பிரம்மபுத்ரா நதியில் குதித்து மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்...

0

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் குழந்தைகள் மும்முரமாக இருக்கும் காலகட்டத்தில் 11 வயதுடைய கமல் கிஷோர் தாஸ் உயிரைக் காக்கும் செயலைச் செய்துள்ளார். தனக்கு ஏற்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் குவாஹத்தியைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அம்மா, அத்தை மற்றும் படகில் பயணித்த மற்றொரு நபரையும் பிரம்மபுத்ரா நதியில் மூழ்கிவிடாமல் காப்பாற்றியுள்ளார். 

இந்தச் சம்பவம் வடக்கு குவாஹத்தியில் நடந்தது. பயணிகளுடன் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் சென்றுகொண்டிருந்த படகு ஒரு பாறையில் மோதி நிலைகுலைந்தது. பயணிகள் அனைவரும் தண்ணீரில் விழுந்தனர். எனினும் கமல் பாதுகாப்பான இடத்திற்கு நீந்திச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் தனது அம்மாவும் அத்தையும் நீரில் மூழ்குவதை உணர்ந்தார். மீண்டும் நீந்தியபடி சென்று முதலில் தனது அம்மாவும் பிறகு அத்தையும் அந்நியர் ஒருவரும் பத்திரமாக கரைசேர உதவினார்.

’தி செண்டினல்’ உடனான உரையாடலில் கமல் கூறுகையில்,

"படகு பாறையை மோதியபோது என் அம்மா என்னுடைய ஷூக்களை கழற்றிவிட்டு கரையை நோக்கி நீந்திச் சொன்னார். நான் கரையைச் சென்றடைந்தேன். அதன் பின்னரே என் அம்மாவும் அத்தையும் என்னைத் தொடர்ந்து வரவில்லை என்பதை உணர்ந்தேன். என் அம்மாவிற்கு நீச்சல் தெரியாது. சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று என் அம்மாவைக் கண்டுபிடித்தேன். நீரோட்டம் வேகமாக வந்துகொண்டிருந்தது. முதலில் அவரது தலைமுடியை மட்டுமே என்னால் பிடிக்கமுடிந்தது. அதன் பிறகு அவரது கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றேன்,” என்றார்.

கமல் அவரது அம்மாவைக் காப்பாற்ற உதவுவதில் மும்முரமாக இருந்த சமயத்தில் ஒரு அம்மாவும் பச்சிளம் குழந்தையும் தப்பிக்க வழியின்றி உயிரிழந்ததைக் கண்டதாக தி பெட்டர் இண்டியாவிடம் தெரிவித்தார்.

கமல் வடக்கு குவாஹத்தியில் உள்ள செயிண்ட் அந்தோனிஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். படகின் என்ஜினில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அஷ்வக்லந்தா கோயிலின் கரைக்கு அருகில் உள்ள பாறையில் மோதியதாக DNA தெரிவிக்கிறது. 22 பயணிகளிடம் மட்டுமே முறையான டிக்கெட் இருந்ததாகவும் படகில் 18 மோட்டார் பைக்குகள் ஏற்றப்பட்டு நெரிசல் அதிகம் இருந்துள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL