யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் அசாம் பெண்!

0

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு அசாம் மாநிலம் மகிழ்ச்சியடைவதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது. இந்த மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 661-வது ரேங்கில் தேர்வான முதல் பெண்மணி பானி குமாரி தெலங்கா.

முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் பர்கி பிரசாத் தெலங்காவின் மகளான பானி, துர்காபூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உலோகவியல் பொறியியல் பிரிவில் பி.டெக் பட்டதாரி ஆவார். செயிண்ட் மேரீஸ் உயர் நிலைப் பள்ளியிலும் குவாஹத்தி காட்டன் கல்லூரியிலும் பள்ளிப்படிப்பை முடித்த இவர் வடகிழக்கு பகுதியில் இந்த ஆண்டு யுபிஎஸ்சி-யில் தேர்வான 25 பேரில் ஒருவர் ஆவார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் செய்து வந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்விற்குத் தயாரானார்.

”இதற்கு முன்பு இரண்டு முறை முயற்சி செய்த போதும் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை. நான் என் பணியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் தேர்விற்குத் தயாராகத் துவங்கினேன். தற்போது எந்தவிதமான சிவில் சர்வீஸ் பணியையும் ஏற்றுக்கொள்ள தயார்நிலையில் இருக்கிறேன். ஆனால் ஐஏஎஸ் முயற்சியை கைவிடமாட்டேன்,” என்று ’தி அசாம் ட்ரிப்யூன்’-க்கு பானி தெரிவித்தார்.

பானியின் அப்பா பர்கி பிரசாத் தெலங்கா அவர் எந்த பயிற்சிக்கும் செல்லவில்லை என்று ’தி நார்த் ஈஸ்ட் டுடே’-க்கு பெருமையுடன் தெரிவித்திருந்தார்.

பிபாஷா கலிதா, ஸ்வப்னீல் பால், மிருகாகி தேகா, அரன்யாக் சைகியா, பூர்ணா போரா, மனலிகா பொர்கொயின், சித்தாந்த் தாஸ், சங்கீத் அகர்வால், மமோனி டோலி, சுபஜித் புயான், பானி தெலங்கா, பார்தா புரோதிம் தாஸ், மனோஜ் ஸ்வர்கியரி, பிதிஷா சிந்தே, தீப்ஜாய் தாஸ், யசோதரா தாஸ் ஆகியோர் இந்த ஆண்டு இந்தப் பகுதியில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற மாணவர்களாவர்.

பிபாஷா கலிதா அதிக ரேங்க் எடுத்து 41-வது ரேங்கில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஸ்வப்னீல் பால் மற்றும் மிருகாசி தேகா அதிக ரேங்க் எடுத்துள்ளனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA