இந்த ஐம்பது ப்ளஸ் வயதுள்ள அசத்தல் பெண்களைப் போல ஒருநாளும் நீங்கள் மாற இயலாது தெரியுமா?

0

இலக்கு என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருக்க முடியுமானால், அது நிச்சயம் இந்த அழகு நிறைந்த அச்சுறுத்தும் பெண்களைக் குறிப்பதாகவே இருக்கும். இதில் பலரும் உங்களுக்கு இணையான சுறுசுறுப்பும், வேகமும் கொண்டவர்கள் இல்லை. உங்களைக் காட்டிலும் நிறைய கடமைகள் அவர்களுக்கும் உண்டு. இவர்கள் நம்மிலிருந்து வித்தியாசப்பட ஒரேயொரு காரணம்தான் இருக்க இயலும். அவர்களுக்கு இந்த உலகத்தின் பார்வைப்பற்றிய பயமோ, கவலையோ இல்லை. இந்தத் தங்க மங்கையரின் முதுமை நமது இளமையை வெறுக்கச் செய்திடும்.

சாலுமாரடா திமக்கா, வி நானம்மாள், மெஹர் மூஸ்
சாலுமாரடா திமக்கா, வி நானம்மாள், மெஹர் மூஸ்

வி நானம்மாள்: கோயமுத்தூரில் வசித்துவரும் இந்த தொன்னூற்று ஆறு வயது பாட்டி யோகாவின் பல்வேறு முத்திரைகளை அனாயாசமாக நொடியில் செய்துவிடுவார். இவர்தான் உலகிலேயே மிகவும் மூத்த வயதில் உடலை விருப்பத்துக்கு ஏற்ப வளைக்கும் தன்மை கொண்டவர். இன்றும் தினசரி மற்றவர்களுக்கு யோகாவை சொல்லிக்கொடுக்கும் நானம்மாள் தானும் தலைகீழாக நிற்பது, வளைவது என சின்ன புன்னகையுடன் பயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாகக்கொண்டுள்ளார். தொடர்ந்த முயற்சியாலும், பயிற்சியாலும் எந்த ஒரு துறையையும் வென்றிட முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

மெஹர் ஹீரோய்ஸ் மூஸ்: இவரை மெகல்லன் மூஸ் எனலாம். இவர் இதுவரை பதினெட்டு பாஸ்போர்ட்களை பயணித்தே நிறைத்துள்ளார். இதுவரை நூற்று எண்பத்தோறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இவர், கடந்த ஆண்டு அண்டார்டிகாவுக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை தன்னுடைய எழுபத்து ஒன்பது வயதில் நிகழ்த்தியுள்ளார். எந்த நாட்டைச் சேர்ந்தவருடனும் நொடிகளில் நட்பாகி விடுவாராம். எறும்பு, குளவி என வேகவைக்கப்படாதவற்றை உணவாக்கிக்கொள்ள தயங்காத இவர், அமேசானின் பைக்மீஸுடனும் நட்பு பாரட்டி பேக்பேக் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுவரை தான் கால்பதிக்காத இருபத்தைந்து நாடுகளுக்குச் செல்வதற்கான திட்டத்தை தற்போது தீட்டிக்கொண்டிருக்கின்றார் மெகல்லன் மூஸ்.

சாலுமாரடா திமக்கா: திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளாக சாலுமரதா தம்பதிகளுக்கு குழந்தை ஏதும் உருவாகவில்லை. தமது குழந்தைகள் மனிதராகத்தான் இருக்க வேண்டுமா? என யோசித்த இந்தத் தம்பதி ஆல மரக்கன்றுகளை வளர்க்கத் துவங்கினர். தனது கிராமத்தில் மரக்கன்றுகளை நடத் தொடங்கிய இவர்கள், சில ஆண்டுகளில் நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு மரக்கன்றுகளை நிறைத்திருந்தனர். இது இவர்களுக்கு அடுத்த குடூர் கிராமம் வரை நீண்டது. தற்போது நூற்று மூன்று வயதை அடைந்துள்ளபோதும், இவர் தானே தனது குழந்தையான மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பார்த்துக்கொள்கின்றனர். தேசத்தின் சிறந்த குடிமகள் விருதை கடந்த 1996-ம் ஆண்டு வென்றார்.

ஓம்காரி பன்வார்: பெண்கள் முப்பது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என சொல்வோரிடம் எழுபது வயது ஒம்காரி பன்வாரை எடுத்துக்காட்டாக கூறலாம். தற்போது ஒரு இரட்டை ஆண் மற்றும் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட இந்தத் தம்பதி, ஐ.வி.எஃப். முறையில் கருத்தரித்தனர். இரட்டைக் குழந்தையைப் பெற்றுள்ளார். ஓம்காரியின் கணவர் அவரைக்காட்டிலும் ஏழு வயது மூத்தவர். இவர்களே உலகின் மிகமூத்த பெற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் பர்ஹார்: டெல்லியைச் சேர்ந்த முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியை பதிமூன்றாயிரம் அடி உயரத்திலிருந்து தனது ஐம்பத்தொன்பது வயதில் குதித்து சாதனை செய்துள்ளார். தற்போது அறுபத்து மூன்று வயதை எட்டியுள்ள இவர் முதல் முறையாக கனடாவின் எட்மோண்டனில் ஸ்கீ டைவ் செய்ததை இந்தியாவிற்கு அர்ப்பணம் செய்தார்.

இந்த தையரியசாலி பெண்களைச் சந்திக்கும் போது வயது சாதனை புரிவதற்கு ஒரு தடையே இல்லை என்பது புலப்படும்.

ஆக்கம்: பின்ஜால் ஷா | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

சிலிக்கான் வேலியில் முத்திரை பதித்த 3 இந்திய பெண்கள்!

வீடு-வேலை சமன்பாட்டை பெண்களுக்கு எளிதாக்கிய 'ஷீரோஸ்.இன்'