யுவர்ஸ்டோரியின் 'பாஷா'- இந்திய மொழிகளின் டிஜிட்டல் திருவிழா நிகழ்ச்சி!

0

“ உடைந்த ஆங்கிலம் பேசும் எவரையும் கேலி செய்யாதீர். அதற்குப் பொருள், அவருக்கு வேறு மொழி தெரியும் என்பதே” - ஹெச். ஜாக்சன் ப்ரவுன் ஜூனியர்.

இந்தியாவில் இதை விட பெரிய உண்மையாய் வேறெதுவும் இருக்க முடியாது. இந்தியாவின் மக்கட்தொகை 1.31 பில்லியனில், 120 மில்லியன் மக்களால் மட்டும் தான் ஆங்கிலத்தில் பேச முடியும். அதாவது, மொத்த மக்கள்தொகையில் பத்து சதவிகிதம் பேரால் தான் ஆங்கிலம் பேச முடியும். எனில், அதைத் தவிர்த்த, 90 சதவிகிதம் மக்களுக்கு வேறு மொழி, தம் சொந்த மொழி, ஒன்றுத் தெரியுமெனத் தானே அர்த்தம்?

ஆனாலும், இணையத்தில் 56 % ஆங்கிலமும், வெறும் 0.1 % தான் இந்திய மொழிகளும் இருக்கிறதென்பதை நம்ப முடிகிறதா? அதில் என்ன தவறென நீங்கள் கேட்கலாம். பெரிய பெரிய நகரங்களில் மட்டுமே சிறப்பான இணைய இணைப்பும், கிராமப்புறங்களில் எல்லாம் இணையத்தின் தாக்கம் பெரிதாய் இல்லாத போது, அந்தக் கேள்வி நியாயமானது தான்.

ஆனால், வர்த்தகத்தின் தலையாய விதியாக, “பிறருக்கு முன், முந்திக்கொண்டு வாய்ப்புகளை கைபற்றுதல்” இருக்கும் போது, இந்தியாவில் இணைய நிறுவனங்களால் ஆதரவளிக்கப்படும் புதிய, பெரிய சந்தை இருக்கிறதென்பதை தெரிந்துக் கொள்வது நிச்சயம் பலனளிக்கும்.

இதற்கு மேலும் உங்களை நம்ப வைக்க வேண்டுமானால், இதை படியுங்கள் :

இந்தியாவில் 957 மில்லியன் தொலைத் தொடர்பு பயனாளர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொரு மாதமும், பெரும்பாலும் மொபைல் ஃபோன் வழியே, 8-10 மில்லியன் இந்தியர்கள் இணையத்திற்கு அறிமுகமாகிறார்கள்.

ஒட்டுமொத்தமாய் தொலைத்தொடர்பின் அடர்த்தி 78% எனில் , கிராமப்புறங்களில் இருக்கும் தொலைத் தொடர்பு அடர்த்தி வெறும் 45% சதவிகிதம் தான். பிராட்பேண்ட் இணையப் பயனாளர்கள் 76 மில்லியன் எனும் போது, அது வளர்ச்சிக்கும் புதுமைக்கும் போதுமான இடமளிப்பதாய் இருக்கிறது.

இந்தியாவில், ஃபேஸ்புக்கிற்கு 100 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். அதில், 85% பேர், மொபைல் ஃபோன் வழியே தான் இந்த சமூக வலைதளத்தை அடைகிறார்கள்.
இந்தியாவில் கிராமப்புறங்களில் தான் இணையம் வேகமாக வளரும். 2014 ஜூனில் 60 மில்லியன் இருந்ததில் இருந்து, 2018 ல் 280 மில்லியனாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இணையப் பயனாளர்களில் 54 சதவிகிதத்திற்கும் மேலானோர் இருபத்தைந்து வயதைக் கடந்தவர்கள், அதில், 40-50 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில் இருப்பவர்கள். முப்பது சதவிகிதம் பேர் பெண்கள்.

தொன்னூறு சதவிகிதம் பேர் இணையத்தை மொபைல் சாதனம் வழியே எட்டுபவர்கள்.

மிகத் தெளிவாக, வருங்கால இணையப் பயனாளர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராகவும், அதிக பாலின சமத்துவமானவராகவும், அதிகம் நடமாடுபவராகவும் இருப்பார், மேலும், அவருக்கு கருப்பொருள் அவருடைய மொழியிலேயே இருக்க வேண்டியதாயிருக்கும்.

பல உள்ளூர் மொழிகளில் சேவை வழங்கவிருக்கும் அரசின் டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கை உயரத் தான் வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், மார்ச் 11 அன்று, முதல்-இந்திய மொழிகளில் டிஜிட்டல் திருவிழாவை அறிவிப்பதில் யுவர்ஸ்டோரி பெருமகிழ்ச்சி கொள்கிறது.

இந்தத் திருவிழாவின் வழியே, இந்தியாவில் உள்ளூர் மொழிகளில் இணையத்திற்கு அடித்தளம் அமைப்போம் என நம்புகிறோம்.

ஆங்கிலத்தைத் தவிர, 12 பிராந்திய மொழிகளில் இருப்பதனால், யுவர்ஸ்டோரி இந்நிகழ்விற்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.

ஏறத்தாழ 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள், தயாரிப்பின் விலையை விட, தயாரிப்புக் குறித்த தகவல்கள் சொந்த மொழியில் இருப்பதை தான், மதிப்பீடு செய்கிறார்கள் என கூறப்படுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்களோடு அவர்கள் சொந்த மொழியில் பேசுவது எவ்வளவு முக்கியமென்பது தெரிய வருகிறது. பல நிபுணர்கள், பன்மொழிகளில் இயங்குவதை செலவாக நினைக்காமல், எதிர்காலத்திற்கான முதலீடாகக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

நீங்கள் ஒரு இணைய வணிகக் குழுமமாக இருந்தாலும், உடல் ஆரோக்கிய சேவைத் தளமாக இருந்தாலும், கருப்பொருள் விநியோக நிறுவனமாக இருந்தாலும், அல்லது பன்மொழிகளில் விரிவடைய சிந்தித்துக் கொண்டிருக்கும் எந்தத் துறையாக இருந்தாலுமே, நிச்சயம் இது உங்களுக்கான இடம் !

டிக்கெட் பெற இங்கே க்ளிக்கவும் !