ஸ்டார்ட் அப்'களை ஊக்குவிக்க 24 மணி நேர ஹாக்கத்தான் 7 நகரங்களில் அறிமுகம்- மத்திய அரசு அறிவிப்பு!

0

அரசாங்கம் #OpenGovDataHack என்கிற நாடு தழுவிய ஹாக்கதானை அறிமுகப்படுத்தி உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைநகர் புதுதில்லியில் தெரிவித்தார்.

ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழு நகரங்களில் #OpenGovDataHack நடத்துவதற்காக தேசிய தகவல் மையம் மற்றும் இணையம் மற்றும் மொபைல் சங்கம் ஒன்றிணைந்துள்ளது.

இந்தியாவினுள் அந்தந்த மாநிலம் அல்லது நகரங்களை (ஏழு நகரங்கள்) சென்றடைந்து சிறப்பான திட்டங்களுக்கும் திறமைகளுக்கும் ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்பூர், சென்னை, நொய்டா, புவனேஸ்வர், பாட்னா, ஹைதராமாத் மற்றும் சூரத் ஆகியவை அந்த ஏழு நகரங்களாகும்.

சிறப்பாக திட்டமிடுபவர்கள் தங்களது திட்டங்களை திறந்த அரசாங்கத் தரவுகளைப் பயன்படுத்தி செயலிகளாகவோ இன்ஃபோகிராபிக்ஸாகவோ மாற்றுவதற்கு இது உதவும். இதற்கான கருப்பொருள்கள்;

“குடிநீர் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, குற்றம் மற்றும் ஆரோக்யம் போன்றதாகும். அதன் பிறகு இவை நடுவர்களால் மதிப்பிடப்பட்டு பரிசுக்கு தேர்வாகும். அத்துடம் எதிர்கால செயல்பாடுகளுக்கு ஆதரவும் நிதியுதவியும் வழங்கப்படும்,”

என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர் கூறுகையில்,

”பிக் டேட்டாவை சிறப்பாகப் பயன்படுத்தி துல்லியமான அரசாட்சிக்கான விதிகளை நிறுவுவதற்கு பிக் டேட்டாவை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதில் அரசாங்கம் முனைப்புடன் உள்ளது. அவ்வாறு செய்கையில் தனிநபரின் தனியுரிமைகள் கண்டிப்பாக பாதுகாக்கப்படும். எனினும் தரவுகளின் பகுப்பாய்வை ஒரு தேசிய இயக்கமாக மாற்றும் பணியில் குறுக்கிடும் விதத்தில் தரவுகளை அதிகாரப்பூர்வமற்ற முறையில் பயன்படுத்தினால் கடும் தண்டனை வழங்கப்படும்,” என்றார். 

ஏழைகள் மற்றும் நலிந்த மக்கள் குறித்த பிக் டேட்டா பகுப்பாய்வில் கவனம் செலுத்தி உள்ளடக்கப்பட்ட வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தரவுகள் பகுப்பாய்வை முன்னிலைப் படுத்துவதே நோக்கமாக இருந்தாலும் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டதாகவும் குறைந்த விலையிலும் மாற்றம் மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும். 

“#OpenGovDataHack ஏழு நகரங்களில் அறிமுகப்படுத்துவது ஸ்டார்ட் அப் இயக்கத்தை ஊக்குவிப்பதாக அமையும். வெற்றிகரமான ஸ்டார்ட் அப்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியடைவதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என்பது தெளிவாகிறது,” என்றார் பிரசாத்.

பங்குதாரர் உணர்திறன், பிரச்சனைக்குரிய அறிக்கைகளைக் கண்டறிதல், தரவுகள் சேகரித்தல் ஆகியவை குறித்து அந்தந்த நகரங்களில் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள், ஸ்டார்ட் அப்கள், கல்வித்துறையினர் தொழில் துறையினர் இதில் பங்கேற்கலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

கட்டுரை : Think Change India