திருமணமாகாத ஜோடிகளுக்கு ஹோட்டல்களில் அறைகள் வழங்கும் சேவையை அளிக்கும் 'ஓயோ ரூம்ஸ்'

‘திருமணமாகாத ஜோடிகளுக்கு ஹோட்டல் அறைகள் இல்லை’ என சில ஹோட்டல்களில் உள்ள நிலைபாடை இந்த நிறுவனம் மாற்றியமைத்துள்ளது!

1

சுனில் மற்றும் அம்ருதா என்ற இளம் ஜோடியினரை பொறுத்தவரை வெளியூர் பயணங்கள் என்பது மிகவும் நெருக்கடியான ஒன்றாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக வெளியூர்களில் தங்குவதற்கான அறைகளை தேர்வு செய்யும் போதோ அல்லது, ஹோட்டல்களில் அறை எடுக்கும் போதோ மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அறைகள் குறித்த ஆலோசனைகள் அவர்களுக்கு கூறும் முன்னர் நாம், ஒன்றை தெளிவாக புரிந்து கொண்டாக வேண்டும். சுனிலும், அம்ருதாவும் இதுவரை திருமணம் ஆகாதவர்கள் என்பதே அது.

இந்தியாவில், திருமணமாகாத ஜோடியினர் ஹோட்டல்களில் அறை தேடுவது என்பது, பொதுவான ஒன்றாக இல்லாமல், ஹோட்டல் ஊழியர்களால் விலக்கப்பட்ட, ஒழுக்கக் கொள்கைக்கு எதிரான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

“மன்னிக்கவும்! நீங்கள் திருமணமாகாத ஜோடி... உங்கள் கழுத்தில் தாலியை காணவில்லையே... நீங்கள் திருமணமானவர் என்பதை நிரூபிக்க ஏதேனும் அடையாளத்தை எனக்கு காண்பிக்க முடியுமா? “ என ஒரு நீண்ட பட்டியலுடன் கேள்விகள் அடுக்கடுக்காக எழுப்பப்படும்.

இத்தகைய கேள்விகள், இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய உறவை அப்பட்டமாக வேறுபடுத்தி பார்க்கப்படுவதை உணர்த்துகிறது. இதன் விளைவாகவே, திருமணமாகாத ஜோடிகள், ஒரு இரவை கழிக்க விரும்பி அதற்காக அறையை வாடகைக்கு எடுக்க விரும்பினால் அனைவராலும் வேண்டா வெறுப்புடன் பார்க்கப்படுகின்றனர். இதனை போக்கவே, 'ஸ்டே அங்கிள்' (Stay Uncle), 'ஓயோ ரூம்ஸ்' (OYO Rooms) உள்ளிட்ட ஸ்டார்ட் அப்'கள் ‘ரிலேஷன்ஷிப் மோட்’ (Relationship Mode) என்ற பெயரில் இந்தக் களத்தில் குதித்துள்ளன.

‘திருமணமாகாத ஜோடிகளுக்கு ஹோட்டல் அறைகள் இல்லை’ என சில ஹோட்டல்களில் உள்ள நிலைபாடுகளை இந்த நிறுவனங்கள் மாற்றியமைக்கிறது. ஓயோ ரூம்ஸ் ரிலேஷன்ஷிப் மோடில், பட்டியலிடப்பட்ட சில ஹோட்டல்களில் திருமணமாகாத ஜோடிகள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஹோட்டல்கள், திருமணமாகாத ஜோடிகளை உள்ளூர் அடையாள அட்டைகள் இருந்தால் கூட எந்தவித தொந்தரவும் இன்றி அனுமதிக்கின்றன.

