மதுரையில் 'டெக்னோவேஷன் போட்டி'- மொபைல் செயலியை உருவாக்க மாணவிகளுக்கு அழைப்பு!

0

இளம் பெண்கள், சமூக நோக்கிலான மொபைல் செயலிகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் 'டெக்னோவேஷன் போட்டி' மதுரையில் மே 1 ம் தேதி நடைபெறுகிறது. ஆசிய பிராந்தியத்திற்கான இந்த போட்டியில் தொழில்முனைவில் ஆர்வம் கொண்ட மாணவிகள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் சேவைகள், மொபைல் செயலிகளை உருவாக்குவதற்காக கோடிங் நுட்பத்தை அனைவரும் பெறுவது பயனுள்ளதாக இருக்கும் என வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டு கோடிங் திறனை கற்றுக்கொள்வது அவர்கள் அதிகாரம் பெற உதவும் என்றும் கருதப்படுகிறது.

அந்த வகையில், இளம் பெண்கள் கோடிங் திறனை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்துடன், உலக அளவில் டெக்னோவேஷன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இளம் பெண்களுக்கான தொழில்முனைவு திட்டமான இந்நிகழ்ச்சி மூலம் சமூக நோக்கிலான தீர்வுகளை அளிக்கும் மொபைல் செயலிகளை உருவாக்கும் செயலில் பெண்கள் ஈடுபடலாம்.

2010 ம் ஆண்டு முதல் 28 நாடுகளில் உள்ள 5,000 க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.

இந்த போட்டியில் பங்கேற்கும் இளம் பெண்களுக்கு தொழில்நுட்ப ஆர்வம் இருந்தால் போதுமானது. கோடிங் திறன் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப தன்னார்வலர்கள் வழிகாட்டுவார்கள். மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டு மொபைல் செயலியை உருவாக்கலாம்.

இந்த ஆண்டு டெக்னோவேஷன் 2016 போட்டியின் ஆசிய பிராந்திய சுற்று, மதுரையில் மே 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்று தங்கள் மனதில் உள்ள ஸ்டார்ட் அப் ஐடியாவை வல்லுனர்கள் முன் சமர்பிக்கலாம். நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையக்கூடிய செயலிகளை உருவாக்கலாம்.

இந்த சுற்றில் வெற்றிபெறும் குழு அரையிறுதிக்கு தேர்வாகும்.

மதுரையில் உள்ள தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் மே 1 ம் தேதி இந்த போட்டி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு:

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ஸ்டார்ட் - அப் ஐயங்களை தீர்க்கும் பயிற்சி பட்டறைகள்.!