மார்ச் 29 முதல் 31ம் தேதி அரசு விடுமுறை நாட்களிலும் வருமான வரித்துறை இயங்கும்!

0

எல்லா ஆண்டை போலவும் இந்த ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இறுதி நாள் மார்ச் 31 ஆகும். ஆனால் வரும் 29, 30, 31 அரசு விடுமுறை என்பதால் இந்த நாட்களில் அலுவலகம் இயங்காது என பல வதந்திதகள் பரவி வந்த நிலையில் இந்த மூன்று விடுமுறை நாட்களிலும் இந்தியாவில் உள்ள அனைத்து வருமான வரித் துறை அலுவலகங்கள் இயங்கும் என நிதி அமைச்சர் அறிக்கை விட்டுள்ளார்.

மார்ச் 29 மஹாவீர் ஜெயந்தி மற்றும் மார்ச் 30 புனித வெள்ளி; இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வார இறுதி விடுமுறைகள்; இதனை முன்னிட்டு மற்ற அலுவலகங்கள் விடுமுறை அளித்தாலும் இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், அனைத்து மக்களையும் வருமானவரி தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு அளிக்கவும் இந்த விடுமுறை நாட்களிலும் வருமான வரித்துறை அலுவலகத்தை இயக்குகின்றனர்.

"வருமான வரி செலுத்துதல் மற்றும் அது தொடர்புடைய பணியை நிறைவு செய்வதற்கு வசதியாக, இந்தியா முழுவதும் அனைத்து வருமான வரி அலுவலகங்கள் 29, 30 மற்றும் மார்ச் 31, 2018 அன்று இயங்கும்,”

என நிதி அமைச்சர் தன் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். வரும் 31க்குள் 2017-18க்கான வருமான வரி மற்றும் 2016-17க்கான வருமான வரியை தாக்கல் செய்து விட வேண்டும். இதுவே இறுதி நாளாகும், இதை குறித்து வருமான வரித்துறை பல மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் அனுப்பி வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை வருமானவரி தாக்கல் செய்யாதவர்கள் இந்த மூன்று நாட்களில் தாக்கல் செய்துக்கொள்ளலாம்.

இதோடு, நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு எந்த வங்கியும் இயங்காது எந்த நிதி போக்குவரத்தும் நடக்காது என சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. அரசு அறிவித்தபடி மார்ச் 29 மற்றும் 30 தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை தான், ஆனால் 31 ஆம் தேதி சனிக்கிழமை எப்பொழுதும் போலவே வங்கிகள் இயங்கும். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் (ஏப்ரல் 2) ஆண்டு நிறைவு நாள் அன்று வங்கிகள் இயங்காது. 

ஆன்லைன் மூலம் வருமானவரி தாக்கல் செய்யும் லின்க்