ரயில் பயண காப்பீட்டுத் திட்டம் மூலம் இனி பயணிகள் உரிய நிவாரணம் பெறமுடியும்!

0

ரயில் பயணிகளுக்கான பயண காப்பீட்டு திட்டம் பரிச்சார்த்த முறையில் ஓர் ஆண்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே துறை. ஐஆர்சிடிசி தளத்தின் மூலம் டிகெட் புக் செய்யும் எவரும் ஒரு பயணிக்கு தலா 0.92 ரூபாய் செலுத்தி இந்த காப்பீடை பெறமுடியும். 

காப்பீடை பெறும் பயணி எவரும் ரயில் பயண விபத்து அல்லது அசாதாரண சம்பவங்களால் இறப்பு/காயம் ஏற்பட்டால், அவரது சட்ட வாரிசுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும். ரயில்வே சட்டம் 1989, பிரிவுகள் 124 மற்றும் 124 ஏ’இன் படி இந்த நிவாரணம் வழங்கப்படும்.  

இந்த காப்பீடு, ஒரு பயணி தனது பயணத்தை ரயிலில் புக் செய்துள்ள ஸ்டேஷனில் தொடங்கி தங்களின் இலக்கு ஸ்டேஷனை அடையும் வரை நிகழும் சம்பவங்களுக்கு பொறுப்பேற்கும். 

காப்பீடு மொத்தத் தொகை பற்றிய விவரம்:

(i) இறப்பு நேர்ந்தால்- 10 லட்சம் ரூபாய்

(ii) விபத்தால் நிரந்திர ஒட்டுமொத்த ஊனம்- 10 லட்சம் ரூபாய் 

(iii) நிரந்தர பகுதி ஊனம்- 7.5 லட்சம் ரூபாய் வரையில்

(iv) காயத்துக்கான மருத்துவ சிகிச்சை செலவுகள்- 2 லட்சம் ரூபாய்

 (v) இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் செலவு- 10 ஆயிரம் ரூபாய்

ஐஆர்சிடிசி, ரயில்வே துறையின் கீழ் இயங்கி, காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தை, விருப்பப்படும் பயணிகள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். பாசஞ்சர் ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்கள் தவிர மற்ற அனைத்து ரயில்களில் ரிசெர்வ் (SL, 1AC, 2AC, 3AC) செய்து பயணிக்கு எல்லா பயணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம் என பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.