குழந்தை வளர்ப்பை மேம்படுத்தும் பத்திரிகை முயற்சி-'பேரன்ட் சர்கிள்'

2

கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து அமெரிக்காவை விட்டு தன் குழந்தைகளோடு வந்த நளினா ராமலக்ஷ்மிக்கு ஒரு பெரிய சவால் எதிர்நோக்கி இருந்தது. தன்னுடைய குழந்தைகளுக்கு புது சந்தர்ப்பங்களை புது இடத்தில் அளிக்க முயன்ற நளினாவுக்கு அதில் சில கஷ்டங்களை சந்திக்க வேண்டியதாக இருந்தது. பாரம்பரிய முறையையும் தற்போதைய வசதிகளையும் ஒருங்கே சேர்ந்து, அமெரிக்காவில் பின்பற்றிய அதே விதமான ஒரு வளர்ப்பு முறையை இங்கு எற்படுத்த எண்ணிய நளினா, ஒரு குழப்பமான சூழலில் இருந்ததை உணரவும் செய்தார்.

"என்னை போல மற்ற பெற்றோர்களும், குழந்தைகளுக்கு தேவையான நிகழ்ச்சிகள், வகுப்புகளை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் சிரமம் அடைவதை நான் கண்டேன்" என்று விளக்கும் நளினாவுக்கு அப்போது தான் ஒரு குழந்தை வளர்ப்பு சம்பந்தமான பத்திரிக்கையின் தேவை பற்றி புரிந்தது.

அதிலிருந்து உருவானது தான் "பேரன்ட் சர்கிள்" (Parent Circle) என்ற பத்திரிக்கை. குழந்தைகளின் முன்னேற்றத்தில் பங்குக்கொள்ள பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்று சேர்த்து குழந்தை வளர்ப்பிற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு இடமாக இந்த பத்திரிக்கை செயல்படுகிறது.

"ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். இந்த பத்திரிக்கையின் மூலம் பெற்றோர்களுக்கு சில விஷயங்களை கற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல், இறுதியில் ஒரு நல்ல தன்னம்பிக்கையுள்ள வளர்ந்த குழந்தைகளை உருவாக்க வேண்டும்." என்கிறார் நளினா. பெற்றோர் என்ற கட்டத்தை அடைந்து, அந்த பாதையில் பயணிக்கும்போது, நாம் செய்வது சரிதானா? நம் குழந்தைகளுடைய முழுமையான வளர்ச்சிக்கு நாம் என்ன செய்கிறோம்? என்று அடிக்கடி வியப்பதுண்டு. தவிர, எல்லா பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுடைய உணர்வு சம்பந்தமான விஷயங்களை அவ்வளவாக கண்டுக்கொள்வதும் இல்லை என்கிறார் நளினா.

இந்த பத்திரிக்கையின் மூலம் குழந்தைகள் நடத்தை முறைகள் (Behavioral Patterns), கற்றுக்கொள்ளும் விதம் போன்ற பல விஷயங்களை பற்றி சரியான விழிப்புணர்வு தருவது மட்டுமல்லாமல், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

"ஒரு சரியான சூழலை உருவாக்கி, அதன் கீழ் எல்லோரையும் ஒருங்கே இணைத்து அவர்களுக்குள் தெளிவான யோசனைகளை பகிர்ந்துக்கொள்வதற்கு ஒரு அடித்தளம் தான் இது" என்று பேரன்ட் சர்கிள் பத்திரிக்கையை பற்றி விளக்குகிறார் நளினா.

குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொண்டேன்

அமெரிக்காவில் பொறியியல் படிக்கும் 21 வயது மகன், மற்றும் 17 வயது மகள் என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயான நளினா, அவர்களிடமிருந்து தான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்.

"என்னுடைய வாழ்க்கையில் தினமும் ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்னுடைய குழந்தைகளிடமிருந்து தான் நான் அதிகமாக கற்றுக்கொள்கிறேன். என்னால் அவர்களுக்கு உதவ முடியும் என்று தெரிந்திருந்தாலும் கூட, என்னால் அவ்வாறு செய்ய முடியாமல் வெறுமனே உட்கார்ந்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும் போது, எனக்கு அது ஒரு சவாலாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட சூழலை எதிர்க்கொள்ள மற்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது நிபுணர்களை அணுக வேண்டும் என்ற எண்ணம் அப்போது தான் வரும். எனக்கும் அத்தகைய சந்தர்ப்பங்கள் மற்றும் சூழல் வந்த சமயத்தில் மற்ற பெற்றோர்களிடம் நான் பேசினேன்." இது போல எல்லா பெற்றோர்களும் ஒருவருக்கொருவர் சில நுண்ணிய விஷயங்களை பரிமாறிக்கொள்வதால் பல விதத்தில் அவர்களுக்கு அது நன்மையை ஏற்படுத்தும் என்கிறார் நளினா.

