இணையத்தில் வைரலான ஆறு வயது ப்ரூஸ் லீ ரசிகரின் அசத்தல் சண்டைக் காட்சிகள் வீடியோ! 

0

சிறு குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தையோ அல்லது ஒருவரையோ பிடித்துவிட்டால் அவர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள். குழந்தைகளை கவரும் விதத்தில் பல நடிகர்களும் திரையில் அவர்களுக்கு பிடித்த வகையில் நடப்பது, நடிப்பது என்று பல சாகசங்களையும் செய்வதும் சகஜம். திரையில் தோன்றும் நட்சத்திர நடிகர் செய்வதை, சொல்லும் டயலாகை அப்படியே செய்து பார்ப்பதிலும் குழந்தைகளை மிஞ்ச ஆளில்லை. அந்த வகையில், ஜப்பானை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ருயுஜி இனாய், முன்னாள் நடிகர் ப்ரூஸ் லீ படங்களை பார்த்துவிட்டு அவரின் பரமரசிகன் ஆகிவிட்டான். அவர் படங்களை பார்ப்பது மட்டுமின்றி ப்ரூஸ் லீ போலவே சண்டைக்காட்சிகளில் வருவது போல் சண்டையிடவும் செய்து அசத்துகிறான் அந்த சிறுவன். 

ருயுஜி இமாய், ப்ரூஸ் லீ போல சண்டையிடுவதை படமாக்கி, இணையத்தில் பகிர்ந்ததை அடுத்து அந்த சுட்டிப்பையன் இன்று உலகமெங்கும் பிரபலமாகியுள்ளான். ஆறு வயதில் சிக்ஸ் பேக் உடம்புடன், ப்ரூஸ் லீ படங்களுக்கு முன் நின்று சண்டையிட்டு காட்டுவது காண்போரை ஆச்சர்யப்படுத்த தவறுவதில்லை. ப்ரூஸ் லீ-ன் அதே வேகம், அதே உடல் அசைவுகள், கண்களில் அதே கோபம் என ஒவ்வொரு ஷாட்டிலும் தன் மானசீக குருவை பிரதிபலிக்கிறான் ருயுஜி. இவனின் வீடியோவிற்கு சுமார் 2 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். லைக்ஸ், கமெண்ட்ஸ் மற்றும் ஷேர்களை அள்ளுகிறது ருயுஜியின் வீடியோ பதிவுகள். 

நன்சக் என்ற கைகளில் குச்சிகளை போல வைத்து சண்டையிடுவதில் இவரை பெரியோர்கள் கூட மிஞ்சமுடியாத அளவு துல்லியமாக இருக்கிறது. ப்ரூஸ் லீயை போலவே பன்ச், கிக் என்று அவரின் மறு அவதாரமாக நிற்கிறார் ருயுஜி. 

மினி லீ என்று அழைக்கப்படும் ருயுஜி, அவரின் தந்தையிடம் சண்டைப்பயிற்சியை எடுத்துக்கொள்கிறார். கடுமையாக பயிற்சி செய்தே இந்த நிலையை அடைந்துள்ளார். ருயுஜியின் வயதுடைய சிறுவர்கள் வெளியில் ஓடி ஆடி விளையாட, அவன் மட்டும் சண்டைப் பயிற்சிகளில் தீவிரமாக இருக்கிறான். 

சிறு வயதாக இருப்பினும், எடுத்த காரியத்தில் அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு, கட்டுப்பாடு என்ற வாழ்க்கைமுறையை கடைப்பிடித்ததாலேயே ருயுஜி உலகப்புகழ் அடைந்திருக்கிறான் என்பதில் சந்தேமில்லை.

அசத்தல் வீடியோவை காண்க: