மக்களவைவின் முதல் பெண் செயலராக பொறுப்பேற்றுள்ளார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ஸ்நேஹ்லதா ஸ்ரீவஸ்தவா 

0

மத்திய பிரதேச மாநிலத்தின் 1982-ம் ஆண்டு பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியான ஸ்நேஹ்லதா ஸ்ரீவஸ்தவா மக்களவையின் முதல் பெண் செயலளராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிக்கை தெரிவிக்கிறது. சமீபத்தில் அனூப் மிஸ்ரா ஓய்வுபெற்றதை அடுத்து ஸ்நேஹ்லதா இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.


35 ஆண்டு கால நிர்வாக அனுபவம் பெற்றுள்ள ஸ்ரீவஸ்தவா கேபினட் செயலர் அந்தஸ்து மிக்க இந்த பதவியை டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் ஏற்றுள்ளார். 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது பதவி காலம் முடிவடையும்.

மத்திய பிரதேச அரசின் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையில் முதன்மை செயலராக பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் துறைகளிலும் முக்கியப் பதிவி வகித்துள்ளார். சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் முதலில் இணை செயலராகவும் அதன் பின்னர் செயலராகவும் பணியாற்றியுள்ளார். நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும் பணியாற்றியுள்ளார் என்று ’டைம்ஸ் நௌ’ தெரிவிக்கிறது.

ஸ்ரீவஸ்தவா மத்திய பிரதேசத்தில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி பிறந்தார். பொருளாதாரம், புவியியல், பிராந்திய திட்டமிடல் உள்ளிட்ட பிரிவுகளில் எம்ஃபில் முடித்துள்ளார். தேசிய வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இ-கவர்னன்ஸ் வலிமையில் நம்பிக்கை கொண்டுள்ள இவர் அமைச்சகத்தின் அதிகாரிகள் இ-ஃபைலிங்கை கடைபிடிக்க ஊக்குவிக்கிறார்.

டிசம்பர் மாதம் 15-ம் தேதி குளிகால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பே புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவையில் முதல் பெண் செயலராக நியமனமான பெருமை ரமாதேவியைச் சேரும்.

கட்டுரை : Think Change India