அதிர்ஷ்டம் இல்லையேல் சச்சின்- பின்னி பன்சல் சந்தித்திருக்கவே மாட்டார்கள், ஃபிளிப்கார்டும் தோன்றி இருக்காது...

2

சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் அதிக மதிப்பெண்கள் எடுத்து இருந்தால் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்காது 2007ல் ஃபிலிப்கார்ட் என்னும் பெரிய இ காமர்ஸ் நிறுவனத்தை 2007ல் தொடங்கியிருக்கவும் முடியாது.

சச்சின் மற்றும் பின்னி இருவருமே பிடெக் இறுதி பிராஜக்டில் நல்ல மதிப்பெண்களை எடுத்து தங்கள் படிப்புக்கான தேவையை பூர்த்தி செய்ய ஐஐடி-டெல்லியில் தங்கள் கோடைக்காலத்தை செலவழிக்காமல் இருந்திருந்தால் இருவரின் சந்திப்பும் நடந்திருக்காது.

சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல்
சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல்

ஆனால் வாழ்க்கை அவர்களுக்கு வேறொரு பாதையை வைத்திருந்ததால் சண்டிகரை சேர்ந்த இவர்கள் 2005ல் ஐஐடி-டெல்லியில் சந்தித்துள்ளனர். அதன் பின் படிப்பை முடித்த இவர்கள் பெங்களூரில் வெவ்வேறு நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்தனர். இதற்கிடையில் இரண்டு முறை பின்னியின் வேலை விண்ணப்பத்தை கூகுல் நிராகரித்தது.

அதன் பின் 2007ல் சச்சின் அமேசானில் பணிக்கு அமர்ந்தார்; சில மாதங்களில் பின்னியும் வணிக பங்காளராக சச்சினின் குழுவில் சேர்ந்தார். அப்பொழுது தான் தொழில் துவங்கும் யோசனை இருவருக்கும் புலப்பட்டது. ஆனால் இப்பொழுது இருக்கும் தொழில்முனைவு போக்கு அப்பொழுது இல்லை.

இருந்தாலும் தொழில் தொடங்க முடிவு செய்த இவர்கள் இ-காமர்ஸ் தளத்தை துவங்க எண்ணவில்லை - விலை ஒப்பீடு தளத்தை தான் துவங்க இருந்தார்கள். அதை குறித்து சந்தை ஆராய்ச்சி செய்தபோது தான் இ-காமர்ஸ் தளத்தை துவங்கலாம் என முடிவு செய்து அக்டோபர் 2007ல் ஃபிலிப்கார்டை நிறுவினர். அதன் பின் அவர்கள் கண்ட வளர்ச்சி நாம் அறிந்ததே.

தற்பொழுது வால்மார்ட் ஃபில்ப்கார்டை கையகப்படுத்தியதால் இவர்களின் மதிப்பு 20 டாலர் பில்லியனாகும். துவக்கத்தில் மாதம் 10000 ரூபாய் என 18 மாதம் பெற்றோர்களிடம் இருந்து ஒரு தொகையை பெற்று சேமித்து ஆளுக்கு 2லட்ச முதலீட்டுடன் துவங்கிய நிருவனம் இது. பெங்களூரில் தாங்கள் தங்கி இருந்த வீட்டில் இரண்டு கணினிகளை வைத்து வடிவமைக்கப்பட்ட தளம் தான் ஃபிலிப்கார்ட்.

இவர்களை தெரிந்த இவர்களுடன் பணிபுரிந்த பலர் இவர்களின் மனோபாவங்களை பகிர்ந்துள்ளனர். சிலர் சச்சின் முன் கோபி என்றும் அதற்கு நேர்மறை பின்னி என்றும் தெரிவித்தனர். சச்சின் உள்ளுணர்வு சார்ந்து இருப்பதாகவும், அதே நேரத்தில் பின்னி ஒரு தரவு சேமிப்பாளர் எனவும் கூறுகின்றனர்.

தலைமை நிர்வாக அதிகாரியான சச்சின் தான் பெரும்பாலும் ஃபிலிப்கார்டின் முகமாக இருந்துள்ளார்; 2016 வரை சிஓஓ ஆக இருந்த பின்னி முக்கியமான சந்திப்புகள் மற்றும் நேர்காணலில் தான் கலந்துக் கொள்வார். 2014 நடைபெற்ற மிந்த்ரா கையகப்படுத்தல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னி நிருபர்களுடன் மிக சகஜமாக பேசி உரையாடினார்.

