டெஸ்லா சிஐஓ ஜெய் விஜயன் தலைமையில் சென்னை-சிலிக்கான் வேலி 'FixNix' நிறுவனத்துக்கு நிதியுதவி!   

0

ஃபிக்ஸ்நிக்ஸ் (FixNix) ஒரு SaaS-based GRC. GRC என்றால் அரசு, இடர் மேலாண்மை மற்றும் இணக்கம். இந்த தளத்திற்கு $500,000 Pre-series A நிதியுதவி டெஸ்லா மோட்டார்ஸின் CIO ஜெய் விஜயன் தலைமையில் அளிக்கப்பட்டது. சிலிக்கான் வேலி சார்ந்த சில முதலீட்டாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

சென்னைக்குள் விரிவுபடுத்துவதற்கும் மற்ற சந்தைகளுக்கும், தொழில்நுட்பம் மற்றும் ப்ராடக்ட் டெவலப்மென்ட் போன்றவற்றிற்கு குழுவை விரிவுபடுத்தவும், நிதி பயன்படுத்தப்படும் என்றார் ஃபிக்ஸ்நிக்ஸ் நிறுவனத்தின் CEO ஷன்முகவேல் சங்கரன் (Shan). ஜெய் விஜயன் ஃபிக்ஸ்நிக்ஸ் குழுவில் ஆலோசகராக இணைந்துள்ளார்.

B2B GRC ப்ராடக்டை சந்தைப்படுத்த உதவிக்கரம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்ததாகவும் ஸ்டார்ட் அப்களுக்கு முதலீடு செய்வதற்கு இதுதான் காரணம் என்றும் தெரிவிக்கிறார் ஜெய் விஜயன். இவரது நிறுவனம் சென்னை மற்றும் அமெரிக்காவில் செயல்படுகிறது. மூன்று வருடங்களாக இயங்கிவரும் நிறுவனம் முதன் முதலில் பெரியளவிலான முதலீட்டில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவரது குழு RSA கான்ஃப்ரன்ஸில் ஒரு சிலிக்கான் வேலி சார்ந்த செக்யூரிட்டி நிறுவனத்தில் $100,000 முதலீடு செய்திருக்கிறது. நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

ஃபிக்ஸ்நிக்ஸ் GRC ப்ராடக்ட் மைக்ரோசாப்ட் பிஸ்பார்க் சேலஞ்சில் கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் ரீஜனல் இறுதியில் வென்றது. இந்த ஸ்டார்ட் அப் $60,000 மதிப்புமிக்க Azure cloud கிரெடிட்டும் $5,000 ரொக்கப் பரிசும் வென்றது. தமிழக அரசிடமிருந்து ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றது. இதில் 25 சதவீதம் மானியமாக அறிவிக்கப்பட்டது.

மூன்று வருடத்தில் ஃபிக்ஸ்நிக்ஸ் குழு $500,000 வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் RBI யுடன் பொது-தனியார் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. “ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 43 வங்கிகளை தொடர்புகொண்டோம். அதில் மூன்று வங்கிகள் $100,000 செலுத்தி எங்கள் சேவையை பெற்றிருக்கிறார்கள். மேலும் பலர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்” என்கிறார் ஷான். ஜூன் 2015-ம் வருடம் வெளியிடப்பட்ட பப்ளிக் SaaS version -ல் 213-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

குழுவில் மொத்தம் மூன்று நிர்வாகிகளும் பதினைந்து பொறியாளர்களும் உள்ளனர். நிதியுதவிக்குப்பின் சென்னையிலிருந்து 35 பேரையும் சிலிக்கான் வேலியிலிருந்து சிலரையும் பணியிலமர்த்த உள்ளது.

சண்முகவேல் சங்கரன், FixNix CEO
சண்முகவேல் சங்கரன், FixNix CEO

யுவர் ஸ்டோரி கருத்து

GRC ஒரு முக்கிய பிரிவாகும். இந்த பிரிவின் முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. “GRC ஒரு ஒருங்கிணைந்த நிறுவனங்கள் அளவிலான ஆட்சி, இடர் மேலாண்மை மற்றும் இணக்கம் குறித்த முழுமையான அணுகுமுறையாகும். இடையூறுகளை வரையறுத்து அதற்கேற்றவாறு நடக்கவும், உட்புற கொள்கைகள் மற்றும் வெளிப்புற கட்டுப்பாடுகளை சில உத்திகள்கொண்டு கையாள்வதன் மூலமும், செய்முறை மூலமாகவும், தொழில்நுட்பம் மற்றும் மனிதர்கள் மூலமாகவும் ஒரு நிறுவனம் சரியான நெறிமுறையுடன் நடத்த உதவும். இதனால் செயல்திறன் மேம்படுத்தப்படும்” இவ்வாறு டிலாய்ட் விவரிக்கிறது. கார்ப்பரேட் கவர்னன்ஸின் இணக்கம் மற்றும் இடர் மேலாண்மை மற்றும் ஆவணங்களை இந்த GRC மென்பொருள் தானாக இயக்குகிறது.

கார்ப்பரேட்கள் அதிகமான ஆய்வுக்கு உள்ளாகும் காரணத்தால், மேலாண்மை பகுதிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. பல வங்கி நெருக்கடிகளுக்கு கார்ப்பரேட் கவர்னன்ஸ் சரியில்லாததுதான் முக்கியக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஜெர்மனின் deutsche bank $2.5 பில்லியன் அபராதத்திற்கு ஆளானது. கடந்த சில நாட்களாக இதே போன்று பல வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பல ஆய்வுகளின் காரணமாக வங்கிகள் மட்டுமல்லாமல் பெட்ரோகெமிக்கல் முதல் டெலிகாம் வரையிலான பல பெருநிறுவனங்களும் GRC மென்பொருளில் முதலீடு செய்து வருகிறது. நிறுவனத்தின் கொள்கைகளை சரியான விதத்தில் பின்பற்றவும் சட்டப்படி நிறுவனத்தை நடத்தவும் இந்த மென்பொருள் வழிவகுக்கிறது. ஃபிக்ஸ்நிக்ஸ் அளிக்கும் இந்த SaaS சார்ந்த தளமானது சிறிய அளிவிலான நிறுவனம் முதல் எல்லாவிதமான நிறுவனங்களுக்கும் இந்த மென்பொருள் கிடைக்கப்படும் விதத்தில் இயங்குகிறது. IBM, SAP மற்றும் Oracle போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியிருக்கிறது. ஒரு வேகமான ஸ்டார்ட் அப் இந்த பிரிவில் மட்டுமே தனிக்கவனம் செலுத்துவதால் தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் குறிப்பிட்ட அம்சங்களில் அதிக பிடிப்பு காணப்படும். பல சிறிய நிறுவனங்கள் உபயோகத்திற்கேற்ற கட்டணம் செலுத்தும் SaaS மாடல்களை விரும்புவார்கள். இது நிச்சயம் நாம் எதிர்நோக்கி வரவேற்கும் ஒரு ஸ்டார்ட் அப் ஆகும்.

ஆக்கம் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீ வித்யா 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்