2010ம் ஆண்டில் திட்டமிட்டு, 2011ம் ஆண்டில் பேரன்ட்ஸ் சர்கிள் பத்திரிக்கையை தொடங்குவதற்கு முன், நளினா ஒரு அம்மாவாக மட்டுமே தனது கடமைகளை செய்திருக்கிறார். சாஃப்ட்வேர் பொறியாளர் என்ற அடையாளமும், சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஈடுபட்டதால், மார்க்கெட்டிங், தொழில் திட்டம் இது பற்றிய போதிய முன் அனுபவமும் நளினாவுக்கு அப்போது கைக்கொடுத்தது.

நளினாவின் முன்மாதிரி

நளினாவுக்கு ஒரே முன்மாதிரி என்று எப்போதுமே கிடையாது. "என்னுடைய அம்மாவிடமிருந்து பெருந்தன்மை மற்றும் ஆர்வத்தை கற்றுக்கொண்டேன். என்னுடைய அப்பாவிடமிருந்து கவனம் செலுத்துவது மற்றும் மரியாதையை கற்றுக்கொண்டேன். பாட்டியிடமிருந்து அன்பு செலுத்துவது எப்படி என்று கற்றுக்கொண்டேன். அடிக்கடி கனவு காண்பது என்னுடைய வாடிக்கை. இதனாலேயே, கனவுகளை நினைவாக்க துடிக்கும் நபர்கள் என்னை ஊக்குவிப்பார்கள்." என்று விளக்கும் நளினா தமிழ்நாட்டில் படிப்பை முடித்து திருமணம் முடித்து அமெரிக்கா சென்று அங்கு தன்னுடைய மேற்படிப்பை படித்தார். தற்போது இவர் வசித்து வரும் இடம் சென்னை.

இனி டிஜிட்டல் வழியில் இந்த பயணம்

டிஜிட்டல் வழியில் இந்த பத்திரிக்கையை எடுத்து செல்வதே, நளினாவுடைய அடுத்தகட்ட திட்டம். இதன் மூலம், பல வகையான சின்ன நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருக்கும் பெற்றோர்கள் மற்றும் நிபுணர்களை சென்றடைவது சாத்தியம் என்று நளினாவின் தீர்க்கமான நம்பிக்கை.

"ஒரு முன்னேற்றத்தை நோக்கி, மாறும் சூழலில் இருக்கும் நடுநிலை யுக பெற்றோர்கள் தான் நாம். தற்போதைய நவீன யுகத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு இன்னும் எளிதாக உதவக்கூடிய டிஜிட்டல் வழி வளர்ப்பு முறைகளுக்கான தேவை இருக்கிறது. இன்னும் எளிதாக எல்லா மக்களையும் சென்றடைய பிராந்திய மொழிகளிலும் பேரன்ட்ஸ் சர்க்கிளை விரிவுபடுத்த உள்ளோம்." என்று தன்னுடைய அடுத்த கட்ட திட்டங்களை பற்றி விளக்கும் நளினா, தற்போதைய வளர்ப்பு முறையில் குழந்தைகள் பெற்றோர்களை கேள்வி கேட்டு, அறிவை பெருக்கிக்கொண்டு தங்களுடைய நிலையை உலகளவில் எட்டும் விதத்தில் இருப்பது தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றும் தெரிவிக்கிறார்.

"பெற்றோர்களுக்கு, தங்களுடைய குழந்தைகளுக்கு எது சரி எது கூடாது என்ற முடிவை திடமாக எடுக்க வேண்டி ஆலோசனை தரப்படும் ஒரு சின்ன உதவி தான் இந்த பத்திரிக்கையுடைய முயற்சி. தங்களுடைய குழந்தைகளுக்கு இத்தனை விஷயங்களை சரியான விதத்தில் தரமுடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு வரும்." என்று விவரிக்கும் இந்த தொழில்முனைவருக்கு, பெற்றோர்களை சந்தித்து பேசுவதை தவிர்த்து, பொழுதுபோக்கு என்றால், வெவ்வேறு இடங்களுக்கு பயணித்தல், ஓவியம் வரைதல் போன்றவையே.