சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் 'லிதியம் கேப்ஸ்'

0

600 கோடியில் இருந்து 900 கோடி டாலர் வரையில் வர்த்தகம் நடக்கும் டாக்சி மார்க்கெட், வருடத்திற்கு 17ல் இருந்து 20 சதவீதம் வரையில் வளர்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. வணிகரிடமிருந்து வாடிக்கையாளருக்கு எனும் இந்த பி2சி (Business To Consumer - B To C) வகை மெகா வர்த்தகத்தில், லிதியம் கேப்ஸ் நிறுவனம் எலக்ட்ரானிக் கேப்களுடன் இந்தியாவில் அறிமுகமாகி பொது போக்குவரத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் கொண்டு வந்துள்ளது. கம்போர்ட் இண்டியாவின் முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி சஞ்சய் கிருஷ்ணன் இதைத் தொடங்கியுள்ளார். எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையிலும் சுற்றுச் சூழல் மாசைத் தடுக்கும் வகையிலும் ஹைட்ரோ கார்பன் கேப்களை லிதியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

“மின்சாரத்திற்கும் ஹைட்ரோ கார்பனுக்கும் இடையில் அதிக விலை வித்தியாசத்தைக் கொண்ட ஒரு நாடு இந்தியா. எனவே இத்தகைய யோசனையை ஆரம்பிக்க பொருத்தமான இடம் இந்தியா” என்கிறார் சஞ்சய். மேலும் மின்சாரச் செலவும் இங்கு குறைவு. ஏற்கனவே இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. வழக்கமான மின் விநியோகத்திற்கு ஆகும் செலவைக் காட்டிலும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு குறைவு.

லிதியம் கேப்ஸ்
லிதியம் கேப்ஸ்

பெரும்பாலான கேப் நிறுவனங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் வர்த்தகரிடமிருந்து வாடிக்கையாளருக்கு எனும் பி2சி முறையைத்தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால் லிதியம் கேப்ஸ் வர்த்தகரிடமிருந்து வர்த்தகருக்கு எனும் பி2பி (Business to Business) முறையில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. “பி2சி மாடலில் சுமார் 200லிருந்து 300 வரையில் சார்ஜிங் ஸ்டேசன்கள் இருக் வேண்டும். மேலும் 1000 கேப்களாவது இருக்க வேண்டும், அது சாத்தியமில்லை.” என்கிறார் சஞ்சய்.

ஆனால் இதிலும் இதற்கே உரிய சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. புதிதாகத் தொடங்கும் தொழில்கள் சந்திக்கக் கூடிய நிதிப் பிரச்சனை, சரியான பணியாளர்கள் குழு அமையாமல் போவது போன்ற வழக்கமான பிரச்சனைகளைத் தாண்டி, லிதியம் கேப்ஸ் வேறு சில சவால்களையும் சந்தித்தது. வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவது ஒரு சவாலாக இருந்தது. அதற்கு தானியங்கி முறை ஒன்றைக் கட்டமைத்தது லிதியம். வாடிக்கையாளரின் பாதுகாப்பை- குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பை - உறுதி செய்யும் விதத்தில், லிதியம் குழுமம் தேவையான செயலிகள் (apps) மற்றும் சாதனங்களை (gadgets) வைத்துள்ளது.

"ஜிபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதால், டிரைவர்களால் முறைகேட்டில் ஈடுபட முடியாது. மேலும் கேப்களின் பயண நேரத்தையும் முழுமையாகக் கண்காணிக்க முடியும். டிரைவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளித்துள்ளதோடு, அதற்கும் அப்பால் கூடுதலாக செய்யப்பட்ட வசதிகள் இவை."

லிதியம் ஒரு நல்ல வளர்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக சஞ்சய் கூறுகிறார். இந்த வருட இறுதிக்குள் லிதியம் 500 சதவீத வளர்ச்சியை எட்டும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.