சென்னை ஐஐடி-ல் இடம் கிடைத்தும் நிதி நெருக்கடியால் சேரமுடியாமல் தவிக்கும் மாணவன்!

1

"கல்வி தனிமனிதன், சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல, அதுவே வருங்காலத்தின் அஸ்திவாரம். இளைஞர்கள் தங்கள் கனவை நோக்கி செல்ல தன் பாதையை தேர்ந்தெடுக்க அதுவே உதவு.” - நீடா அம்பானி

ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய டவுன் கன்பூர் தண்டாவைச் சேர்ந்த மாணவர் மஹேந்தர் பனோத்து. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு கல்வி கற்க பொருளாதாரம் தடையாக உள்ளது. ஸ்ரீ விகாஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், 1000-க்கு 963 மதிப்பெண்கள் எடுத்து தேர்வானார். 

கடும் முயற்சிக்கு பின், அகில இந்திய ஐஐடி-ஜேஈஈ நுழைவுத்தேர்வில் 363-வது ரேன்க் எடுத்து இந்தாண்டு வெற்றி பெற்று ஐஐடி, மெட்ராசில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஐஐடி எம்-ல் கெமிக்கல் இஞ்சினியரிங் படிப்பில் சேர முதற்கட்ட கவுன்சிலிங்கில் தேர்வாகி இருந்தும், அதற்கான கட்டணத்தை கட்ட நிதியுதவி இல்லாமல் தவித்து வருகிறார் மஹேந்தர்.

ஐஐடி கட்டண விகிதப்படி, அவருக்கு ஒரு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் செலவு ஆகிறது. இதே நான்கு ஆண்டுகளுக்கு அவருக்கு மெட்ராசில் தங்கி படிக்க பண உதவி தேவை இருக்கிறது. அவரின் தாய் தாரா மட்டுமே வீட்டில் வருமானம் ஈட்டுகிறார். 2012-ல் தந்தையை விபத்தில் இழந்ததால் தாயின் சம்பளத்தில் குடும்பம் நடக்கிறது. 

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே முதல் மதிப்பெண் எடுத்து, பழங்குடியினர் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட ஹாஸ்டலில் தங்கி படித்திருந்தார். 

தெலுங்கான டுடேவில் பேட்டி கொடுத்த மஹேந்தர்,

”ஐஐடி-ல் இடம் கிடைத்தாலும் என் நிதி நிலைமை என்னை அதில் சேர அனுமதிக்கவில்லை. இஞ்சினியரிங் படிக்க முடியவில்லை என்றாலும் நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐஏஎஸ் ஆகி ஏழைகளுக்கு உதவுவேன்,” என்றார்.

மஹேந்தரின் தேவைப் பற்றி வந்த செய்திகள் அடிப்படையில் தெலுங்கான ஐடி அமைச்சர் கேடி.ராம ராவ் அரசு தரப்பில் இருந்து அவருக்கு ஐஐடி மெட்ராசில் படிக்க நிதியுதவி வழங்கப்படும் என்று ட்வீட் செய்துள்ளார். பல தொண்டு நிறுவங்களும், ஆர்வலர்களும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். 

கட்டுரை: Think Change IndiaRelated Stories

Stories by YS TEAM TAMIL