இந்தியாவில் செயலி சோதனைக்கான முழுமையான தளத்தை அளிக்கும் 'ரோபஸ்டெஸ்ட்'

0

2016 ல் 9 பில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளிகள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 ல் 200 மில்லியன் செயலிகள் டவுண்லோடு செய்யப்பட்டுள்ளன. கட்டண செயலிகள் மூலம் 1500 கோடி வருவாய் கிடைத்துள்ளது. செயலி பொருளாதாரம் உருவாகி வரும் விதம் பற்றி உணர்த்தும் எண்ணிக்கைகள் இவை.

இந்த பிரிவில் தனக்கென தனி இடம் பிடிக்க முயற்சிக்கிறது "ரோபஸ்டெஸ்ட்"(RobusTest). 2014 டிசம்பரில் துவங்கப்பட்ட இதன் இணை நிறுவனர்கள் ஓம் நாராயணன் மற்றும் ஐஸ்வர்யா மிஸ்ரா, பிரமதி டெக்னாலஜிஸ் நிறுவத்தில் சாப்ட்வேர் சோதனை செய்யும் துறையில் சந்தித்துக்கொண்டனர். ஓம், உருவாக்க நோக்கில் அணுகினார் என்றால் ஐஸ்வர்யா வர்த்தகம் மற்றும் பயனர் அனுபவத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டார். இணைந்து செயல்பட்டது எத்தகைய மாயத்தை உண்டாக்கியது என ஐஸ்வர்யா சொல்கிறார்.

ஓம் கையில் இருந்த ரூ 10-15 லட்சம் சேமிப்பை கொண்டு இந்த நிறுவனத்தை துவக்க அதிருப்தியே முக்கிய காரணமாக இருந்தது என்கிறார் ஐஸ்வர்யா: பொதுவாக மொபைல் செயலிகளை பல சாதனங்களில் சோதிக்க வேண்டும். மொபைல் சாதனங்களை வாங்குவது, லாக் ரிஜிஸ்டர் மூலம் அவற்றை பரிமாரிப்பது மற்றும் அவற்றை குழுவுக்குள் மாற்றிக்கொள்வது ஆகியவற்றில் அதிருப்தி உண்டானது. மேலும் 40 க்கும் மேற்பட்ட சாதனங்களை கையாள வேண்டிய தேவை மற்றும் அதை மீறி பயனர் மொபைலில் செயலி எப்படி இருக்கும் என தெரியாமல் இருந்தது.

செயலி வெளியீட்டாளர்கள் தங்கள் செயலியை சோதிப்பதற்கான ஒற்றை தளமாக ரோபஸ்டெஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இது செயலிகளை ஒருவரது பிரவுசரிலேயே சோதித்து அறிய உதவுகிறது. எந்த வகையான கோடும் எழுதாமல் செயலிகளை தானாக சோதித்துக்கொள்ள முடியும். அதே நேரத்தில் இணையான சோதனைகளையும் மேற்கொண்டு பயனர் சாதனங்களில் செயலி எப்படி செயல்படும் என கண்டறியலாம்.

இதன் பொருள் என்ன என்றால் செயலி வெளியீட்டாளர்கள் பலவகை சாதனங்களை வைத்திருக்க வேண்டாம். சாதனங்களை பெளதீக வடிவில் கையில் வைத்திருக்காமலே எங்கு வேண்டுமானாலும் எந்த வகை சாதனத்தையும் அணுகலாம்.மேலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தங்கள் சாதனங்களின் வழியே இடைமுக அனுபவத்தையும் நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த ஸ்டார்ட் அப்பின் மூன்றாவது உருவாக்கம் இது. இதற்கு முன்னர் சாப்ட்வேர் பக் கண்டறிதலுக்கான குரோம் நீட்டிப்பு சேவை மற்றும் இணைய செயலி சோதனை சேவைகளை உருவாக்கியுள்ளனர். 2015 மே மாதம் துவக்கப்பட்ட நிலையில் இந்த தீர்வு 15 வகையான சாதனங்களின் இடைமுகத்தை அளிக்கிறது. ஒவ்வொரு இடைமுகத்திற்கும் ஏற்ற வருவாய் முறை உள்ளது.

