சாதனையாளர்கள் ஒருபோதும் செய்யாது விலக்கிவைக்கும் 5 செயல்கள்!

5

நிறைய பணமும், நேரமும் கிடைக்கும் பாக்கியம் பெரும்பாலானோருக்கு அமைவது இல்லை. நம்மை மாதிரி அவர்களுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் அதே மனித திறன்தான் அவர்களிடமும் இருக்கிறது. ஹாரி பாட்டர் படத்தில் அல்பஸ் டம்பல்டோர் ஹாரி-இடம், 'உண்மையில் நம் திறமைகளை தாண்டி நம்மால் மேலும் சிறப்பாய் செயலாற்ற முடியும். ஆனால் அவ்வாறு செயலாற்றி சக்தியை வெளிக்கொண்டுவருவது நம் கையில் தான் இருக்கிறது, ஹாரி' என கூறியதற்கு ஏற்ப, சாதனையாளர்கள் சில விஷியங்களை வித்தியாசமாகச் செய்வார்கள்.

கோடிக்கணக்கானோர் மத்தியில் சாதனையாளர்களை தனித்து காட்டிக்கொள்ள அவர்கள் 'செய்யாதிருக்கும் செயல்கள்' என்ன? இதோ பார்ப்போம்!

தங்களது வெற்றியின் யோசனைகளை ஒருபோதும், மற்றவர்கள் வரையறைக்க விடமாட்டார்கள்!

வேறு ஒருவரின் வெற்றி குறித்த கருத்தை எண்ணி, சாதனையாளர்கள் கலங்கமாட்டார்கள். அவர்கள் கனவை நனவாக்கும் வேலைகளையும் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களையே சாதனையாளர்கள் செய்வர். சிலர் அவர்கள் உருவாக்கிய மாற்றத்தை வெற்றி என்பர்; சிலர் சந்தையில் காணும் மதிப்பின் அடிப்படையில் வெற்றியை வரையறுப்பர். எது முக்கியம் என்று அவர்களுக்குத் தெரியும், அதனை மற்றவர்கள் எடுத்துரைப்பதை ஒருபோதும் சாதனையாளர்கள் ஏற்கமாட்டார்கள்.

முன்கூட்டியே திட்டமிடும் பண்பை அவர்கள் குறைத்து மதிப்பிடமாட்டார்கள்

வரவிருக்கும் நேரத்திற்கு முன் திட்டமிடுவதை, பெருமளவிலான வெற்றியாளர்கள் நம்புவர். மறுநாளைக்கு இன்று இரவே அவர்கள் திட்டமிடுவர்; நாள் தொடங்குவதற்கு முன்னரே அவர்கள் திட்டமிட்ட முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்வர். திட்டமிடுவதற்கு டைரிகள், பத்திரிகைகள் அல்லது ஆன்லைன் பத்திரிகைகள், செயலிகளை, அவர்கள் நாள் முழுவதும் அவர்களுடன் வைத்திருப்பர். உண்மையில், அவர்களில் பெரும்பாலானோர், தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சரியான காலை அட்டவணை வைத்து பின்பற்றுவர்.

நம்பத்தகாத இலக்குகள் மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள்

அவர்கள் யதார்த்தமான இலக்குகளை வைத்து, அந்த இலக்குகளை காலக்கெடுவைக்குள் முடிப்பதை நம்புவர். இன்போசிஸ்-இன் துணை நிறுவனர், நாராயண மூர்த்தி, அலுவலகத்தை விட்டு நேரத்திற்கு கிளம்புவதன் முக்கியத்துவத்தை இன்போசிஸ் ஊழியர்களுக்கு மெயில் செய்தார். "அவசியம் இல்லையெனில் அதிக நேரத்தை செலவழிக்காதீர். தேவையில்லாமல் அதிக நேரம் தங்கி, உங்களது வேலை கலாச்சாரத்தை சிரமமாக்கி உங்களுக்கும் உங்கள் சக ஊழியர்களுக்கும் சவுகரியம் இல்லாதது போல் அமைக்க வேண்டாம்", என்று அவர் எழுதிருந்தார். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிப்பதை விட, மாலை நேரங்களில் அந்நேரத்தை உபயோகரமாக பயன்படுத்துங்கள், என்று மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

கற்றல் பண்பை நிறுத்த மாட்டார்கள்

எலான் முஸ்க்-இடம் நீங்கள் எப்படி ராக்கெட் உருவாக்க கற்றுகொண்டீர் என்று கேட்டபோது, அவர் சாதாரணமாக, 'நான் புத்தகங்கள் படிப்பேன்' என்றார். புத்தகங்களை அதிகம் விரும்புவதில் பில் கேட்ஸ் குறிப்பிடத்தக்கவர். அவரது புத்தகங்கள் படிக்கும் பண்பை அவர், "எப்போதும் நான் படிக்கத் தொடங்கிய புத்தகத்தை நான் முடித்தேதீர வேண்டும் என எனக்குள் ஒரு கட்டளை இருக்கிறது" என்று விளக்கினார். கற்றலின் நன்மைகளை வெற்றியாளர்கள் எந்நாளும் கீழறுக்க மாட்டார். அவர்களுள் பலர் கற்றலின் மதிப்பை உணர்ந்தவர்கள், சிலர் அதற்காக ஆன்லைன் சேவையும் நாடுவார்கள்.

கஷ்டங்களினால் அவர்கள் பின்வாங்குவதில்லை

அதற்கு மாறாக தோல்விகளை அனுபவங்களாக எடுத்துக் கொள்வர். துன்பங்களை சந்திப்பதால் அவர்கள் வலிமையை இழக்க மாட்டார்கள்; அத்துன்பங்களை மேலும் வளர்ச்சி காண வாய்ப்புகளாய் பயன்படுத்திக் கொள்வர். ஒப்ரா ஃவின்பிரே, பாலின துன்புறுத்துதல்களைச் சந்தித்த இடமான பால்டிமோர் நகரத்தில், முதல்முறை தொலைகாட்சி 'நிகழ்ச்சி தொகுப்பாளர்' வேலையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் இன்று இவருடைய மதிப்பு 2.9 பில்லியன் டாலர் ஆகும் என ஃபோர்பஸ் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மக்கள் ஓய்வு காலம் என நினைக்கும் 65 வயதில் தான், கோலோனல் சாண்டர்ஸ் தனது சொந்த சாம்ராஜ்யத்தைத் தொடங்கினார். அவரது கே.ஃப்.சி. 1000-க்கும் மேலான நிராகரிப்பை சந்தித்தது. ஜே.கே.ரௌலிங், 12 வெளியீட்டாளர்களால் நிராகரிக்கப்பட்டவர்.

இவர்கள் அனைவருக்குமே அவர்களிடம் பொதுவான குணம் ஒன்று இருந்தது: அவர்களின் கனவுகள் நனவாகும் வரை அவர்கள் நம்பிக்கை இழப்பதில்லை. அல்பஸ் டம்பல்டோர்-க்கு ஒருவேளை இருக்கும் குணம் போல், சாதனையாளர்களும் அவர்கள் ஆசைப்படுவதை அடைவதற்கு நம்பிக்கையுடன் அதனை நோக்கி பணி புரிவதையே தேர்ந்தெடுப்பர். நீங்களும் அப்படிதானே?

ஆங்கிலத்தில்: ஷ்வேதா தஷ்