடாது. அதை வரவேற்க வேண்டும்” என்கிறார் ஸ்ரீகாந்த். “நமது தளத்தில் நாம் வெளிப்படையாக இருக்கிறோம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விரிவான தேர்வு, நிரல் மொழிகள் (programming languages), கட்டமைப்பு (frameworks), கருவிகள் (tools), தரவுதளங்கள் (databases) மற்றும் சாதனங்கள் (devices) போன்றவற்றில் அஸூர் உதவுகிறது” என அவர் விளக்கினார்.

ஒரு நிறுவனத்தின் கலாச்சாரத்தைக் கட்டமைப்பதில் தலைமைப் பண்பு ஒரு முக்கிமான பகுதி. சமீபத்தில் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் சத்ய நால்லா அளித்த பேட்டி ஒன்றில், எந்த ஒரு நிறுவனத்தின் தலைமைக் குழுவும் தொடர்ந்து ஒரே இடத்தில் தேங்கி விடலாம். எந்த ஒரு நிறுவனமும் வெகு எளிதாக குழிகளுக்குள் விழுந்து விடலாம்” என்று கூறியிருந்தார்.

இதே வார்த்தையை ஸ்ரீகாந்த் வேறு மாதிரியாக, “பணியாளர்களை பணியமர்த்துவதுதான் முதல்படி. பணியாளர்களை பணியமர்த்தும் போது நிறுவனத்துடன் அவர்களின் பொருத்தப்பாடு, மதிப்பீடுகள், அவர்களின் அதிகபட்சத் திறமை போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பண்புகள் ஒரு நிறுவனத்திற்கு அவசியமான கலாச்சாரத்தை சாத்தியமாக்கும்” என்றார்.

“கலாச்சாரம்தான் அனைத்தும்” என்னும் சத்யாவின் வார்த்தைகளுடன் கடைசியாக தனது பேச்சை, முடித்தார் ஸ்ரீகாந்த்.