'ஐ ஆர்டர் ப்ரெஷ்'- உற்பத்தியாகி 12 மணிநேரத்தில் பொருட்கள் வீட்டை அடையும்!

0

உடனுக்குடன் உபயோகிக்கக்கூடிய பொருட்களின் சில்லறை விற்பனையில், மொத்த விலையை காட்டிலும் 100 சதவிதம் விலை அதிகரிப்பு இருக்கும்,மேலும் அதன் உற்பத்தி மதிப்பை காட்டிலும், 150 முதல் 200 சதவிதம் வரையிலான விலை உயர்வு இருக்கலாம். ஆனாலும், சில்லறை வியாபரிகளுக்கோ, மொத்த வியாபாரிகளுக்கோ, மிக அதிக லாபம் கிடைக்கும் எனக் கூற இயலாது. லாபத்தில் முக்கால் பங்கு, விற்பனைச் சங்கிலியில், பொருட்களின் கெட்டுப்போகும் தன்மை காரணமாக கரைந்துவிடுகிறது.

இந்த இடைவெளியை குறைக்கும் வாய்ப்பை, நிதின் சவானி மற்றும் சந்தியா சவானி ஆகியோர் கண்டனர். பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்களை சமையலறைக்கு 12 மணிநேரத்தில் வழங்குவதன் மூலம், கழிவுகள் மற்றும் களவுகளை குறைக்க இயலும் என்று உணர்ந்தனர். மேலும் இவ்வகை செய்கை, நல்ல லாபம் ஈட்டித்தருவதோடு, வாடிக்கையாளர்களுக்கும் நியாய விலையில் பொருட்களை கொடுக்க உதவியது.

டிசம்பர் 2014இல் "ஐ ஆர்டர் ப்ரெஷ்" (IOrderFresh) துவங்கப்பட்டது. நம் இல்லத்திற்கு தேவையான பொருட்களை, தொலைபேசி வழி செயலிகள் மூலம், விற்பனை ஆணை பிறப்பித்து விட்டால், அவை நம் வாசலுக்கே வந்துவிடும். அவற்றின் சில்லறை விற்பனைகளை "ஐ ஆர்டர் ப்ரெஷ்" டெல்லி மற்றும் குர்கான் பகுதிகளில் செய்து வருகிறது. இந்த யோசனை உதயமானதற்கு முக்கிய காரணம், விற்பனை சங்கிலியில் இருந்த இடைவெளியே. அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளே அவற்றில் பிரதானம்.

ஐ ஆர்டர் ப்ரெஷ்ன் தனித்தன்மை என்றால், நாங்கள் இரவில் எந்த பொருளையும் தேக்கிவைப்பதில்லை. ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே, வீடுகளுக்கு பொருட்களை விநியோகிக்கின்றோம். இதன் மூலம் தயாராகி குறைந்த நேரட்த்திற்குள் பொருட்கள் வாடிக்கையாளரை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

வளர்ச்சி மற்றும் முதலீடு

நிறுவனர்கள் இருவரும் இந்த நிறுவனத்தை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட ஆரம்ப முதலீடு 20,000 அமெரிக்க டாலர்களோடு துவங்கினர். முதலீட்டில் பெரும்பகுதி, வலுவான ஒரு தொழில்நுட்பதளத்தை ஆன்டிராயிடு மற்றும் ஐஓஎஸ் யில் கட்டமைக்கச் செலவானது. இவர்கள் வணிக மாதிரியில், விற்பனையாளர்கள், இவர்கள் தளத்தின் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்துகின்றனர். அது மொத்த வருவாயில் குறிப்பிடத் தகுந்த சதவிதமாக உள்ளது.

செப்டெம்பர் மாதத்தில் ஒரு நாளில் 1000 பேர் வரை நாங்கள் விற்பனை ஆணையை பூர்த்தி செய்தோம், மேலும் அடுத்த 12 மாதங்களில், 20 முதல் 25 சதவிதம் வரை வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். எங்களிடம் 1 லட்சம் வாடிக்கையாள்ர்களுக்கு மேல் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வருபவர்கள் மூலம் 55 சதவிதம் தின விற்பனை நடக்கின்றது. மேலும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாங்கள் இரண்டரை லட்சம் வாடிக்கையாளர்களை டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெற முடியும் என கணித்துள்ளோம். அடுத்த 12 மாதங்களுக்கு வேறு எந்த நகரத்திற்கும் விரிவாக்கம் செய்யும் எண்ணம் இல்லை. இப்பகுதிகளில் எங்கள் வணிகத்தை பெருக்குவதோடு நில்லாமல், முன்னிலை வகிப்பதில் கவனம் செலுத்தப்போகின்றோம், என்கிறார் நிதின்.

