ஆறே மாதங்களில் சமன்பாட்டை அடைந்து 5 கோடி ரூபாய் பொருட்களை விற்ற தொடக்க நிறுவனம்!

2

பெருநிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதே ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இந்த சவாலை முறியடிக்கும் வகையில் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்க வழி செய்துள்ளது ’நியூ ஆரா’ (Nuoaura) எனும் ஆன்லைன் ஸ்டோர்.

பெங்களுரை சேர்ந்த சரத் ஜெயபிரகாஷ்(35) இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தை நிறுவியுள்ளார். நியூ ஆரா (Nuoaura) என்றால் புதிய ஆற்றல் என்று பொருள், பெயருக்கேற்ப வியாபாரத்துக்கான புதிய பரிமாணமாக நியூ ஆரா உள்ளது. பல வணிகர்களிடமிருந்து, பல அலுவலக பொருட்களை பெறுவதும் அதற்கான ஒப்பந்தங்கள் செய்வதும் நிறுவனத்தாரருக்கு பெரும் தலை வலியே. Nuoaura இதற்கான ஒற்றை சாளர தளமாக அமைந்துள்ளது. 

இங்கு எழுதுபொருள், பரிசுகள், விருதுகள், டி-சட்டைகள், வீட்டு பராமரிப்பு: மடிக்கணினிகள், ஏசி உட்பட அனைத்து பொருட்களையும் பெறலாம். நியூ ஆராவின் USP அதாவது அதன் முக்கிய அம்சம் ஆன்லைன் சேவை மற்றும் மல்டி லொக்கேஷன்’ டெலிவரியாகும். இது அக்டோபர் 2015 பதிவு செய்யப்பட்டு, ஜனவரி 2016 முதல் செயல்படத் தொடங்கியது. தொடங்கி ஒன்றரை காலத்துக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களை பெற்றுள்ளது. 

இதில் டாடா குழுமம், டெஸ்கோ, அமேசான் இந்தியா, எஸ்ஸார் குழு, உஜ்ஜீவன் வங்கி, மற்றும் கமினெனி மருத்துவமனைகள் அடங்கும். Nuoaura நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரத் கூறுகையில், ஆன்லைன் ஸ்டோரின் காலாண்டு வரவு செலவு 52 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும், கடந்த அக்டோபர் மாதமே முதலீட்டு பணச்சமன்பாட்டை அடைந்துவிட்டதாகவும் கூறுகிறார். 

”கடந்த 17 மாதங்களில் எங்கள் விற்பனை ரூ. 5.4 கோடி வருவாயை பெற்றுள்ளது. இன்று, நாங்கள் இன்னும் இரு நகரங்குளுக்கு Nuoaura விரிவுபடுத்த உள்ளோம். இந்த நிதியாண்டில் 125 சதவீதம் வளர்ச்சி மற்றும் 9.5 கோடி ரூபாயை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

சரத் பிபிஎ பட்டம் மற்றும் ஐ.ஐ.எம்-சியில் மாஸ்டர் டிகிரி பட்டம் பெற்றுள்ளார். பின்னர் ஜி.இ, விப்ரோ போன்ற ஐ.டி நிறுவனங்களுடன் வேலை செய்திருந்தாலும், தாம் எப்பொழுதுமே ஒரு தொழில்முனைவராக இருக்கவே அவர் விரும்பினார்.

2009 ஆம் ஆண்டில், அவர் ஹைதராபாத்தில் இருந்தப் போது ஸ்மைலிங் ஷூ (Smiling Shoe) என்னும் ஷூ சலவை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் எல்லா ஸ்டார்டப் நிறுவனங்கள் போலவே மூலதனப் பற்றாக்குறை ஸ்மைலிங் ஷூக்கும் ஏற்பட்டது, இதன் காரணமாக ஐந்து மாதங்களில் அது மூடப்பட்டது. ஏற்கனவே வாடிக்கையாளர்களை கொண்டிருந்த சரத், விநியோகம் செய்ய முடிவு செய்தார். 

“முதல் சில மாதங்களுக்கு, நான் அலுவலகப் பொருட்களை வாங்கி விற்றேன் அதை பெரிய வாய்ப்பாக பார்த்தேன்” என்கிறார் சரத். 

