சென்னை எக்ஸ்பிரஸில் 'இருவரின் புரிந்துணர்வு'- ஓர் ஒட்டுக் கேட்ட ஒப்பந்தம்!

0

தொழில்முனை நிறுவனர்கள் பிசியான முதலீட்டாளர்களை, லிஃப்டில் பயணிக்கும் பொழுது தங்கள் ஐடியாக்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு முதலீட்டை கவர முயல்வது பல சமயம் நடக்கும். ஆனால் ரயில் பிரயாணத்தில் ஒரு பெண்ணைக் கவர முயன்று, வணிக ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டதை ஒட்டுக்கேட்ட சக பயணி, தனது ட்விட்டரில் நகைச்சுவையோடு நொடிக்கு நொடி அப்டேட் செய்த சம்பவம் வெகுவாக பலரை கவர்ந்துள்ளது. ஒரே நாளில் தனது இந்த ட்விட்டர் பதிவுகளால் பிரபலமான பெங்களுருவைச் சேர்ந்த ராஜ் பதிவிட்ட ட்வீட்டுகள் உங்கள் பார்வைக்கு...

பெங்களூரிலி இருந்து சென்னை நோக்கிச் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு மார்வாடி இளைஞன் தனது வணிக அறிவை முன்னிறுத்தி இணை பயணியான மற்றொரு தமிழ் பெண்ணை அணுக முயன்றதில் துவங்கியது அவர்களது உரையாடல்.

இந்த உரையாடலை (ஒட்டு) கேட்ட ராஜ், நோடிக்கு நொடி ட்வீட்டியது வருமாறு...

ஒரு மார்வாடிப் பையன் அருகில் அமர்ந்துள்ள பெண்ணைக் கவர முயன்று... பதினைந்தாவது நிமிடத்திலேயே தன் பிஸினசை பற்றி பேசத் தொடங்கிவிட்டான்!

அப்பெண் ஒரு தொழில்முனைவு நிறுவனத்தில் பணிபுரிகிறாள் போலும். அந்த இளைஞனின் சலுகையை எப்படி அவள் மறுக்க முடியும்... அவன் தள்ளுபடி விலையில் 'ப்ராண்டட்' டி-ஷர்ட் கொடுக்கிறேன் என, அவள் மறுக்கவே முடியாத ஒரு பேரத்தை முன் வைக்கிறான்!
"இளைஞன் தனது ஃபேக்டரிக்கு உடனே போன் போட்டு, 24 மணி நேரத்தில், டி-ஷர்ட் உங்கள் கையில் என அந்த பெண்ணுக்கு வாக்கே கொடுத்துவிட்டான்"...
"பெண், 5 முறை இரண்டு இணை நிறுவனர்களுக்கும் கால் பண்ணிவிட்டாள்... அவன் சாம்பிள் துணிகளைக் காட்டத் தொடங்கிவிட்டான்!"
"தனது குடும்பப் படம் ஒன்றை அப்பெண்ணிடம் காண்பித்து தன் சுயசரிதையை சொல்லத் தொடங்கிவிட்டான்... அவனது தாத்தா காலத்து தொழில்முனைவுக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது..."
"தற்போது, இலவச ரியல் எஸ்டேட் வகுப்பு! ஒரு ப்ளாட்டையே அவளிடம் விற்றுவிடுவான் போல..."
"பேச்சு முதலீட்டை நோக்கி போகிறது... பெண்ணின் தொழில்முனை நிறுவனத்துக்கு 'வெறும்' 2 கோடி நிதி கிடைத்துள்ளதாம்..."
"ஹும், காலை சிற்றுண்டி முடிவடைந்தது... அடுத்தச் சுற்று கல்வி தகுதி. அவன் ஐந்தாவது பெயில், அவள் ஆர்.ஈ.சியில் பட்டம் பெற்றா இன்ஜினியர்...
"அடே, அந்த பெண்ணின் ஸ்டார்ட் அப், விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை பல தளங்களில் வெளியிட உதவும் நிறுவனமாம். இதுல காமெடி என்னனா இந்த இளைஞன் தான் அவர்கள் சந்தித்த முதல் விற்பனையாளராம்..."
"அடப் பாவிங்களா, இதுவரை வாடிக்கையாளரயே பார்க்காமல் எப்படி ஒரு தொழில்நுட்பத் தயாரிப்பை உருவாக்கினீங்க? இதுல 2 கோடி நிதி வேற கிடைச்சுருக்கு..."
"அவனுக்கு வயது 24, 10 வருட அனுபவம். பதினான்கு வயதிலேயே அப்பா கொடுத்த 50 ஆயிரத்தைக் கொண்டு தொடங்கிய பிசினசாம்"
"அட வந்துட்டாங்க மேட்டருக்கு... காதல், திருமணம் பற்றி பேச்சு. ஹா அவள், தான் ஒரு தமிழ் பிராமணப் பெண் என்று சொல்லிட்டா..."
"பையன் தெளிவா இருக்கான்! பெண்ணிடம் ஆஃபிசிற்கு கால் பண்ணி கேட்கச் சொல்கிறான்... 
"ஓ... இணை நிறுவனர் ஆர்டரை பதிவு செய்ய வேறு சிலரிடம் கலந்து ஆலோசிக்கனும்னு சொல்ல, இளைஞன் முகத்தில் ஜென் புன்னகை!"
"ஐயோ, ஹெட்போனுடன் உள்ள என்னைக் கை காட்டி அப்பெண், மக்கள் எப்படி இப்படி கேட்ஜெட்களுக்கு அடிமையாக இருக்கிறார்களோ என்கிறாள்..."
"பார்ரா... காட்பாடியில் இறங்க வேண்டிய அவன் தனது டிக்கெட்டை சென்னை வரை நீட்டித்துவிட்டான்..."
"இணை நிறுவனர்கள் பயங்கர கணக்குப் போட்டு யோசிக்கிறார்கள் போலும் இந்த இளைஞனின் ஆஃபரை பற்றி... பேச்சே காணும்..."
"அட அவள் இப்போது சீரீஸ் ஏ முதலீடு பற்றி பேச்சு அடிபடுகிறது... அவன் எல்லாம் புரிவது போலவே ஒரு வித குழப்பத்துடன்."  

