ஒரு மகத்தான டீமை உருவாக்கும் விஷயத்தில் ஒரு போதும் சமரசம் கூடாது – அமிதாப் மிஸ்ரா

0

உங்கள் இணைய வழி வணிகத்தை நூறு கோடி ரூபாய் வர்த்தகமாக உருவாக்குவதற்கு ஒரு நல்ல டீமை கட்டமையுங்கள்: அமிதாப் மிஸ்ரா முன்னாள் சிடிஓ, ஸ்னாப்டீல்

ஒரு நூறு கோடி ரூபாய் வர்த்தகம் பற்றி நாம் பேசும் ஒவ்வொரு முறையும், பொதுவாக நாம் எண்ணிக்கை குறித்துத்தான் நினைக்கிறோம். அதோடு அதன் பிரம்மாண்டமும் சேர்ந்து நமது கற்பனையில் வந்து விடுகிறது. தொழில் நுட்பம் குறித்து முன்கூட்டியே யோசிப்பதில்லை. பெங்களூருவில் சனிக்கிழமையன்று நடைபெற்ற டெக்ஸ்பார்க் கருத்தரங்கில் உணவு இடைவேளைக்குப் பிறகு அமிதாப் மிஸ்ரா பேச வந்த போது, பார்வையாளர்கள் அவரது பேச்சைக் கவனிப்பார்களா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் பேசிய போது, பார்வையாளர்கள் ஆர்வமாகி, அடுத்தடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

தற்போதைய அவரது சவாலான பணி குறித்துப் பேசினார். தற்போது அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனம் குறித்தும் ஸ்னாப்டீல் குறித்தும் பேசினார். ஸ்னாப்டீல் 2011ல்தான் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில்ஃபிலிப்கார்ட் சந்தையில் கோலோச்சிக் கொண்டிருந்தது. 50 இணையவழி வணிக நிறுவனங்கள் இருந்தன. ஸ்னாப்டீல் அப்போது ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. போதிய நிதி இல்லை. அதன் தொழில் நுட்பக் குழுவும் டெல்லிக்கு வெளியே இருந்தது. ஆனால் மூன்றே வருடத்தில் சுமார் 2 லட்சம் விற்பனையாளர்களையும் நிமிடத்திற்கு பத்தாயிரக்கணக்கான ஆர்டர்களையும் பெறும் அளவுக்கும் வளர்ந்தது.

கடந்த வருடம் ஃபிலிப்கார்ட்டின் 'பிக் பில்லியன் டே' விற்பனையை முறியடித்து முதலிடத்தில் வருவது எப்படி என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றிப் பேசிய அமிதாப், நான்கு நாளைக்கு முன்புதான் தங்களுக்கு அந்த விற்பனை இலக்கு சொல்லப்பட்டது. உண்மையில் ஃபிலிப்கார்ட்டின் இடத்தை எட்டிப் பிடிப்பது ஒரு கடினமான வேலை. ஆனால் அந்த நான்கே நாட்களில் அவர்கள் அந்த இலக்கை அடைந்து விட்டனர். அவர்களின் இணையதளம் ஒரு ஆர்டரைக் கூடத் தவறவிடவில்லை அல்லது ரத்து செய்யவில்லை.

இதை எப்படி சாதித்தனர்? குறுகிய காலத்தில் இப்படி ஒரு வலுவான பாதை அமைப்பதற்கு தொழில் நுட்பக் குழுவுக்கு மூன்று அம்சங்கள் தேவைப்பட்டது என்கிறார் அமிதாப்.

1. வர்த்தகத்திற்கும் தொழில் நுட்பத்திற்கும் இடையே ஒரு கச்சிதமான ஒத்திசைவு இருக்க வேண்டும். தொழில்நுட்ப நிபுணர்கள் வர்த்தகப் பிரிவில் இருப்பவர்களுக்கு எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதை விளக்குவதில், அடிக்கடி சிரமத்தை உணர்கின்றனர்.

“நிறைய நல்ல தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால் அவற்றையாரும் பயன்படுத்துவதில்லை. வர்த்தகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையே ஒரு ஒத்திசைவும் சரியான தொழில்நுட்பமும் தேவை. எங்கள் பக்கத்தில் ஏராளமான சவால்களைச் சந்தித்தோம். ஒரு சந்தையை வைத்திருந்தோம். அது ஒரு பெரிய மாற்றமாக இருந்தது. நாங்கள் சந்தித்த சவால் ஒருபக்கம். ஒரு நாள் முழுவதும் இணையதளத்தை இயங்காமல் வைத்திருந்தோம். அந்த நாள் முழுவதும் உற்பத்தியில் ஈடுபட்டோம். நாங்கள் குழம்பிப் போயிருப்பதாக பலர் கூறினர். இதில் முரண்பாட்டைச் சந்தித்த போது, நான் சொன்னேன்: “நான் இதை மீண்டும் செய்வேன். தேவைப்பட்டால் மறுபடியும் இணையதளத்தை இயங்காமல் வைத்திருப்போம்” தொழில்நுட்பக் குழுவானது அதன் நடவடிக்கை பற்றி விளக்கத் தகுதியுடையதாக இருக்க வேண்டும்” என்கிறார் அமிதாப்.

2. சில நேரங்களில் செயல்முறைகள் உதவாது. “நாங்கள் அப்போதுதான் வளர்ந்து வரும் ஒரு டீம். இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற செயல்முறைகள் இல்லை. ஒவ்வொரு நிறுவனத்தின் அமைப்பும் தனக்கென தனித்தன்மையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் வேகமாகவும் முறைசாரா முறையைக் கொண்டதாகவும் இருந்தது. நாங்கள் இன்னும் வேகத்தை அடைய வேண்டியிருந்தது. நல்ல சூழல் அமையும் பட்சத்தில் 10 வெளியீடுகளை எங்களால் கொண்டு வர முடிந்தது. ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் இவை அனைத்தும் சாத்தியமாயிற்று.” என்று விளக்கினார் அமிதாப்.

3. “நல்ல பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் தான் அனைத்துமே துவங்குகிறது. உங்கள் குழு சரியானதாக இல்லாவிட்டால், அது வேலைக்கு உதவாது. நான் ஒரு மகத்தான தொழில்நுட்பக் குழுவைக் கட்டமைத்தேன். அவர்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுவார்கள். ஒரு மகத்தான டீமைக் கட்டமைக்கும் விஷயத்தில் சமரசமே கூடாது” என்று முடித்தார் அமிதாப்.