ஹுசேன்: அன்று பீட்ஸா டெலிவரி பாய்... இன்று கார்கிலில் செய்தி சேனல் உரிமையாளர்!

0

மிகவும் வன்முறை மிகுந்த பகுதியான கார்கிலில் பிறந்து வளர்ந்தவர் முஹமத் ஹுசேன் இப்ன் காலோ. இவர் ஏழ்மையான பின்னணியை கொண்டவர். ஒரு காலத்தில் பீட்ஸா டெலிவரி பையனாக ஒரு உள்ளூர் ஹோடலில் பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இன்று அவர் கார்கில் மற்றும் லடாக் மக்களின் குரல்களை எதிரொலிக்கும் உள்ளூர் கேபிள் டிவி சேனலின் உரிமையாளர்.

ஹுசேன், கார்கிலில் ஒரு அரசுப்பள்ளியில் படித்துவிட்டு, ஹோட்டலில் பீட்ஸா டெலிவரி செய்யும் பணியை செய்துவந்தார். பணிபுரிந்து கொண்டே படித்தும் வந்தார். 2011இல் நண்பர் ஃபெரோஸ் கானுடன் இணைந்து, ‘கார்கில்’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியதாக கென் ஃபோலியோஸ் செய்தி வெளியிட்டது. 

மெல்ல மெல்ல பிரபலம் அடைந்த கார்கில் யூட்யூப் சேனல் இன்று ஒரு உள்ளூர் கேபிள் சேனலாக மாறியுள்ளது. இதில், கார்கில் மற்றும் லடாக்கின் கலை, ஆண்மீகம், பாரம்பரியம் மற்றும் மக்களில் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் பிரபல சேனலாக வளர்ந்துள்ளது. 

“நான் இந்த சேனலை தொடங்கியதும் கார்கிலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பேசத்தொடங்கியுள்ளனர். தங்கள் பிரச்சனைகளை பேட்டியாக தருகின்றனர், இது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை தந்துள்ளது,” 

என்று ஹுசேன் ஏஎன்ஐ பேட்டியில் கூறியுள்ளார். இவரகளது சேனலைப் பற்றி பேசிய உள்ளூர்வாசி மூர்துசா ஃபாசில், 

“ஹுசேன், கார்கில் மட்டுமல்லாது லடாக் பகுதிகளின் பிரச்சனைகளை தன் சேனலின் மூலம் வெளிப்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அவர் இந்த முயற்சியையை தீர்மானித்து ஒரு தைரியமான முடிவை எடுத்துள்ளார். ஒரு கேபிள் சேனல் நடத்த முதலீடுகள் அதிகம் தேவைப்படுகிறது. பல சவால்களுக்கு மத்தியில், அவர் இந்த சேனலை வெற்றிகரமாக நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

கட்டுரை: Think Change India