முதலீடு பெற்ற இந்த டிரக் தளவாடங்கள் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது

முதலீடு பெற்றது, இந்த டிரக் நிறுவனம் ரூ.1 கோடி வருவாய் பெருகிறது

0

வசந்த் இம்மானுவேல் மற்றும் ஜெய் பன்னீர்செல்வம் ஆகியவரின் நட்பு, தேசிய தொழிலக பொறியியல் கழகக் கல்லூரியில் படிக்கும் போதுலிருந்தே தொடங்கியது. படிப்பு முடிந்தவுடன் இருவரும் வெவ்வேறு வேலைகளுக்கு சென்றனர். வசந்த், சென்னையிலுள்ள ஏஷியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில், விநியோகம் மற்றும் நிர்வாகத் துறையில் வேலை செய்தார். அந்நேரம், ஜெய் (வசந்தின் இளையவர்) தொழில்நுட்பத் துறையில் சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார்.

இருப்பினும், இவர்களுக்கு இது சாதாரணமாகத் தோன்றியது. தங்கள் பாதையில் மீண்டும் சந்திக்க நேரிடும் என்று இவர்கள் அறிந்திருக்கவில்லை. விநியோகத் துறையில், தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்படும் காரணத்தால் வசந்த்திற்கு இந்த வேலை மகிழ்ச்சி அளிக்கவில்லை. தொழில்நுட்பத்தின் சக்தியை அறிந்த இவர், இந்த இடத்தை அதனால் தகர்க்க முடியும் என்று உணர்ந்தார்.

ஏழு வருடம் விநியோகத் துறையில் வேலை செய்த பின்பு, 2012- ஆம் ஆண்டு ஸ்டோர் என் மூவ் (Store N Move) என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். அது கிடங்கு மற்றும் தளவாடங்கள் சேவை வழங்குநராக செயல்பட்டது.

2014-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், வசந்த் தளவாடங்கள் மட்டும் தான் இதுவரை இணையதளத்தை உபயோகிக்கவில்லை என்று கண்டறிந்தார். டிசம்பர் 2014-ல், ஜெய் இவருடன் தொழில் செய்ய முன்வந்து, ஓலாக் (OLog) என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஓலாக் என்பதன் விரிவாக்கம் இணையதள தளவாடங்கள். இன்று அது நகரங்கள் இணைக்கும் ஒரு இணைய தளமாக, பல்வேறு தளவாட வழங்குநர்களை இணைத்து, வெளிப்படையான தொழிலை செய்து வருகிறது. சுயமுதலீட்டில் இந்த நிறுவனம், சென்னையில் இருந்து இயங்கி வருகிறது.

"ட்ரக்கிங் துறை எங்கோ இருந்தது, முன்னுக்கு வர வேண்டிய நிலை இருந்தது. ஆதலால், இந்த வணிகத்தளம் வெளிப்படையாகவும், முழுமையாகவும் இருக்கிறது", என்கிறார் வசந்த்.

இது எப்படி வேலை செய்கிறது ?

ஜுன் 2015-ல் நடவடிக்கைகளைத் தொடங்கிய போது, ஓலாக் ஒரு வண்டி முன்னேற்பாடு தொழில் போன்று தான் (வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுப்பதும், ஓட்டுனர் அதற்கு பதிலளிப்பதும்) இயங்கி வந்தது.

இதில் சிக்கல் இருப்பதை இணை நிறுவனர்கள் உணர்ந்து, எங்களிடம் தெரிவித்தார்கள். வண்டி இணை வணிகம் போல் அல்லாமல், ஊர்த்தி இணை வணிகமும் வகைப்படுத்தல் முக்கியம் என கருதுயது. ஷிப்மென்ட்க்கு ஏற்றார் போல் சுமார் 30 வகையான வாகனங்கள் தேவைக்கேற்ப இதில் இருக்கிறது.

பிக் அப் தொடங்குவதற்கு முன், குறைந்தபட்சம் நான்கு மணி நேர அவகாசம் தேவை. ஓட்டுனர் நிறுவனங்களுக்கு மத்தியில், தனி நபர் இயங்கும் ஊர்தியும் தளத்தில் ஏற்கப்படுகிறது.

ஓலாக் நிறுவனத்திற்கு பெரிய மாற்றமாக இருந்தது, கன ஊர்தி வணிகத்தை இணையதளத்தில் மாற்றுவதுதான்.

பண அமைப்பு மாற்றங்கள் காரணமாக, கன ஊர்த்தி உரிமையாளர்கள் தயங்கினார்கள். SAP நுட்பத்தை வைத்து தயாரிக்கப்பட்ட திடமான பண அமைப்பு தளம் தொடங்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு வங்கிகளுடன் இணைந்து, உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டினோம். இப்போது, அனைத்தும் மாற்றப்பட்டது. உரிமையாளர்களும் வசதியாக இருப்பதை உணர்ந்தார்கள்.

ஓலாக் குழு அளவு

25 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில், விநியோக மேலாளர்கள், வாடிக்கையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் போன்றவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பிந்தளத்தில் வேலைப்பார்க்கும் 15 உறுப்பினர்களால், இப்போது இந்த நிறுவனம் குழு எண்ணிக்கையை 100-ஆக உயர்த்தத் தயாராக இருக்கிறது.

வளர்ச்சி அளவீடு

மூன்று மாத இயக்கத்தில் ஓலாக், சாம்சங், பிலிப்ஸ், பெர்ஃபெட்டி மற்றும் பிரிட்டானியா போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட 20 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதில், ஒரு விற்பனையாளருக்கு 10 ஊர்த்தி வீதத்தில், 100 விற்பனையாளர்கள் 1000 ஊர்த்திகளுடன் செயல்பட்டு வருகிறது. பெங்களூரு, சென்னை, கொல்கத்தா என்கிற மூன்று நகரத்தில் இயங்கி வரும் இந்நிறுவனம், பல்வேறு நகரத்திற்கும் நுழைய தயாராக இருக்கிறது.

சாலை முன்னோக்கம்

தொடர்ந்து முன்னோக்கு பாதையில், ஓலாக் 20 நகரங்களில் தீவரமாக விரிவுபடுத்தும் திட்டங்களில் இருக்கிறது. அவர்கள் மும்பை, கொச்சி, ஐதராபாத், விஜயவாடா, ராஞ்சி, கோயம்பத்தூர் மற்றும் மதுரை போன்ற சில நகரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

நிறுவனர்களும், விற்பனையாளர் எண்ணிக்கையை 900-ஆக பெருக்குவதால் 10,000 வாகனங்கள் கொண்ட இணைப்பை அடைய முடியும் என்று எண்ணுகின்றனர்.

வருவாய் நிலையிலிருந்து பார்க்கும்போது, இந்த நிறுவனம் போன மாதம் ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஜூன் 2016-க்குள், 10 கோடி வருவாய் ஈட்டுவதை நோக்குகிறார்கள். அர்பன்லேட்டர் மற்றும் மிந்த்ரா போன்ற இணையதள வணிக நிறுவனங்களுக்கு செயல்பட்டு வருகிறது ஓலாக். முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், முதல் முதலீடு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பப் பார்வையில் இருந்து பார்க்கும் போது, இந்நிறுவனம் சில திட்டங்களை தயாராத்துக் கொண்டிருக்கிறது. தொழில் வேலைகளை நுட்பமான தளங்களைக் கொண்டு இயக்க வாய்ப்புகளை அறியும் நிலையில், பிலிப்ஸ் நிறுவனத்திற்கு வெள்ளோட்டம் நடைப்பெற்று வருகிறது.

'டிரக் சனத்தொகை' தொடங்குவதால் ஒரு மொபைல் சாதனத்தை கன ஊர்த்தியில் உபயோகிக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஊர்த்தியைப் பற்றின தகவல்களை சேமித்து, விற்பனையாளரின் தளத்திற்கு அனுப்பும் திறன் உள்ளது. இதனால், அனைத்து வளங்களை எளிதாக நிர்வகிக்க முடியும்.

யுவர்ஸ்டோரி கருத்து

கன ஊர்தி திரட்டிகள் வணிகத்தில் புதியது அல்ல, கோகோ ட்ரக்ஸ் மற்றும் தி கேரியர் ஏற்கனவே இயங்கி வருகிறது. ஆனால், அவர்கள் நகரத்திற்குள்ளேயே செயல்பட்டு வருகிறார்கள். நகரத்திற்கிடையே செயல்படும்போது, கண்டுபிடிப்பு என்பது மிகவும் முக்கியமானது. தி கேரியர் நிறுவனம் உறுதிபடுத்தும் நேரம் 30 வினாடியாகவும், முன்னணி நேரம் 30 நிமிடமாகவும் செயல்பட்டு வரும் நிலையில், கோகோ ட்ரக்ஸ் அளவிடுதலையும், விரிவுபடுத்துவதையும் நோக்கமாக வைத்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் விதை நிதி பெற்று வந்த நிலையில், முதலீடும் அளவிடுதலும் வெற்றிக்கு முக்கியமானதாகும்.

இணையதள முகவரி: Olog