முதல் கோரமங்களா அலுவுலகம்
முதல் கோரமங்களா அலுவுலகம்

2007ல் கோராமங்கலாவில் ஒரு பங்களாவில் தங்கள் முதல் அலுவலகத்தை இவர்கள் நிறுவினார்கள். இப்பொழுது ஃபிலிப்கார்டின் தலைமையகம் 30 மாடிகள் கொண்ட பெரும் கட்டிடமாக இருந்தாலும் கூட தங்களது முதல் அலுவலகத்தை இன்றும் இயக்கத்தில் வைத்திருகின்றனர் இந்த நண்பர்கள். நிறுவனத்தை நடத்துவதிலும் நிர்வாகிப்பதிலும் உணர்வுப்பூர்வமாகவே இருக்கின்றனர். உணர்வுக்கு மதிப்புகள் கொடுத்தாலும் இவ்வளவு குருகிய காலத்தில் வெற்றிபெற காராணம் அவர்கள் இணைத்த புதுமைகள் தான். துவக்கத்திலே கேஷ் ஆன் டெலிவரியை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சம்பாத்தித்துவிட்டனர்.

வெளிநாட்டு முதலீடுகளை ஃபிலிப்கார்ட் சந்தித்தபோது சந்தை மாதிரியை மாற்றி அமைத்தனர். இதனால் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கண்டிராத அதிக லாபம் இவர்களால் ஈட்ட முடிந்தது. இந்தியாவில் அமேசான் தொடங்கிய பின் 1 பில்லியன் டாலர்கள் உயர்த்தியதோடு மட்டும் இல்லாமல் உலகளாவிய இ-காமர்ஸின் முன்னோடியாகவே ஃபிலிப்கார்ட் இருந்தது.

மேலும் தங்கள் வளர்ச்சியை அதிகரிக்க பல நிறுவனங்களை ஃபிலிப்கார்ட் வாங்கியது. ஃபிலிப்கார்ட் வாங்கிய முக்கிய நபர்கள் CureFit நிறுவனர் அன்கிட் நாகோரி, மற்றும் ஃபிலிப்கார்ட் துணை நிறுவனமான ஃபோன் பே நிறுவனத்தை நடத்தி வரும் சமீர் நிகாம் மற்றும் ராகுல் சரி. இதனால் ஜி.பீ.வியில் $1 பில்லியனை எட்டிய முதல் இந்திய இ-காமர்ஸ் நிறுவனம் ஃபிலிப்கார்ட் மற்றும் முதலில் $1 பில்லியன் டாலர் நிதி திரட்டியதும் இவர்கள்தான்.

வெற்றிப்பாதையில் இருந்தால் கூட சில சறுக்கல்களையும் இவர்கள் சந்தித்தனர். 2015ல் மிந்த்ரா மொபைல் செயிலி மூலம் மட்டும் இயக்கும் வசதியை கொண்டுவந்தது. இது பெரும் அடியை தந்ததோடு அவர்களின் விற்பனைகளும் குறைந்தது. இந்த நிலைமை சச்சினின் முடிவால் தான் ஏற்பட்டது என்று பலர் கூறினர்.

அதன்பின் 2016ல் சச்சினின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை பின்னி ஏற்றுக் கொண்டார். சச்சினும் நிர்வாக மாற்றம் செயல்திறனுடன் தொடர்புடையது தான் என்பதை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் 2016ல் இவர்களுக்கு சறுக்கலில் தான் அமைந்தது, நிதி வறட்சியை எதிர்கொண்டது, சந்தைப் பங்கு வீழ்ச்சியடைந்து மற்றும் அமேசான் முன்னேறி சென்றது. அதன் பின் மிகப்பெரிய பங்குதாரரான டைகர் குளோபல், கல்யாண் கிருஷ்ணமூர்த்தியை நடவடிக்கைகளை மேற்பார்வையிட நியமித்தது. அபொழுது அவர் பண்டிகை கால விற்பனையை மேற்பார்வை செய்து அதை வெற்றிபெற செய்தார். அதனால் 2017ல் கல்யாண் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்க பின்னி குழு தலைமை நிர்வாக அதிகாரி ஆனார்.

வால்மார்ட் கையகப்படுத்துதலை தொடர்ந்து சச்சின் ஃபிலிப்கார்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது பின்னி தனது பொறுப்பை தொடர்ந்தாலும் கூடிய விரைவில் அவரும் வெளியேறிவிடுவார். 

இதன் பிறகு இவர்கள் இருவரும் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

சில ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள்  இடையே நாங்கள் நடத்திய கணக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கும் மேலானோர் இந்த நண்பர்கள் முழு நேர முதலீட்டாளர்கள் ஆக வேண்டும் என கருத்து தெரிவித்து உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் இவர்கள், சபின் அட்வைசர்ஸ் என்னும் முதலீடு அமைப்பை பதிவு செய்துள்ளனர். கணக்கெடுப்பில் 30 சதவீத மக்கள் மீண்டும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இருவருக்கும் இன்னும் வயது இருக்கிறது - சச்சின் 36 மற்றும் பின்னி 35 தான். மேலும் வெறும் 10 வருடத்தில் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபிலிப்கார்ட்டை உருவாக்கி உள்ளனர்.

அடுத்த 10 வருடத்தில் அவர்கள் சாதிக்கப்போவது என்ன?

ஆங்கில கட்டுரையாளர்: ராதிகா பி நாயர் | தமிழில்: மஹ்மூதா நௌஷின்

Related Stories

Stories by YS TEAM TAMIL