கணக்கு வழக்கு பற்றியக் கவலை எல்லாம் முதலீட்டாளர்களுக்குத் தான், ஆனால் பிசினஸ் உங்கள் ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும்..."
"இன்னும் முக்கால் மணி நேரம் தான் உள்ளது, டீல முடிங்க பாஸ்... ச்சே... இன்னுமா இணை நிறுவனர்கள் முடிவு எடுக்கறாங்க"
"ஐ... ஜாலி... இணை நிறுவனர்கள் இன்னும் மலிவான தளத்தை கண்டுபிடித்துள்ளனர் போலும்... அவன் மேலும் 2% தள்ளுபடி, இரவே டெலிவர தரத் தயார்..."

"இன்றைக்கு டெலிவரிக் கிடைக்காது போல.. அவன் அப்பாவிடம் போனில் கெஞ்சிக் கொண்டிருக்கிறான்..."

"டீல் தான் ஆனா அவளுக்கு மேலும் தள்ளுபடி வேணுமாம்ல... அவன் அவர்களின் நட்பு மீது சத்தியம் செய்து,தான் கொடுத்ததே சிறந்த விலை என்கிறான்..."
"சென்னையின் வாசம் வந்துவிட்டது... அவள் மீண்டும் போனில்..."
"சூப்பரு... டீல் முடிஞ்சுடுச்சு..."
"கலக்கிட்டான்... ரெசிப்ட் புக்கை எடுத்து நீட்டுகிறான் அவளிடம்..."
"அடடே... ஒரு ரூபாய் டோக்கனாக வாங்கிக் கொண்டு டீலை உறுதி படுத்திவிட்டான்... கடைசியில் அவளுடைய போன் நம்பரையும் வாங்கிவிட்டான்"
"அவன் அவளை தனது ஃபேக்டரியை பார்க்க அழைப்பு விடுக்கிறான்... அவளது அப்பா ஸ்டேஷனில் காத்திருக்கிறார்... அவன் இருவரையும் அழைத்து போகக் கூட ரெடி..."
"சென்னை வந்துடுச்சி... இல்ல இல்ல அவங்கள ஃபாலோலாம் பண்ண போறதில்ல..."
"இந்த ரகசியத்தை அவர்களிடம் சொல்லப் போவதில்லை"...
"பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்பது தவறு எனச் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள் என்னை"...

(பின்குறிப்பு: ட்விட்டரில் சம்பந்தப்பட்டவர் 'அவன் / அவள் / பையன் / பெண்' என்ற தொனியில் எழுதியதால், இருவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, பேச்சு நடைக்காக அதே நேரடி மொழியில் தமிழில் வழங்கியிருக்கிறோம். சுவாரசியம் மற்றும் தொழில்முனைவு போக்குகள் கருதியே வெளியிடப்படுகிறது).