பதிவு செய்யப்படாத பிராண்டட் அரிசி, பருப்புவகை சரக்குகளுக்கு 5% CGST வரி விதிப்பு பொருந்தாது- மத்திய அரசு விளக்கம்

0

கொள்கலனில் வைக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட பிராண்ட் பெயர் கொண்ட பருப்பு, பன்னீர், இயற்கையான தேன், கோதுமை, அரசி, தானியங்கள், பருப்பு வகைகள், மாவு வகைகள் உள்ளிட்ட சில சரக்குகளுக்கு மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) இல்லை. அவை கொள்கலனில் வைக்கப்பட்டு, பதிவான பிராண்ட் பெயருடன் இருந்தால், அவற்றின் மீது 2.5 சதவீதம் மத்திய ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட பிராண்ட் பெயர் என்றால் என்ன என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 2017, ஜூன் 28-ம் தேதியிட்ட எண் 1/2017- மத்திய வரி (விகிதம்) அறிவிக்கையும், (இந்த அறிவிக்கையில் மத்திய ஜி.எஸ்.டி. விகிதம் மாநிலத்துக்குள் விநியோகம் செய்யப்படும் சரக்குகள் மீதான மத்திய ஜி.எஸ்.டி. வரி விகிதம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) 2017, ஜூன் 28ம் தேதியிட்ட எண் 2/2017- மத்திய வரி (விகிதம்) அறிவிக்கையும் (இந்த அறிவிக்கையில் மத்திய ஜி.எஸ்.டி. விகிதம் மாநிலத்துக்குள் விநியோகம் செய்யப்படாத சரக்குகள் மீதான மத்திய ஜி.எஸ்.டி. வரி விகிதம் தொடர்பனது) “பிராண்ட் பெயருள்ள பதிவு செய்யப்பட்ட பொருள்” என்பது வர்த்தகக் குறியீட்டுச் சட்டத்தின் (1999) (Trade Marks Act, 1999) கீழ் பதிவு செய்யப்பட்ட பிராண்ட் பெயர் (brand name) அல்லது வர்த்தகப் பெயர் (trade name) என்று தெளிவாக விவரிக்கின்றன.

இந்நிலையில், வர்த்தகக் குறியீட்டுச் சட்டத்தின் பிரிவு 2 (t) மற்றும் இரண்டாவது பிரிவு (w) ஆகியவற்றின்படி பதிவு செய்யப்பட்ட வர்த்தகக் குறியீடு என்பது வர்த்தகக் குறியீட்டில் பதிவு செய்யப்பட்டது என்று வகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, வர்த்தகக் குறியீட்டுச் சட்டம் (1999) செயல்பாட்டில் உள்ள நிலையில், வர்த்தகக் குறியீட்டின் கீழ் பதிவு செய்யப்படாத பிராண்ட் பெயர் மற்றும் டிரேட் பெயர் கொண்ட சரக்குகளுக்கு 5 சதவீத மத்திய ஜி.எஸ்.டி. வரி பொருந்தாது.