’டெக் 30’: யுவர் ஸ்டோரி அறிமுகப்படுத்தும் இந்தியாவின் பிரகாசமான ஸ்டார்ட் அப் பட்டியல்! 

0

யுவர்ஸ்டோரியின் முன்னணி நிகழ்ச்சியான டெக்ஸ்பார்க்ஸ் அறிமுகமான ஆண்டு முதல், மிகவும் கவனமாக தேர்வு செய்யப்பட்ட இளம் மற்றும் துடிப்பான 30 ஸ்டார்ட் அப்கள் பட்டியலை டெக் 30 ஸ்டார்ட் அப்ஸ் என வழங்கி வருகிறது.

டெக் ஸ்பார்க்ஸ் மாநாட்டின் 9வது பதிப்பில், யுவர் ஸ்டோரி; மருத்துவம், தொழில்நுட்பம், நிதி, நுகர்வோர் இணையம், சமூகம், மார்க்கெட்டிங் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு தொழில்களில் தங்கள் புதுமையான ஐடியா மூலம் சர்வதேச ஸ்டார்ட் அப் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்னணி 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்டியலை வெளியிட்டது.

இந்த ஆண்டின் டெக் 30 நிறுவனங்கள் பிரகாசமானவையாக இருக்கின்றன. விண்ணப்பிக்கப்பட்ட 3,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை இவை. 

தொழில்நுட்பத்தின் தாக்கம், குழு, வளர்ச்சி வாய்ப்பு, டிராக்‌ஷன், சந்தை வாய்ப்பு மற்றும் வருவாய் மாதிரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில், ஸ்டார்ட் அப் வல்லுனர்கள் அடங்கிய நடுவர் குழு மற்றும் யுவர் ஸ்டோரியின் மூத்த எடிட்டர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இவற்றை தேர்வு செய்துள்ளனர்.

“இது எங்கள் 9ம் பதிப்பு. டெக் 30 தொடர்பான நாங்கள் உருவாக்கியுள்ள பாரம்பரியத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவில் காணக்கூடிய திறமை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த அறிமுகங்களை விரிவாக படித்து, இந்த ஈடுபாடுமிக்க தொழில்முனைவோர்கள் பற்றி அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இவர்களில் சிலர் வருங்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக திகழ்வார்கள்,” என யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷர்த்தா சர்மா கூறினார். 

இந்த ஆண்டு டெக்ஸ்பார்க்ஸ் மாநாட்டின் கருத்து, ‘உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவது” என்பதாக இருந்தது. இந்த கருத்திற்கு ஏற்ப, 2018க்கான டெக் 30 பட்டியல், வளர்ச்சி வாய்ப்புள்ள, லாபகரமான, அடுத்த தலைமுறைக்கான இந்தியர்களுக்கு நிஜ உலக தீர்வுகளை அளிக்கக் கூடிய ஸ்டார்ட் அப்களை கண்டறிவதற்கான தேடலாக அமைந்ததை உணர்த்துகிறது.

எங்களுடைய டெக் 30 பட்டியல், ரோபோவியல், செயற்கை நுண்ணறிவு, தானியங்கி கார், தூய்மையான தொழில்நுட்பம், ஆக்மண்டட் ரியாலிட்டி, பிக்டேட்டா மற்றும் அனல்டிக்ஸ் ஆகிய வளரும் தொழில்நுட்பங்கள் சார்ந்ததாக இருப்பதில் எந்த வியப்பும் இல்லை. டெக் 30 பற்றி மேலும் அறிய தொடர்ந்து யுவர்ஸ்டோரியை வாசிக்கவும்.

2018 க்கான டெக் 30 பட்டியல் 

1. Aryabhatta Robotics Private Limited

2. Bon Happetee

3. Cradlewise

4. CricHeroes

5. Dose FM

6. FirstHive

7. Fitso

8. Fyle

9. Gmetri

10. Hizen Intelligence Systems (FITBOTS)

11. Innov4Sight

12. iThink Logistic Quick Services LLP

13. Jumper.ai

14. Matrubharti

15. MedCords

16. Mobycy

17. PregBuddy

18. Recruiterflow

19. Scapic

20. Slang Labs

21. Streak

22. Swaayatt Robots

23. Swajal

24. Trashcon Labs Private Limited

25. Uncanny Vision

26. Unifie

27. Unilodgers

28. Vyuti Systems

29. Waani.io

30. Worxogo

டெக் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்பான விரிவான அறிமுகத்திற்கு காத்திருக்கவும்.

யுவர்ஸ்டோரி குழு | தமிழில் ; சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL