பெண்களை ப்ரோக்ராம்மிங்கில் ஊக்கப்படுத்தும் 'ஹேக்கத்தான்' போட்டி!

0

பெண்கள் ஹேக்கத்தான் போட்டி: இந்த நிகழ்வு மாணவிகளுக்கு ப்ரோக்ராம்மிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், கணினியில் பல்திறமை கொண்ட மாணவிகள் பங்கு பெற்று இணைந்து செயல்படும் வாய்ப்பை பெற உதவும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், மார்க் ஜுக்கெர்பெர்க் தனது முகநூலில் பெண்மணி ஒருவரின் கமென்டுக்கு தான் பதிலளித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அந்த பெண்மணி, நான் எனது பேத்திகளிடம் பள்ளியில் கணினி விரும்பி மாணவரிடம் நட்பு பாராட்ட ஆலோசனை கூறி உள்ளேன், ஏனெனில் நாளை அந்த மாணவன் உங்களைப் போல சமூகத்தில் பெரும் பெயர் பெற்ற ஆளாக மாற வாய்ப்புள்ளது என்று பதிவிட்டு, ஃபேஸ்புக்கின் மூலம் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நட்புறவாக இருக்க முடிகிறது என்று தன் நன்றிகளை தெரிவித்திருந்தார்.  

ஒரு வேலை இந்த பதிவு, மார்க் ஜுக்கெர்பெர்க்கின் பார்வையில் படாமல் போயிருந்தால் இது பதிந்ததர்க்கான அறிகுறியே இல்லாமல் போயிருக்கும். ஆனால் மார்க் ஜுக்கெர்பெர்க்கின் பின்னூட்டம் தான் இந்தப் பதிவினை ஒரு நிகழ்வாக மாற்றியது .

அந்த பெண்மணிக்கு பதிலளித்த மார்க் இப்படி பதிவிட்டிருந்தார்...

“உங்கள் பேத்திகளை கணினி வல்லுனருடன் பழகச் சொல்வதைவிட அவர்களையே கணினித் துறையில் வல்லுனராக மாற உற்சாகப்படுத்துங்கள், நாளை அவர்கள் புதிய படைப்புகளை உருவாக்குபவர்களாக மாறட்டும்.”
Picture Credits:Facebook
Picture Credits:Facebook

இதை அடிப்படையாகக்கொண்டு உலகம் முழுதும் பெண்களை ப்ரோக்ராமிங்கில் ஊக்கப்படுத்தும் வகையில் பலவித நிகழ்வுகளை நிறுவனங்களும், அமைப்புகளும் நடத்தி வருகின்றன.

இதே போன்று கணினித்துறையில் பெண்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வில் நீங்களும் பங்குபெற விரும்பினால் உங்களுக்கான அறிய வாய்ப்பு அருகில் காத்திருக்கிறது.

கணினித் துறையில் உள்ள பல மென்பொருள் வல்லுனர்களை உலகிற்கு வெளிக்காட்டுவதையும், அவர்களுக்கு வாய்ப்பளிப்பதையும் GUVI நிறுவனம் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது .

கோயம்பத்தூரில் உள்ள அமிர்தா கல்லூரியில் வரும் வியாழன் (21-4-2016) அன்று GUVI மற்றும் ACM-W இணைந்து நடத்தும் பெண்கள் மட்டும் பங்கு பெறும் Hackher என்ற ஒருநாள் கோடிங் போட்டி நடைபெற உள்ளது.

தமிழ் யுவர்ஸ்டோரி இந்த பெண்கள் ஹேக்கத்தான் நிகழ்வின் மீடியா பார்ட்னெராக உள்ளது.

இந்த போட்டியில் பங்குபெற முன் பதிவு அவசியம்.

இந்த லிங்க்கை Hackher பயன்படுத்தி நிகழ்வில் இலவசமாக பங்குபெற பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த போட்டியில் பங்கு பெறுவதன் மூலம் மாணவிகள் ப்ரோக்ராம்மிங் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதுடன், கோடிங் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தும் அணியினருக்கு வெற்றிப் பரிசுகளும் வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. போட்டியில் பங்கு பெரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வு மாணவிகளுக்கு ப்ரோக்ராம்மிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், கணினியில் பல்திறமை கொண்ட மாணவிகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பையும் தர உள்ளது. இதுவரை கற்றுக்கொண்டதை செயல்படுத்திப் பார்க்கவும், புதிதாக திறமைகளை கற்றுக்கொள்ளவும் இந்தப் போட்டி இடமளிக்கும். இப்போட்டியில் பங்குபெறும் மாணவிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு GUVI மற்றும் பிற நிறுவனங்களில் இருந்தும் மென்பொருள் வல்லுனர்கள் வருகை தர உள்ளனர்.

கட்டணம் ஏதும் இன்றி இந்த கணினி ப்ரோக்ராம்மிங் போட்டியில் பங்கு பெறலாம்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்