உங்களுக்குத் தேவையான திறன்களை இலவசமாக கற்றுக்கொடுக்கும் முன்னணி வலைதளங்கள்!

1

அனைத்தும் ஆன்லைன் மயமாகி வரும் நிலையில் பல ப்ரொஃபஷனல்கள் தங்களது படிநிலையில் அடுத்த அடியெடுத்து வைக்க நிச்சயம் இ-லெர்னிங் ஒரு முக்கிய வழிகாட்டியாக இருக்கும். இலவசமாக பரிசோதிப்பதற்காக கோர்ஸ்களை வழங்கும் 12 வலைதளங்களை பயன்படுத்திய பிறகு ஒருவரின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த அனுபவத்திற்கு உதவக்கூடிய ஒரு சில வலைதளங்களை பரிந்துரைத்துள்ளோம்.

ஸ்கில்ஷேர் (Skillshare)

துறையில் முன்னணியில் இருப்பவர்கள் தங்களது திறன்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் இந்த வலைதளம் சமீபத்தில் பிரபலமடைந்து வருகிறது. செத் கோடின் தொழில்முனைவு மற்றும் மார்கெட்டிங் குறித்தும், கை கவாசகி வளர்ச்சி குறித்தும், புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஆரன் ட்ரேப்ளின் கமர்ஷியல் லோகோக்களை சிறப்பாக வடிவமைப்பது குறித்தும் புகழ்பெற்ற க்ராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பாளர் யங் குரு DJ+மிக்சிங் மற்றும் பல்வேறு புகழ்பெற்ற ப்ரொஃபஷனல்கள் தங்களது துறைசார்ந்த வணிக நுணுக்கங்களை இலவசமாக கற்றுக்கொடுக்கின்றனர் (30 நாட்களுக்கு). 

உங்களது தற்போதைய வளர்ச்சியுடன் சிறப்பாக இணைந்திருக்கும் விதத்தில் இதன் அபாரமான செயலி அமைந்திருப்பது ஸ்கில்ஷேரின் சிறப்பம்சமாகும். இதுவே இதன் போட்டியாளர்களைக் காட்டிலும் ஸ்கில்ஷேர் சிறப்பாக விளங்கக் காரணம். அதாவது நீங்கள் சிறு பயணம் மேற்கொள்ளும்போதும் உங்கள் மொபைலில் நீங்கள் தேர்வு செய்யும் ஒரு கோர்ஸை காணமுடியும். இதில் 17,000 வகுப்புகள் உள்ளன. ஆகவே ஒரு மாத இலவச பயிற்சியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். கூடுதலாக ஒரு மாதம் பயிற்சி பெற (மொத்தம் 2 மாதம்) இங்கே க்ளிக் செய்யவும். http://skl.sh/dslr-letters

EdX – பத்து வருட கடின உழைப்பைக் கொண்டும் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் உடன் இணைந்தும் அதிகளவிலான கோர்ஸ்களை உருவாக்கியுள்ளனர். ஹார்வேர்ட், ஸ்டான்ஃபோர்ட் மற்றும் பிற ஐவி லீக் பள்ளிகள் போன்றவற்றின் கோர்ஸ்களுடன் EdX ஒரு சிறப்பான கல்விக்கான வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் வழங்கி முக்கிய திறன்கள் பெறவும் உதவுகிறது. நீங்கள் கற்றுக்கொள்ள பல்வேறு சிறப்பான கோர்ஸ்களை இலவசமாக வழங்குகிறது. நீங்கள் பணம் செலுத்தி சான்றிதழ் கோர்ஸ்களை தேர்ந்தெடுக்கும்போதும் இந்த கோர்ஸ்களை உங்களுக்கு வழங்குகிறது EdX. நீங்கள் தொழில்நுட்ப நிபுணராக இல்லையென்றாலும் அவர்களது லாஜிக்கல் திங்கிங் மற்றும் கோட் ஸ்ட்ரக்சர் வகுப்புகளை முயற்சிக்கலாம். அவை மிகவும் சிறப்பாக உள்ளது.

லிண்டா.காம் (Lynda.com) – சில ஆண்டுகளுக்கு முன்பு லிங்க்ட்இன் வாங்கிய லிண்டா.காம், டிஜிட்டல் கல்வி மற்றும் கற்றல் பிரிவில் முன்னோடியாக இருந்தவற்றுள் ஒன்றாகும். ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் வகுப்பை எடுத்துக்கொண்டேன். இந்த வலைதளத்தை நிச்சயம் உங்களுக்கு பயன்படும் என்பதால் பரிந்துரைக்கிறேன். பல்வேறு வகுப்புகளின் தொகுப்பு இதில் உள்ளது. இந்த இ-லெர்னிங் தளம் ஒரு தனித்துவமான கற்பித்தல் முறையை விளக்கங்களுடன் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. மற்ற வலைதளங்களைப் போலல்லாமல் நீங்கள் கற்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் தனித்துவமாக அமைந்துள்ளது. பெரும்பாலான ஆன்லைன் தளங்களில் இ-லெர்னிங்கில் தக்கவைக்கும் விகிதம் 20 சதவீதம் குறைந்துவிடுவது மிகபெரிய சவாலக உள்ளது. லிண்டாவின் கோர்ஸ்கள் வேறுபட்ட ஆசிரியர்களால் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கோப்புகள், செயல்முறை பயிற்சிகள், வளர்ச்சிக்கான சார்ட் போன்றவற்றை உள்ளடக்கியிருப்பதால் நீங்கள் வகுப்பறையில் நேரடியாக கற்கும் உணர்வை ஏற்படுத்தும். லிண்டாவின் டிஜிட்டல் மார்கெட்டிங், தொழில்முனைவு, நிதி சார்ந்த வகுப்புகளுக்காகவே இந்தத் தளம் பரிந்துரைக்கப்படுகிறது.

கோட்அகாடெமி (CodeAcademy) – கோடிங்கை இலவசமாக கற்பதற்கு இந்தத் தளம் உதவுகிறது. ப்ரோக்ராமர் அல்லாதவர்களும் வலைதள வடிவமைப்பு, செயலி வயர்-ஃப்ரேமிங், கோடிங் மேனேஜ்மெண்ட் போன்ற அடிப்படை திறன்களை எளிதாகப் பெற உதவுகிறது. அனைத்தும் தொழுல்நுட்பமயமாகி வரும் 2017-ல் உங்களை சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள நீங்கள் கோடர்களின் மொழியில் பேசவேண்டிய அவசியம் உள்ளது. இதனால் இது அனைவரும் பெறவேண்டிய சிறப்பான திறனாகும். உங்களது ஸ்டார்ட் அப்பில் ஒரு சமச்சீரான சூழ்நிலையை நீங்க உருவாக்க நினைத்தால் உங்களது கோடிங் அறியாதவர்கள் அடிப்படை திறன்கள் பெறவும் கோடிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் தங்களது கற்றலை மேம்படுத்திக்கொள்ளவும் இந்தத் தளத்தை பரிந்துரைக்கலாம்.