இதுவே Arkarise ஆரம்பிக்க வழி செய்தது (நியூ ஆரா, அர்கரிஸ் பிசினஸ் சொலியுஷன் கீழ் வரும் ஒரு டொமைன் ஆகும்)Arkarise தொலைத்தொடர்பு உள்கட்டுமான தீர்வுகளை (telecom infrastructure solutions) வழங்கும் நிறுவனமாகும், இது சிங்கபூரிலும் உள்ளது. நிறுவனத் தொடக்கத்தில் இருந்து, மார்கெட் லான்ச், விநியோகம், விளம்பரம், விற்பனைக்குப் பின் சேவை போன்ற மக்களிடம் நிறுவனத்தை சேரக்கூடிய அனைத்து சேவைகளையும்  Arkarise செய்யும். 

இது பல உலகளாவிய பெருநிறுவனங்களுடன் வேலை செய்துள்ளது. தற்போது Arkarise அமெரிக்காவிலும் கால் பதித்துவிட்டது. உலகளவில் வளர, உற்பத்தியாளர்கள் வெளிநாட்டில் பங்காளர்களைத் தேடுகின்றனர். ஆனால் இந்த விநியோகஸ்தர்கள் / பங்குதாரர்கள் ஏற்கனவே வேகமாக நகரும் பொருட்களை மட்டுமே விற்கிறார்கள். உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பவே சரத் விரும்பினார்.

Arkarise, விநியோகதிற்காக பல நாடுகளிலுள்ள பல ப்ராண்டுகளுடன் இணைந்துள்ளது. ஐந்தாண்டுகளில் வெவ்வேறு நாடுகளில் உள்ள உலக வர்த்தகங்களுடன் கொண்ட ஒப்பந்தத்தால் அர்கரைசின் மதிப்பு இரண்டு மில்லியன் டாலர் என்கிறார் சரத்”.

இதை தொடர்ந்தே நியூ ஆரா உருவானது. Arkarise மூலமே நியூ ஆராவிக்கு 30 லட்சம் மூலதனம் கிடைத்தது. அவர்கள் செய்த ஆய்வில் 2015 ஆம் ஆண்டு Q4 இல், இந்தியாவில் அலுவலக பொருட்களுக்கான மார்கெட் மதிப்பு 25 பில்லியன் டாலர் எனவும், ஆண்டுதோறும் 17-18 சதவிகிதம் வளர்ந்து, 2019 ஆம் ஆண்டில் சுமார் 50 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் அறிந்தனர்.

இவற்றில், 2015-16 ஆம் ஆண்டில், 0.5 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே அலுவலக சப்ளையர்களுக்கு இ-காமர்சை கையில் எடுத்தனர். இதற்கான வாடிக்கையாளர்கள் ஆண்டுதோறும் 150 சதவிகிதம் அதிகரித்து வருகின்றனர், இவர்கள் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தவே விரும்புகின்றனர், இதன் மதிப்பு 7-8 பில்லியன் டாலராகும்.

இ-காமர்ஸில் வாய்ப்பு மிகவும் பெரியது என்பதால், சரத் வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் டூலை உருவாக்க முடிவு செய்தார். வாடிக்கையாளர்கள் பல இடங்களில் இருப்பதால் விலை, கிடைக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சோர்ஸிங் ஒரு பிரச்சினையாக இருக்கும். சரத்தின் நோக்கம் சோர்ஸிங் உட்பட அனைத்து செயல்முறையும் ஒரு டிஜிட்டல் விண்டோவில் சேர்பதே.

நியூ ஆரவில் ஒரு நிறுவனம் தன்னை பதிவுச் செய்து, தங்களுக்கு தேவையானதை ஆன்லைன் ரெக்வஸ்ட் செய்யலாம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு மேலாளருடன் இணைக்கப்படுவர், அவர்கள் தினசரி அடிப்படையில் வாடிகையாளர்களுக்கு தேவையான சேவையை செய்வர்.

B2B வர்த்தகத்தில், வாடிக்கையாளர் கையகப்படுத்துதலுக்கு எந்த பண நெருக்கடியும் இல்லை. நியூ ஆரா உற்பத்தி செய்யாததால், டயர் -1 விநியோகிப்பாளரிடமிருந்தோ அல்லது நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்தோ சீரான சோர்ஸிங் செய்ய வேண்டும்.

“பல்வேறு நகரங்களில், பிராண்டுகள் மற்றும் அவர்களின் வரிசை-1 பங்காளர்களுடன் உறவுகளைத் தோற்றுவிப்பதே ஒரு பெரிய பணியாகும் (நியூ ஆரா ஏற்கனவே 90 நகரங்களிளுள்ளது. இதில் அகோலா மற்றும் ஷிமோகா போன்ற டயர் -3 நகரங்கள் அடங்கும்) நியூ ஆரா மல்டி லொகேஷன் டெலிவரிய, பெங்களுருவில் சொல்லப்பட்ட விலை கொல்கத்தா, நாக்பூர், அல்லது கொச்சின் போன்ற நகரங்களுக்கும் பொருந்தும்.”

இந்தியாவில் அலுவலக மற்றும் அலுவலக பொருட்கள் சந்தை 95 சதவிகிதம் ஒழுங்கமைக்கப்படா, பாரம்பரிய முறைகள் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் 80 சதவிகிதம் வர்த்தகர்கள் இணையத்தைப் பயன்படுத்தி விற்பனையாளர்களைத் தேடுகின்றனர்.

இருப்பினும், சரத் சொல்வது படி நியூ ஆரவிற்கு தெரிவுநிலை தேவை. ”இன்று JK பேப்பர் மற்றும் கேம்லின் போன்ற அலுவலகப் பொருட்கள் நேரடியாக எங்களிடம் வேலை செய்கின்றன. நாம் என்ன வகையான ஒப்பந்தங்களைச் செய்கிறோம் என்பதை அவர்கள் அறிவார்கள். வணிகத்திற்கு, இது போன்ற இணைப்பே தேவை. உதாரணமாக, ஃபெதர்லைட் நமக்கு பிரத்யேக விலை மற்றும் தயாரிப்புகளை வழங்கவில்லை, இருப்பினும் அவற்றின் பொருள்களை தருகின்றனர். வியாபாரத்தில் நிறுவனங்களுடன் ஒத்திசைவைக் கொண்டிருப்பது முக்கியமானது என்றாலும், நாங்கள் தனி நிறுவனமாக சில கோட்பாடுகளை கொண்டுள்ளோம்” என்கிறார் சரத்.

தற்போது, இந்திய அலுவலக பொருட்களின் விநியோகத்தின் அளவு 35 பில்லியன் டாலர்கள். தானியங்கி சோர்ஸிகின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இ-காமர்ஸ் வணிகத்திற்கு அதிக நிறுவனங்கள் கால் பதிகின்றன. இதில் stationeryShop, Offimart, மற்றும் OfficeYes அடங்கும் (Early bird Zoffio நிறுவனம் கடந்த ஆண்டு ஒரு சீனா நிறுவனத்திற்கு விற்கப்பட்டது)

நியூ ஆராவில் ஏற்கனவே 10 பிரிவுகள் உள்ளன: அலுவலக எழுதுபொருள், நுகர்பொருட்கள், IT, பரிசுகள், கல்வி பொருட்கள், மின் விநியோகம், ஆன்-டிமான்ட் சேவை (வணிக அட்டை அச்சிடுதல் போன்றவை), இதை தவிர இன்னும் ஆறு பிரிவுகளை இந்த நிதிஆண்டில் சேர்க்கவுள்ளது.

21 பேர் கொண்ட நியூ ஆராவின் அலுவுலகம் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களிளுள்ளது. விரைவில் மும்பை வர இருக்கிறது. சரத்தை பொறுத்த வரை வாடிக்கையாளரே தமக்கு மிகப்பெரிய வழிகாட்டி, 

“என் வாடிகையளர்களிடம் இருந்தே நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். புதிய வியாபாரங்களை நான் உருவாக்க வடிகையாளர்களே காரணம். வாய் வழி போற்றலே இந்த துறையில் பெரியது” என்று முடிக்கிறார் சரத்.