இணைய வேகத்தில் முன்னிலை வகிக்கும் 'சைபராபாத்'

0

"டிவின் பிரைம்"ல்(Twin Prime) எங்கள் ஜி.எல்.ஏ.எஸ் (குலோபல் லொகேஷன் பேஸ்ட் ஸ்டிராடஜீஸ்) தரவுபட்டியல் நெட்வொர்க் செயல்பாடு பற்றிய புரிதலை பெறுவதற்காக கோடிக்கணக்கான நெட்வொர்க் கோரிக்கைகளை ஆய்வு செய்கிறது. செயல்பாட்டை எந்த அம்சங்கள் தீர்மானிக்கின்றன என்று அறிவது மொபைல் செயல்பாட்டு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு அவசியமானதாகும். எங்கள் தரவு, வேறுபாட்டுத்தன்மை எப்படி மொபைல் செயல்பாட்டை பாதிக்கிறது என உணர்த்துகிறது.

எல்.டி.இ நெட்வொர்க் வை-ஃபை வசதியை விட மேம்படும்

பெரும்பாலனோர் செல்போன் சேவைகளை விட வை-ஃபை நம்பகமானதாக, வேகமானதாக இருப்பதாக கூறலாம். ஆனால் நம்முடையை "இன்சைட்ஸ் வலைப்பதிவு" உலக நகரங்களை பொருத்தவரை இந்த நிலை இல்லை என உணர்த்தியுள்ளது. சரி இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவின் இன்னமும் எல்.டி.இ (Long Term Evolution) பயன்பாடு பரவலாகத்துவங்கவில்லை. டிவின் பிரைம், இந்தியாவில் எதிர்கொண்ட கோரிக்கைகளில், எல்.டி.இ போக்குவரத்து கோரிக்கை 2 சதவீதம் மட்டுமே. ஆனால் ஆரம்ப போக்கை வைத்துப்பார்த்தால் முக்கிய மெட்ரோக்களில் வை-ஃபையை விட எல்.டி.இ சிறப்பாக செயல்படுகிறது. ஐதராபாத் மற்ற மெட்ரோக்களை விட மேம்பட்டிருக்கிறது தெரிய வந்துள்ளது.

மேலே உள்ள வேக வரைபடம் 30- 60 கே.பி வரை உள்ள கோப்புகளுக்கு (இந்தியாவில் பிரபலமாக உள்ள அளவு) லட்சக்கணக்கான மாதிரிகளில் இருந்து சராசரி தரவிறக்க வேகத்தை குறிக்கிறது.

எல்.டி.இ மூலம் இந்தியா செல்போனில் வீடியோவுக்கு தயாராகிறது

தரமான வீடியோவுக்கு ( 480 பி வீடியோ) பெரிய கோப்புகள் எனில் 1.5 எம்பிஎஸ் தரவிறக்க வேகம் தேவைப்படுகிறது. லட்சக்கணக்கான மாதிரிகளை பரிசீலித்து பார்த்ததில் எல்.டி.இ வீடியோவை வழங்க ஏற்றது என தெரிய வந்துள்ளது. இங்கு குறிப்பிடப்படும் தரவிறக்க வேகம் 200 கே.பிக்கு மேல் அளவுள்ள கோப்புகளாகும். ஏனெனில் அதிக நேரத்துக்கான இணைப்பில் நீடிக்கும் வேகத்திலேயே கவனம் செலுத்தியுள்ளோம்.

முடிவு

இந்தியாவில் நெட்வொர்க் செயல்பாடு தொடர்பான கோடிக்கணக்கான அளவுகளை ஆய்வு செய்தோம். எல்.டி.இ சிறப்பாக துவங்கியிருக்கிறது என்பதையும் ஐதராபாத், சைபராபாத் எனும் பெயருக்கு உரியதாக இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் எல்.டி.இ வளர்ச்சி பற்றி குறிப்பிடும் சமீபத்திய அறிக்கை வீடியோ போன்ற சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான நல்ல செய்தியாகும். இது, இந்தியாவின் செழிக்கும் எம் -காமர்ஸ், சுற்றுலா, டேட்டிங் மற்றும் இதர மொபைல் வர்த்தகத்திற்கு நல்ல வாய்ப்பு மற்றும் சவாலாகும்.

கட்டுரை எழுதியவர் பற்றி (விருந்தினர் பக்கம்)

டிவின் பிரைம் ஐஎன்சியின் இணை நிறுவனர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியான சதீஷ் ரகுநாத், நெட்வொர்க் மென்பொருள் வடிவமைப்பில் 15 ஆண்டுக்கும் மேல் அனுபவம் உள்ளவர். ஜூனிபர் நெட்வொர்க்ஸ் (Juniper Networks ) மற்றும் நார்டல் நெட்வொர்க்ஸ் ( Nortel Networks) உள்ளிட்ட முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களில் அவர் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பொறுப்புகளை வகித்திருக்கிறார். ஜுனிபர் நெட்வொர்க்சில் அவர் ரவுட்டர் தொழில்நுட்பம் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். நிறுவனங்களுக்கு இடையிலான பிளாட்ஃபார்மை உருவாக்குவதிலும் பங்காற்றியிருக்கிறார். சதீஷ் நியூயார்க்கின், டிராயில் உள்ள ரென்சேலார் பாலிடெக்னிக் இன்ஸ்ட்டியூட்டில் ( Rensselaer Polytechnic Institute) கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் பிஎச்டி பட்டம் பெற்றவர். ஐ.இ.இ.இ வெளியீடு உள்ளிட்டவற்றில் பல் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

(புகைப்படம் உதவி: ஷட்டர் ஸ்டாக்)