வணிகத்தை துவங்கிய பின்பு, ஆரம்பக்கட்ட நிதியாக, 100,000 அமெரிக்க டாலர்கள் பெற்றனர். மேலும் இந்த வருடம் ஜூலை மாதத்தில் "பெஸ்ட் புட் வர்கஸ்" யிடம் இருந்து 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி பெற்றனர். "நாங்கள் இவ்வணிகம் சுயமாக நீடித்திருக்கும் படி அமைப்பதில் கவனம் செலுத்துகின்றோம். அதற்கு மேலும் நிதிதிரட்டுவது அவசியம். எனவே 2016 ஆண்டின் முதல் காலாண்டில் அதை திரட்ட முடிவு செய்துள்ளோம் என்கிறார் நிதின்.

சந்தை மற்றும் போட்டியாளர்கள்

இந்தியாவில் நுகர்வோர் பிரிவில், மிகப்பெரிய பங்கு இத்துறைக்கு உள்ளது. தற்போதைக்கு இதன் சந்தை மதிப்பு 330 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2020 ஆம் ஆண்டிற்குள் இதன் மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கணக்கிடப்படுகின்றது.

"பிக்பாஸ்கட்", "பெப்பர் டாப்", "க்ரோபர்ஸ்" ஆகியவை இத்துறையில் ஐ ஆர்டர் ப்ரெஷின் போட்டியாளர்கள். கடந்த சில மாதங்களில், அவர்களும், கணிசமான அளவு நிதி திரட்டியுள்ளனர்.

பிக்பாஸ்கட் தற்போதைய முதலீட்டாளர்களிடம் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டியுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம், 200 கோடி ருபாயை, ஹீலியான் வென்ச்சர்ஸ் மற்றும் சோடியஸ் கேப்பிடலிடம் இருந்து பெற்றுள்ளது.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் க்ரோபர்ஸ், தொடர் நிதிதிரட்டல் மூலம் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை, செகோயா கேப்பிடல் மற்றும், டைகர் க்ளோபல் ஆகிய நிறுவனங்களிடமிருந்து பெற்றது. மேலும் அவர்கள் மூலமே 35 மில்லியன் அமெரிக்க டாலர்களை, கடந்த ஏப்ரல் மாதம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெப்பர் டாப் நிறுவனம், தொடர் நிதி திரட்டல் மூலம், 36 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெற்றுள்ளது. அதில் பெரும் பகுதி ஸ்நாப் டீல் நிறுவனத்திடம் இருந்தும், மற்றவை தற்போது உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்தும், மேலும் ரூ-நெட், ஜாப்கோ, மற்றும் பீ நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளது.

இப்பிரிவில் அதிகமான போட்டியாளர்கள் இருப்பது பற்றி கேட்டபோது, எந்த ஒரு நிறுவனத்தாலும், இப்பிரிவில் தனி ஆளுமை செலுத்த இயலாது. எதிர்காலத்திலும் இயலாது. இது மிகவும் எல்லைகள் வரையறுக்கப்பட்ட சந்தை. எனவே நீடித்து நிற்க இடங்களுக்கு ஏற்ப, சேவையை வடிவைக்க வேண்டும் என்கிறார்.

தற்போது இந்நிறுவனத்திற்கு இருக்கும் மிகப்பெரிய சவால், வாடிக்கையாளர்களின் பழக்கமே. அலைபேசி மூலமும், வலைத்தளம் மூலமும், அவர்கள் பொருட்களை வாங்கும் பழக்கம் இன்னும் பலரிடம் இல்லை. எனவே அவர்களுக்கு தேவையான தரமான பொருட்களை எளிதாக அவர்களுக்கு கிடைக்க செய்யும் பொழுது, இந்நிலை மாறும் என்று கருதப்படுகின்றது.

மேலும், பயனீட்டாளர் பழக்கதிற்கு ஏற்ப, அவர்களிடம் விளம்பரப்படுத்தும் முறையில், மின் வணிகம், மளிகை கடைகளை காட்டிலும் முன்னிலை வகிக்கின்றது. " தற்போதைக்கு, சரியான வாடிக்கையாளர்களுக்கு, மொத்த பல்பொருள் அங்காடியும் அவர்கள் உள்ளங்கையில் உள்ளதை உணர்த்த நாங்கள் முயலுகின்றோம்" என்கிறார் நிதின்.

வலைத்தளம்

ஆக்கம் : தொஸிப் ஆலம் | தமிழில் : கெளதம் s/o தவமணி