ஏஆர் ரஹ்மானின் பாராட்டைப் பெற்ற கிராமத்துப் பாடகி!

0

சமூக வலைதளம் மூலை முடுக்குகளில் இருக்கும் திறமைகள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. பிரபுதேவா மற்றும் நக்மா நடித்து 1994-ம் ஆண்டு வெளியான தமிழில் ‘காதலன்’, தெலுங்கில் ’ப்ரேமிக்குடு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ செலியா’ (என்னவளே...) பாடலை 40 வயது பெண் ஒருவர் பாடிய வீடியோ ஒன்று பல்வேறு சானல்களில் வைரலாக பரவியுள்ளது. இவர் பாடிய விதம் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்து விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை ஆச்சரியப்படவைத்தது. 

ரஹ்மான் தனது பாடலை பாடிய பெண்ணின் வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் ’அறிமுகமில்லாத பெயர் தெரியாத நபரின் அருமையான குரல்’ என்கிற தலைப்பில் பகிர்ந்துகொண்டார்.

இந்தப் பெண் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வடிசலேறு கிராமத்தைச் சேர்ந்த பேபி என ’தி ஸ்க்ரோல்’ குறிப்பிட்டுள்ளது. நீல நிற புடவை அணிந்து ப்ளாஸ்டிக் பக்கெட் அருகில் அமர்ந்திருக்கும் இவர் இந்தத் தெலுங்கு பாடலை அருமையாக பாடியுள்ளார். ரஹ்மானின் பாராட்டைப் பெற்ற பிறகு இவரது வீடியோ 25,000-க்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

பிராந்திய தொலைக்காட்சி சானல் HMTV அவரைத் தொடர்புகொண்டபோது ’கோட்டி’ என்கிற சலூரி கோட்டேஷ்வர ராவ் ஒரு பெரிய ப்ராஜெக்டிற்காக அவரைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். வேலையில் இருக்கும்போது பேபி பாடுவார் என்றும் உடன் பணிபுரிபவர்கள் பாராட்டியுள்ளதாகவும் ’தி க்விண்ட்’ அறிக்கை குறிப்பிடுகிறது. ஒரு சமயம் அருகில் வசிப்பவர் பாட்டு கற்றுத்தருமாறு இவரைக் கேட்டுள்ளார். 

இறுதியாக பேபியின் பாடலை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவரிடம் போன்கூட இல்லை. தான் பிரபலமாவோம் என இவர் நினைத்துக்கூட பார்த்ததில்லை என்கிறார்.

1994-ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் தமிழ் மொழியிலும் வெளியானது. ’ஓ செலியா’ பாடல் தமிழில் பிரபலமான ’என்னவளே’ பாடலாகும். இது வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணம் ஏஆர் ரஹ்மான்.

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்கிற தொழிலாளர் விஸ்வரூபம் திரைப்படத்தில் இடம்பெற்ற சங்கர் மஹாதேவனின் பாடலை பாடி ஆன்லைனில் பிரபலமானார். இசையமைப்பாளர்கள் இவரை பாராட்டி வாய்ப்பு வழங்கியதாக ’இண்டியா டுடே’ தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA