இயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்!  

1

ஃபிப் -சால் லைப் டெக்னாலஜிஸ் (FIB-SOL Life Technologies) நிறுவனத்தின் நேனோபைபர் நுட்பம் சார்ந்த தீர்வுகள் மண் வளம் மற்றும் விளைச்சலை அதிகரிக்க கூடியவையாக இருக்கின்றன. நிறுவனத்தின் அல்ட்ரா லைட்வைட் மெம்பரேன்கள் மற்றும் ஜெல் அதிக பரப்பிலான விலை நிலத்திற்கு உரம் அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

ஸ்டார்ட் அப்: FIB-SOL Life Technologies | நிறுவனர்: ஆனந்த் ரஹேஜா, கவிதா சாய்ராம்

நிறுவப்பட்ட ஆண்டு: 2013 | தலைமையகம்: சென்னை

தீர்வு காணும் பிரச்சனை: மண் வளம் மற்றும் பயிர் விளைச்சலை அதிகரிக்கக் கூடிய குறைந்த செலவிலான உயிரி உரம்

துறை: விவசாயம் | நிதி: ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் சங்கத்திடம் இருந்து ரூ.10 லட்சம்

இந்திய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் ஒன்றாக விவசாயம் விளங்குகிறது. 58 சதவீதத்திற்கு மேலான இல்லங்கள் விவசாயத்தை முதன்மை வருவாய் வழியாக கொண்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுகளில் பல துறைகளில் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும் இத்துறை பெரிய அளவில் மாற்றத்தை காணவில்லை.

இந்த சூழலில் விவசாய நுட்பம் துறையில் ஸ்டார்ட் அப் துறையின் ஆர்வம் அதிகரித்துள்ளது. 2017 ல் விவசாய நுட்ப ஸ்டார்ட் அப்கள் 17 ஒப்பந்தங்கள் மூலம் 53 மில்லியன் நிதி திரட்டியுள்ளன. இந்த ஆண்டும் அக்ரிஎக்ஸ் லேப், அக்ரோஸ்டார், அக்ரோவேவ், அக்ரோவுட் உள்ளிட்ட நிறுவங்கள் நிதி திரட்டியுள்ளன.

கவிதா சாய்ராம், ஆனந்த் ரஹேஜா
கவிதா சாய்ராம், ஆனந்த் ரஹேஜா
“விவசாயத்துறையில், பயிர் செய்யும் முறைகள், பயிர் வகைகள், பருவநிலை மற்றும் முக்கியமாக குறிப்பிட்ட பகுதியின் வழிமுறைகள் என பலவகையான வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாத, விநியோக அமைப்புகள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப வர்த்தக வளர்ச்சி அமையலாம்,”

என்கிறார் ஃபிப்- சால் லைப் டெக்னாலஜிஸ் இணை நிறுவனர் அனந்த் ரஹேஜா. இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு, விவசாயத்துறையின் மொத்த சப்ளை சைனிலும் மதிப்பை உண்டாக்க ஃபிப்-சால் லைப் டெக்னாலஜிஸ் நிறுவனம் செலவுகளை குறைத்து, பயிர் விளைச்சல் மற்றும் மண் வளத்தை அதிகரிக்க நேனோபைபர் நுட்பங்களை உருவாக்கியுள்ளது. குறைந்த எடை கொண்ட பயோ டிகேரட்பில் மற்றும் குறைந்த செலவிலான உயிரி உரம் மூலம் நிறுவனம் உற்பத்தியாளர்களுக்கான ஷெல்ப் காலத்தை உயர்த்தி, இருப்பை நிர்வகிப்பதில் செயல் திறன் அளித்து விவசாயிகள் வருவாயையும் அதிகரிக்கச்செய்கிறது.

நிறுவனத்தின் முதல் தயாரிப்புகளில் ஒன்று குறைந்த எடை கொண்ட மெம்பரேனாகும். உரம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உயிரி ஊக்கிகளுடன் இதை கலந்து பயன்படுத்தலாம். இந்த 5 கிராம் திசுவில் உள்ள உயிரி பொருட்கள் தண்ணீர் கலந்து, ஓரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு உரமளிக்க பயன்படுத்தலாம். இரண்டாவது பொருள் 25 மிலி பாட்டிலில் கிடைக்கும் எந் சால் எஸ்பி திரவ ஜெல் ஆகும்.

