அமெரிக்க பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியை!

0

இந்திய அமெரிக்க கணக்கு ஆசிரியர் ஃப்ளாரிடா பள்ளிக்கூடத்தில் அண்மையில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருந்து தன் மாணவர்களை காப்பாற்றியதற்கு பாராட்டுக்களை பெற்றுள்ளார். அந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். 

கணக்கு டீச்சரான சாந்தி விஸ்வனாதன் தன் வகுப்பில் இருந்தபோது அபாய மணி அடித்ததை அடுத்து, வகுப்பின் கதவுகளை மூடிவிட்டு, தன் மாணவர்களை டேபிளுக்கு அடியில் ஒளிந்துகொள்ளச் சொன்னார். வேகமாக ஜன்னல் கதவுகளையும் மூடிவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தியவன் கண்களில் படாதவாறு தன் வகுப்பு மாணவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார்.

“தன் விவேக புத்தியைக் கொண்டு உடனடியாக சாந்தி செயல்பட்டார். இதன் மூலம் பல மாணாவர்களை அவர் காப்பாற்றியுள்ளார்,” என டான் ஜார்பே என்ற சிறுவனின் மகன் பேட்டியில் கூறினார்.  

துப்பாக்கிச்சூடு முடிந்தபின், பாதுகாப்புப்படை அவரின் வகுப்பு அறையை திறக்கச்சொல்லி கதவை தட்டினர். ஆனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத சாந்தி, இது துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் தந்திரமாக இருக்கும் என்று சந்தேகித்து கதவை திறக்காமல் அமைதியாக இருந்துள்ளார். 

“கதவை உடைத்துக் கொண்டு வாருங்கள் அல்லது சாவி கொண்டு திறந்து வாருங்கள். நான் கதவை திறக்க மாட்டேன்,” என்றார். 

பின்னர் ஜன்னலை உடைத்து பாதுகாப்புக்குழுவினர் உள்ளே வந்தனர். நிகோலஸ் க்ருஸ் என்ற முன்னாள் மாணவர் ஃப்ளாரிடா பள்ளியில் அத்துமீறி நுழைந்து, ஏ.ஆர்.-15 ஆட்டோமேடிக் ரைஃபிள் கொண்டு 15 மாணவர்கள் மற்றும் இரண்டு பள்ளி பணியாளர்களை சுட்டுக்கொன்றார். 

நிகோலஸ் எதற்காக இப்படி சுட்டார் என்று தெரியவில்லை ஆனால் குழந்தைப்பருவம் முதல் இதுபோன்ற எண்ணங்கள் உடையவர் என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். சுமார் 40 நிமிட துப்பாக்கிச்சூடுக்கு பின்னரே அவரை போலீசார் மடக்கினர். 

இந்தியர்கள் பலர் வசிக்கும் அந்த பகுதியில் இறந்தவர்களில் எவரும் இந்தியர்கள் இல்லை என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

IANS