திருமணமாகாத ஜோடிகள் பலர் கடைசி நிமிடங்களில் ஹோட்டல்களில் அனுமதிக்கப்படாமல் அசௌகரியத்தை சந்திப்பதாக, தங்களுக்கு கருத்துக்கள் மூலம் தெரிய வந்தது என்று ஓயோ நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி அதிகாரி கவிக்ருட் கூறினார். ஹோட்டலின் கொள்கைகளை சரியாகவும் தெளிவாகவும், முன்னரே கூறாமலிருப்பது தான் இதற்குக் காரணம் என்கிறார் அவர். இதுகுறித்து யுவர் ஸ்டோரியிடம் அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் எங்கள் பார்ட்னர்களுக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், ஓயோ விற்கு வரும் ஒவ்வொரு விருந்தினரும் நல்ல முறையில் நடத்தப்படவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். எனவே எங்கள் குழுவினர், இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் நல்ல உள்ளடக்கத்துடன் கடுமையாக உழைக்கின்றனர். இந்தியாவில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அறைகள் கொடுப்பதை தடுக்கும் வகையிலோ அல்லது ஹோட்டல் இருக்கும் அதே நகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறை வழங்குவதை தடுக்கவோ எந்தவித சட்டமும் இல்லை."

இருப்பினும், சில ஹோட்டல் பார்ட்னர்கள் இது போன்ற அனுமதிகளுக்கு சில கட்டுப்பாடுக்களை விதிக்கின்றனர். தேவையான அடையாள அட்டைகளை ஆதாரமாக சமர்ப்பிப்பதன் மூலம், எந்தெந்த ஹோட்டல்கள், ஜோடியாக வரும் விருந்தினர்கள் தங்குவதற்கு அனுமதிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் வண்ணம் வெளிப்படையாகவே பட்டியலை உருவாக்கியுள்ளதாக இந்த குழுவினர் கூறுகின்றனர். இவற்றை கம்பெனியின் இணைய தளம் மற்றும், செயலியில் பட்டியலிட்டுள்ளனர்.

செயலியில், 'மை அக்கவுன்ட்' என்ற பிரிவில் ரிலேஷன்ஷிப் என்ற இடத்தில் குறிப்பிட்ட மாற்றத்தை தெரிவித்தவுடன் 'ரிலேஷன்ஷிப் மோட்' என்ற பயன்பாடு உங்களுக்கு காட்டப்படும். 

வாடிக்கையாளர் நலன் சார்ந்த வணிகம் என்பதால், தங்கும் அனுபவத்தை பாதிக்கும் எந்தவித பிரச்சினைகளையும் கண்டுபிடித்து அவற்றை சரி செய்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஓயோ இருப்பதாக நாங்கள் உறுதி அளிக்கிறோம். அதனை நிறுவுவதன் மூலம், ஜோடியினர் எந்தவித தொந்தரவும் இல்லாமல், தங்களுக்குத் தேவையான அறையை கண்டுபிடித்து, செக் இன் செய்துவிட முடியும்.

இது போன்ற ஜோடிகளுக்கு உதவும் வகையிலான ஓயோ ரூம்கள், இந்தியா முழுவதும் 100 நகரங்களில் இருப்பதாக இந்த குழுவினர் கூறுகின்றனர். இவற்றில் பல மிக முக்கிய மெட்ரோ நகரங்களிலும், கோடைவாசஸ்தலங்களிலும் உள்ளன. மேலும் 6500 பார்ட்னர்களுடன் 200 நகரங்களில் 70000 அறைகளின் மூலம் இந்த நிறுவனத்தினர் இந்த சேவையை அளிக்கின்றனர்.

இதனை முன்னெடுத்து செல்லும் சூழலில், ஸ்டே அங்கிள் மற்றும் ஓயோ ஆகிய இரண்டுமே உள்ளூர் அதிகாரிகள் மட்டுமல்லாது, கண்காணிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரால் கிளப்பப்படும் ஒழுக்கக் கொள்கையை எதிர்கொண்டாக வேண்டும். பொது இடங்களில் ஜோடியினர், கைகளை பிடித்து நடப்பதையே, நாட்டின் கலாச்சாரக் கேடாக பார்க்கும் நம் சமுதாயத்தில், இதுபோன்ற திருமணமாகாத ஜோடிகளுக்கு ஹோட்டல்களில் ரூம் அளிப்பதை ஏற்றுக் கொள்ளும் அளவு மனப்பக்குவம் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். 

ஆங்கிலத்தில்: சிந்து கஷ்யப்