இருண்டு தயாரிப்புகளும் போதிய ஊட்டச்சத்துகளை அளித்து விவசாய நிலத்தை மேலும் வளமாக்கக் கூடிய நுண்ணுயிரிகளை கொண்டுள்ளன. மண்ணோடு கலந்துவிடக்கூடிய இந்த பொருட்கள் நிலத்திற்கு எந்த தீங்கையும் அளிப்பதில்லை.

“பயிர் விதைப்பின் போது, கொண்டு செல்லுதல் மற்றும் விதை மேல் பூச்சியில் இந்த பொருட்கள் பயன்படுத்தப்படுவதை பார்க்கிறோம். எங்கள் தயாரிப்புகளை கோதுமை, அரிசி, பஜ்ரா, சோயா, வேர்கடலை உள்ளிட்ட பொருட்களுக்கு பரிந்துரைக்கிறோம். போதுமான அளவு பயன்படுத்தினால் எங்கள் தயாரிப்புகள் மூலம் பயிர் ஆரோக்கியம் அதிகரித்து விளைச்சல் 20%  உயரும் வாய்ப்புள்ளது” என கூறுகிறார் ஆனந்த்.

நிறுவனம், தேயிலை, காபி, ரப்பர் போன்ற தோட்ட பயிர்களை பயிரிடுபவர்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஆரம்பம்

“என்னுடைய டாக்டர் பட்ட ஆய்விற்காக சிந்தசிஸ் மற்றும் பாலிமரிக் நேனோபைபர்ஸ் குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன். இந்த தனித்தன்மை வாய்ந்த இழைகள் வர்த்தக பலன் கொண்டவை என புரிந்தது. 100 நேனோ மீட்டர் அளவில் கூட, தொலைத்தொடர்பில் பயன்படுத்தப்படும் கோஆக்சிகல் கேபிள்களில் இருப்பது போல நேனோ பைபர் அமைப்பை உருவாக்க விரும்பினேன்,” என்கிறார் ஆனந்த்.

2012 ல் டாக்டர் ஆய்வை மேற்கொண்ட போது இந்த எண்ணம் உண்டானது. இந்த காலகட்டத்தில் ஐ.ஐ.டி-எம் உயிரி நுட்பத்தில் தொழில்முனைவை ஊக்குவிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் கிழ், முன்னாள் மாணவர்கள் அலுவலகம் ரூ. 10 லட்சம் நிதி அளிக்கும்.

தனது வர்த்தக எண்ணத்திற்கு சிறகுகள் அளிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக ஆனந்த் இதை கருதினார். எனினும் அவர் டாக்டர் பட்டத்தை முடிப்பதில் தீவிரம் காட்ட வேண்டியிருந்தது. இந்த திட்டம் பற்றி தனது குழுவினரிடம் தெரிவித்தார். அவரது பிஎச்டி ஆலோசகர் கவிதா சாய்ராம் கவனத்தை இது ஈர்த்தது. அவருக்கு ஏற்கனவே உயிரி நுப்டத்தில் திட்டத்தை துவக்குவதில் ஆர்வம் இருந்தது. நேனோபைபர்களை வர்த்த நோக்கில் பயன்படுத்துவதில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் எப்.ஐ.பி-சால் நிறுவனமாக உருவானது.

30 வயதான ஆனந்த் 2016 ல் தனது டாக்டர் பட்டத்தை முடித்தார். பாலிமர் நேனோபைபர் உள்ளிட்ட பிரிவுகளில் ஆவருக்கு ஆர்வம் இருந்தது. நிறுவனத்தின் இணை நிறுவனர் என்ற முறையில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உரிமம் வழங்குவது ஆகியவற்றில் கவனம், செலுத்தி வருகிறார். 40 வயதான மற்றொரு இணை நிறுவனரான கவிதா சாய்ராம், ஐஐடி-எம்மில் டாக்டர் பட்டம் பெற்றவர். மூலக்கூறு அழுத்தங்களை உணர்த்தும் பாதைகள் நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர். நிறுவன நிர்வாகம் மற்றும் வர்த்தகத்தை கவனித்து வருகிறார். அண்மையில் அவர் பெண் தொழில்முனைவோர் மற்றும் முன்னோடிகளை அங்கீகரிக்கும் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் பட்டியலில் அடையாளம் காட்டப்பட்டிருந்தார்.

