'ஸ்டார்ட்-அப் கான்கிளேவ்' கோவையின் ஸ்டார்ட்-அப் திருவிழா !

0

வளர்ந்து வரும் தொழில் முனைவுகளை ஊக்குவிக்கும், புதிய ஸ்டார்ட்-அப்களை துவக்கும் நோக்கோடு கடந்த ஃபிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி, கோவையில் ‘ஸ்டார்ட்-அப் கான்கிளேவ்’ நிகழ்ச்சி, கற்பகம் புத்தாக்க மையத்தினரால், கற்பகம் கல்லூரியில் நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆஷு அகர்வால் (BW ACCELERATE இயக்குனர்), தீனதயாளன் (சால்ட் ஆடியோஸ் நிறுவனர்) , சதீஷ்(தி டாக் நிறுவனர்), விஜயராம் குமார் வீர ராகவன் (ஹெல்ப்பர் - துணை நிறுவனர்,சி.இ.ஓ), முகமது நாசர் (e2e எக்ஸைட் கன்சல்டிங்- இயக்குனர்), பவஸ் ஜெயின் (வயர்ட் ஹம்ப்) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

முதலீட்டாளர்கள் - இளம் திறமைகள் சந்தித்த புள்ளி!

தொழில் முனைவிற்கான முழுத் திட்டமும் வகுத்து வைத்திருக்கும் இளைஞர்கள், முதலீட்டாளர்களை சந்திக்கவும், முதலீட்டாளர்கள் திறமையான தொழில் முனைவர்களை சந்திக்கவும் வழியாய் அமைந்த இந்நிகழ்வின் போது, 82 ஸ்டார்ட்-அப் கள் பதிவு செய்யப்பட்டன, 26 தொழில் முனைவு சிந்தனைகள் அறிமுகப்படுத்தப் பட்டது, 9 ஸ்டார்ட்-அப்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் தெரிவித்தனர்.

சிறப்பம்சங்கள்

கோவையின் முதல் ஸ்டார்-அப் திருவிழா எனும் பெருமையும் ‘ஸ்டார்ட்-அப் கான்கிளேவையே சாரும். நான்கு முதலீட்டு நிறுவனங்கள் பங்குபெற்ற இந்நிகழ்வில், வளர்ந்து வரும் நிறுவனங்கள் மற்றும் சமகால ஸ்டார்ட்-அப் சூழல் பற்றிய சபை ஆலோசனையும் இடம் பெற்றது.

“திறமைசாலிகள் 99 % சதவீதம் கர்வம் கொண்டவர்களாய் தான் இருப்பார்கள். ஆனால், தலைக்கனம் பிடித்தவர்கள் 99% சதவீதம் திறமைசாலிகளாய் இருக்க வாய்ப்பில்லை!” -என விஜயராம் குமார் வீரராகவன் பேசியது, பலரையும் கவர்ந்தது!

சிறப்பு விருந்தினர் ஆஹூ அகர்வால் கூறுகையில், "கோவை நகரம் பல திறமையான தொழில்முனைவோரைப் பெற்று ஒரு வளமான ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலை உருவாக்கி வருகிறது. விவசாயத்துறையில் இங்கு நல்ல எதிர்காலம் உள்ளது,"  என்றார்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Stories by Sneha