'இந்தியா உலகின் பின் அலுவலகம் அல்ல, நாம் தான் உலகின் அலுவகம் என்று காட்டுவோம்’- பேடிஎம் விஜய் சேகர் சர்மா!

'டெக் ஸ்பார்க்ஸ்'18ல் ஊக்கம் நிறைந்த பேச்சால் பார்வையாளர்களை கவர்ந்திழுத்த பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா!  

0

ஒரு கட்டத்தில் மக்கள், விஜய் ஷேகர் ஷர்மாவிடம் அவர் நிதி திரட்டுவதில் தோல்வி அடைவார் என்று சவால்விட்டனர். ஆனால், இன்று பேடிஎம் வாரன் பஃபெட் மற்றும் ஜாக் மா போன்ற சூப்பர்ஸ்டார் முதலீட்டாளர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டுகளை கொண்ட ஸ்டார் அப்களில் ஒன்றாக உள்ளது.

உண்மையில், பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓவான விஜய் ஷேகர் ஷர்மா ஒரு ஸ்டார். 

பேடிஎம் சி.இ.ஓ விஜய் சேகர் சர்மாவுடன், யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ர்த்தா சர்மா உரையாடுகிறார்.
பேடிஎம் சி.இ.ஓ விஜய் சேகர் சர்மாவுடன், யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ர்த்தா சர்மா உரையாடுகிறார்.

எந்த தொழில்துறை கூட்டத்தில் அவர் பேச அழைக்கப்பட்டாலும், மிகுந்த கவனத்தை ஈர்த்து, பாலிவுட் அல்லது விளையாட்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய வரவேற்பை பெற்றுவிடுகிறார்.

டெக்ஸ்பார்க்ஸ் 2018’லும் இப்படி தான் நடந்தது...

வி.எஸ்.எஸ் என அழைக்கப்படும் விஜய் சேகர் சர்மா, அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களை ஈர்த்ததில் எந்த வியப்பும் இல்லை. யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷ்ரத்தா சர்மாவுடன் உரையாடலுக்காக அவர் அமர்ந்த போது கூட, அவரிடம் இருந்த துடிப்பான ஆற்றலை உணர முடிந்தது. இந்த உற்சாகம் பார்வையாளர்களையும் தொற்றிக்கொண்டது.

அவர் மைக்கை கையில் எடுத்துக்கொண்டு, ஊஹூ என்று கத்திய பார்வையாளர்களை பார்த்து நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்களா? அல்லது கேலிக் கூச்சலிடுகீறீர்களா? என கேட்க, மேலும் கைத்தட்டல்கள் அதிர்ந்தது.

அரங்கத்தை அலங்கரித்து, மேடையின் மையத்தில் நின்றவர், கூர்மையான ஹாசியப் பேச்சு, சுவராஸ்யமான உண்மை நிகழ்வுகள், அமெரிக்கப் பாடகர் மற்றும் பாடலாசிரியரான ஜிம் மோரிசானின் மேற்கோள்கள், மற்றும் கொஞ்சம் தூண்டுதல் பற்றி உரையாற்றி அவருடைய பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க அடுத்த மணி நேரத்தை எடுத்துக்கொண்டார். 

அவர் நிகழ்த்தியது உரை அல்ல, செயல்பாட்டின் முடிவில், இந்தியாவின் செல்வாக்கு மிக்க இணைய நிறுவனத்தை (சாப்ட்பேங்க், அலிபாபா மற்றும் பெர்க்‌ஷயர் ஹாத்வே உள்ளிட்ட முதலீட்டாளர்களை கொண்ட நிறுவனம்), உருவாக்கிய உணர்வுப் பூர்வமான மனிதர் மற்றும் எல்லாவற்றையும் இதயத்திற்கு எடுத்துச்செல்பவர் என புரிந்தது.

அவர் சாதித்திருப்பதை மீறி, எதிர்ப்பாளர்கள் சொல்வதை அவர் மறந்துவிடவில்லை. அது தான் அவரை இயக்கி, தொடர் முடியாத உயரங்களை எட்ட வைக்கிறது.

“பலரும், உங்கள் குழுவில் ஒரு எம்பிஏ கூட இல்லை, நீங்கள் எப்படி ஒரு பிராண்டை உருவாக்குவீர்கள் என கேட்டனர்? ஃப்ளிப்கார்ட் பன்சல் சகோதரர்கள் போல் உங்களால் நிதி திரட்ட முடியாது என்றனர். அதை மனதளவில் எடுத்துக்கொண்டேன். இன்று ஜாக் மா, வாரன் பப்ஃபெட், மசாயோஷி சென்னிடம் இருந்து நான் நிதி திரட்டியிருக்கிறேன்...“ என அவர் உற்சாகமாக தெரிவித்தார்.

அப்போது மீண்டும் கைத்தட்டல்கள் எழுந்தன...

பேடிம் (12 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது) மேலும் செல்வாக்கை பெற்றபடி இருந்தாலும், அவர் இந்த மதிப்பீட்டில் திருப்தி அடையவில்லை. பலரும் இதை குறைத்து மதிப்பிடல் என்கின்றனர். நாங்கள் இன்ன்னும் குறிப்பிட்ட பில்லியன் மதிப்பை பெற்றிருக்க வேண்டும், என்கின்றனர், என்கிறார் விஜய்.

இருப்பினும், வாழ்நாளில் ஒருமுறை வரும் வாய்ப்பு என் கதவை தட்டியது. “இந்த அறையில் உள்ள யாருடைய ஆற்றல் மற்றும் ஊக்கத்தில் இருந்து என்னுடையது வேறுபட்டது என நான் நினைக்கவில்லை. எனக்கான வாய்ப்பை நான் உணர்ந்து கொண்டேன்,” என்றார்.

“நீங்கள் பெரிய நிறுவனங்களை பார்த்து அஞ்சக்கூடாது. உங்களுக்கான வாய்ப்பை வேறு ஒருவரிடம் தூக்கிக் கொடுத்துவிடக்கூடாது. போரை சந்திக்க தயாராக இருந்தால், உங்களுக்கு பத்து மில்லியன் ஆயுதங்கள் கிடைக்கும் என சொல்கிறேன். எனவே மிகப்பெரிய அளவில் வளர்வதற்கான வாய்ப்பை நீங்கள் தழுவிக்கொள்ளாவிட்டால், நீங்கள் வீட்டுக்குச்செல்ல வேண்டியது தான்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

‘பெரிதாக வளருங்கள் அல்லது வீட்டுக்குச்செல்லுங்கள்” எனும் வி.எஸ்.எஸ் வாக்கியம் இந்திய ஸ்டார்ட் அப் உலகில் வைரலாகி வருகிறது. இதை பாலிவுட் பட வாசகம் போல மக்கள் உணர்கின்றனர். அதை அவை அறிந்திருக்கிறார். தனது வாசகத்தை அவர் கச்சிதமாக பிரயோகிக்கிறார். பெங்களூருவின் மந்தமான காலையில் அவரது உற்சாகமும், துடிப்பும் அரங்கில் இருந்தவர்களை பற்றிக்கொண்டது.

அவரது பயணத்தை மேலும் விசேஷமானதாக்கும், சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தது பற்றி ஷ்ரத்தா குறிப்பிட்ட போது, 

“நாட்டில் உள்ள வாய்ப்புகள் மற்றும் நம்முடைய ஈடுபாட்டிற்கான அங்கீகாரமாக இது அமைகிறது. நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்பது பிரச்சனை அல்ல. நாம் ஒன்றும் உலகின் பேக் ஆஃபிஸ் அலுவலகம் அல்ல, நாம் தான் உலகின் அலுவலகம்...” என உற்சாகமாக பதில் சொல்கிறார்.

“நாம் தான் உலகின் நம்பர் ஒன் என நினைத்துக்கொள்ள வேண்டும். இப்படி நாம் நினைக்கும் போதே, உலகம் நமதாக மாறிவிடும். எந்த ஐபிஎம்’மாலும், மைக்ரோசாப்டை நிறுத்த முடியாது. எந்த மைக்ரோசாப்ட்டாலும் கூகுளை நிறுத்த முடியாது. எந்த கூகுளாலும், ஃபேஸ்புக்கை நிறுத்த முடியாது. யாராலும் உங்களை தடுக்க முடியாது. நீங்கள் அப்படி தான் நினைக்க வேண்டும்...” என்கிறார் அவர் மேலும்.

வெற்றியுடன் பொறுப்பு வருகிறது. பூங்கொத்துகளுடன் விமர்சனங்களும் வருகின்றன. வி.எஸ்.எஸ் போன்றவர்கள் இதை எதிர்கொண்டுள்ளனர். பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து சொல்வதால் அவர் சமூக ஊடகங்களில் தாக்கப்படுகிறார். ட்ரோல்கள் பல விதங்களில் வருகின்றனர். 

இவற்றை எல்லாம் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? என ஷ்ரத்தா கேட்டார்...

“நான் ஒரு பாறை, இதற்கெல்லாம் உடையப்போவதில்லை என்கிறார் அவர். இவ்வுலகில் சிலரை நீங்கள் கண்டு கொள்ளாமல், அலட்சியம் செய்ய வேண்டியது அவசியம். நான் அதைத் தான் செய்கிறேன்.”

லேசான மனநிலையில் பேசிய படி, அவர் பேடிஎம் தொழில்நுட்ப உலகை உன்னிப்பாக கவனிப்பதாக கூறுகிறார். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், அனலிடிக்ஸ் அவருக்கு ஆர்வம் அளிக்கிறது. “இந்தத் துறைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். உங்களிடம் யோசனை இருந்தால் எனக்கு மெயில் செய்யுங்கள்,” என்றும் அவர் கூறினார்.

அவரைப்பொருத்தவரை ஒவ்வொரு யோசனையும் பரிசீலனைக்கு ஏற்றது. 

“காலணி கூட அணியாத ஒரு பள்ளிக்குச்சென்றேன். நான் எப்போதும் பின் தங்கியிருப்பவர்களின் பக்கம் நிற்கிறேன். இந்த நாட்டின் மிகப்பெரிய பின் தங்கியவரின் வெற்றிக்கதையாக நான் இருக்க விரும்புகிறேன்,” என அவர் கூறிய போது அரங்கில் இருந்தவர்கள் ஆர்பரித்து ஆமோதித்தனர்.

யுவர்ஸ்டோரியின் ஆண்டு நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ், ஸ்டார்ட் அப் சூழலில் சிறந்த மற்றும் பிரகாசமான நிறுவனங்களை, வர்த்தக உலகை, அதிகாரிகள், மற்றும் முதலீட்டு சமூகத்தை ஒன்றாக கொண்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த நிகழ்வு, அறிவு பகிர்வு மற்றும் வலைப்பின்னலாக்கத்திற்கான இந்தியாவின் மிகவும் விரும்பப் படும் தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் மேடையாகி இருக்கிறது. டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியின் 9 வது பதிப்பு யுவர்ஸ்டோரியின் பத்தாவது ஆண்டாகவும் அமைகிறது. இத்தனை ஆண்டுகளாக உங்களின் ஆதர்வு மற்றும் யுவர்ஸ்டோரியை தொடர்ந்து வாசித்து வருவதற்கு மனமார்ந்த நன்றி.

ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்; ஜெயஸ்ரீ

Related Stories

Stories by YS TEAM TAMIL