இணை நிறுவனர்கள் தவிர குழுவில் கோகுல் என்.கே, (22), கவுதம் செல்வராஜ் (25) பிரமல் பிஸ்வா(34), (மைக்ரோ பயாலிஜிஸ்ட்), ராஜசேகர் பைஜா (33) ( பாலிமர் கெமிஸ்ட்) ஆகியோர் உள்ளனர்.

கோகுல் எலக்ட்ரிகல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ பெற்றவர். பவர் சிஸ்டம் அமைப்பில் ஒராண்டு பணியாற்றி இருக்கிறார். தற்போது பொறியியல் படிப்பும் படித்து வருகிறார். நிறுவனத்தின் இன்ஸ்டுருமண்டேஷன் அமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகிறார். கவுதம் ஐஐடி கவுகாத்தியில் எம்டெக் உயிரி நுட்பம் பட்டம் பெற்றவர். உற்பத்தி செயல்பாடு மற்றும் டெலிவரியில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிரமல் பிஸ்வா மற்றும் ராஜசேகர் பைஜா சென்னை ஐஐடியில் டாக்டம் பட்டம் பெற்றவர்கள், நிறுவன ஆய்வில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் தவிர ஐஐடி சென்னை பேராசிரியர் டி.எஸ்.சந்திரா மற்றும் ஐஐடி திருபதி பேராசிரியர் டி.எஸ்.நடராஜன் ஆகியோர் ஆலோசகர்களாக வழிகாட்டுகின்றனர்.

எதிர்கால திட்டம்

பயிர்களுக்கு உரமளிப்பதற்கு உதவும் பொருட்களை அளித்து விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வகையில் பல பயிர்களுக்கான தீர்வுகளை உருவாக்குவதில் இந்த குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும் தயாரிப்புகளை உருவாக்குவதற்கான ஆய்வுக்கு தேவையான தகவல்களை திரட்ட விற்பனை வலைப்பின்னலையும் உருவாக்கி வருகிறது.

உத்திர பிரதேசத்தில் உள்ள கோதுமை வயலில் சோதனை 
உத்திர பிரதேசத்தில் உள்ள கோதுமை வயலில் சோதனை 

அக்ரோ பார்முலேசன்ஸ், நேனோ மேட்டிரியல் சிந்தசிஸ் மற்றும் மேம்பட்ட பொருட்களுக்கான புதிய வர்த்தக மாதிரியை உருவாக்குவதிலும் குழு கவனம் செலுத்தி வருகிறது. குழுவை உருவாக்கிக் கோள்வதோடு, விரைவில் நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது..

கடந்த ஆண்டு முதல் சந்தையில் தனது தயாரிப்பை விற்பனை செய்து வரும் நிறுவனம் பைபர் பொருட்களில் உள்ளூடு செய்துள்ள பொருட்கள் மற்றும் பார்முலேஷன் விற்பனை மூலம் வருவாய் ஈட்டுகிறது.

முதல் மூன்று ஆண்டுகளில் நிறுவன வருவாயான ரூ 30,000-40,000 சோதனை சேவைகளை அளிப்பது மூலம் வந்துள்ளது.

தங்கள் ஆய்வு சேவை மூலம் சில வாடிக்கையாளர்களுக்கான நுட்பங்களை உருவாக்கி தந்ததன் மூலம் வருவாய் ஈட்டியதையும் ஆனந்த் சுட்டிக்காட்டுகிறார்.

“மற்ற நிறுவனங்களுக்கான நேனோபைபர் பார்முலேஷன் ஆய்வு மூலம் நான்காவது ஆண்டில் வருவாய் சில லட்சம் உயர்ந்தது. அதன் பிறகு தொழில் திட்டங்கள் மற்றும் விற்பனை மூலம் உயர்ந்து வருகிறது”என்றும் அவர் கூறுகிறார்.

இணையதளம்

ஆங்கிலத்தில்: லிப்சா மன்னன் | தமிழில் சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL