ஜி.எஸ்.டி.யை தடையின்றி செயல்படுத்த கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு நீக்கியுள்ள செஸ் வரிகள்! 

2

வரும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து (01.07.2017) ஜி.எஸ்.டி.யை தடையின்றி செயல்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆண்டு நிதி நிலை அறிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு செஸ் வரிகளை நீக்கியுள்ளது. இந்த செஸ் வரிகளை மத்திய அரசு படிப்படியாக நீக்கியுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி.காக பல்வேறு வரி விகித பிரிவுகளில் பல்வேறு சரக்கு மற்றும் சேவை வரிகளை எளிதில் செயல்படுத்த முடியும்.

2015-16 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு வரிக்குட்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகளிலான இரண்டாம் நிலை மற்றும் உயர் கல்வி செஸ் உள்ளிட்ட கல்வி செஸ்களை நீக்கி உள்ளது.

2016-17 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு தொழிலாளர் நலன் செஸ் சட்டம், 1976ல் திருத்தம் செய்து இரும்பு தாது சுரங்கங்கள், மாங்கனீசு தாது சுரங்கங்கள் மற்றும் கிரோம் தாது சுரங்கங்கள் மீதான செஸ் உள்ளிட்ட மூன்று செஸ்கள், சிமென்ட், கோரைப் பலகைகள் மீதான செஸ்கள் நீக்கப்பட்டுள்ளன. புகையிலை செஸ் சட்டம், 1975ல் திருத்தம் செய்யப்பட்டு புகையிலை மீதான செஸ் நீக்கப்பட்டது. சினிமா தொழிலாளர்கள் நலன் சட்டம், 1981ல் திருத்தம் செய்யப்பட்டு சினிமா தொழிலாளர்கள் நலன் மீதான செஸ் நீக்கப்பட்டது.

2017-18 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செஸ் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செஸ் மீதான செஸ் நீக்கப்பட்டது.

வரி விதிப்புகள் திருத்தம் சட்டம் 2017 மூலம் மத்திய அரசு கீழ் உள்ள செஸ்களை நீக்கியுள்ளது. இந்த திருத்தங்கள் ஜி.எஸ்.டி. சட்டம் செயல்படுத்தப்படும் தேதியில் அமல்படுத்தப்படும்.

i. ரப்பர் சட்டம் 1947 – ரப்பர் மீதான செஸ்

ii. தொழிற்சாலைகள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1951 – மோட்டார் வாகனங்கள் மீதான செஸ்

iii. தேயிலைச் சட்டம் 1953 – தேயிலை மீதான செஸ்

iv. நிலக்கரி சுரங்க (பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு) சட்டம், 1974 – நிலக்கரி மீதான செஸ்

v. பீடி தொழிலாளர் நலன் சட்டம் 1971, பீடி மீதான செஸ்

vi. நீர் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு) செஸ் சட்டம் 1977 - சில தொழிற்துறைகள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் பயன்படுத்தும் நீர் மீதான் செஸ்

vii. சர்க்கரை செஸ் சட்டம் 1982, சர்க்கரை துறை மேம்பாட்டு நிதி சட்டம் 1982 - சக்கரை மீதான செஸ்

viii. சணல் உற்பத்தியாளர்கள் செஸ் சட்டம் 1983 - சணல் பொருட்கள் உற்பத்தி அல்லது சணல் கலந்த பொருட்கள் உற்பத்தி மீதான செஸ்

ix. நிதி (2) சட்டம் 2004 – சுங்க வரி விதிக்கப்படக்கூடிய சரக்குகள் மீதான கல்வி செஸ்

x. நிதி சட்டம் 2007 – சுங்க வரி விதிக்கப்படக்கூடிய சரக்குகள் மீதான இரண்டாம் நிலை மற்றும் உயர் கல்வி செஸ்

xi. நிதி சட்டம் 2010 - சுத்தமான எரிசக்தி செஸ்

xii. நிதி சட்டம் 2015 – தூய்மை இந்தியா செஸ்

xiii. நிதி சட்டம் 2016 - உள்கட்டமைப்பு செஸ் மற்றும் விவசாய நலன் செஸ்

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின்னும் கீழ்கண்ட வரிகள் வசூலிக்கப்படும். ஏனெனில் இவை ஜி.எஸ்.டி. வரி திட்டத்தின் கீழ் அடங்காது

நிதி சட்டம் 2007 – இறக்குமதி செய்யப்பட சரக்குகள் மீதான இரண்டாம் நிலை மற்றும் உயர் கல்வி செஸ்

எண்ணெய் தொழில் மேம்பாட்டு சட்டம், 1974 கீழ் உள்ள கச்சா பெட்ரோல் எண்ணெய் மீதான செஸ், மோட்டார் வாகன எரிபொருள் (சாலை செஸ்) மீதான கூடுதல் சுங்க வரி, அதிவேக டீசல் எண்ணெய் (சாலை செஸ்) மீதான கூடுதல் சுங்க வரி, மோட்டார் வாகன எரிபொருள் மீதான சிறப்பு கூடுதல் சுங்க வரி, புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் மற்றும் கச்சா பெட்ரோலிய எண்ணெய் மீதான தேசிய பேரழிவு இடர்எதிர் வரி.