வருவாய் மாதிரி

ரோபஸ்டெஸ்ட் சேவையை பயன்படுத்த ஒருவர் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளும்போது பல்வேறு வசதிகளை சோதித்து பார்ப்பதற்கான 60 நிமிட சோதனை நேரம் அளிக்கப்படுகிறது. 60 நிமிடத்திற்கு பிறகு இந்த தீர்வு கட்டண சேவையாகிவிடும். அதன் பிறகு ஒரு மணி நேர பயன்பாட்டிற்கு 5 டாலர் செலுத்த வேண்டும். இப்போதைய நிலையில் பிராண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்த வர்ததக மாதிரியை (பி2பி) பயன்படுத்தி வருகின்றனர். நுகர்வோர் முறைக்கு செல்ல மேலும் பெரிய அளவில் கிளவுட் வசதி தேவை என்றும் இதற்கு பெரிய முதலீடு தேவை என்றும் ஐஸ்வர்யா விளக்குகிறார். வர்த்தக முறையில் இரண்டு விதமான தீர்வுகள் உள்ளன. முதல் முறை ஹோஸ்டட் வசதி. இதில் ஒரு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 10 சாதனங்களில், பொது கிளவுட் வசதியில் ரோபஸ்டெஸ்ட்டை பயன்படுத்தலாம். இதற்கு கட்டணம் ரூ.3,00,000. சாதனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் ஒவ்வொரு சாதனத்துக்கும் ரூ.30,000 செலுத்த வேண்டும்.

ஆனால் சில நிறுவனங்கள் பொது கிளவுட்டில் தங்கள் செயலியை சோதிக்க தயங்கலாம். இத்தகைய நிறுவனங்களுக்காக அவர்கள் அலுவலகத்திலேயே முழு சோதனை தளமும் (வன்பொருள் உள்பட) உருவாக்கித்தரப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூ.60,000,000 எனும் உரிம கட்டண முறையில் செயல்படுகிறது. இதில் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் இன்னமும் தனக்கான வளர்ச்சி காரணிகளை தீர்மானிக்கவில்லை. வெகுஜன பிரிவில் இல்லாததால் இந்த வளர்ச்சி உத்தி நிறுவப்பட்ட நோட்களின் எண்ணிக்கையில் உள்ளது.( ஓவ்வொரு நோடும் 10 சாதங்களை இயக்கும்).

எதிர்கால திட்டங்கள்

அடுத்த ஆறு மாதங்களில் ரோபஸ்டெஸ்ட் கிரவுட்சோர்சிங் முறையில் ஒரு சோதனை மாதிரியை உருவாக்க உள்ளது. இதில் டெவலப்பர்கள் சோதனையாளர்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம். ரோபஸ்டெஸ்ட் அவுட்சோர்சிங்கிற்கு உதவியாக இருக்கும். வருவாய் சோதனையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

கார்ட்னர் அறிக்கையின் படி நுகர்வோர் தயாரிப்புகளுக்கான 75 சதவீத புதுமை மற்றும் ஆய்வு வசதிகள் கிரவுட்சோர்சிங் மூலம் நிறைவேறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

நிறுவனம் தற்போது தொலைதொடர்பு மற்றும் நிதித்துறையில் உள்ள நிறுவனங்களுடன் அவர்கள் மாதிரி திட்டத்தில் உதவுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வர்த்தக மெசேஜிங் துறையிலும் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்காக செயலி உருவாக்கியுள்ள நிறுவனங்கள் மற்றும் இன்றைய தேவைகளுக்கு ஈடு கொடுக்க செயலிகளை பயன்படுத்துவர்கள் என நிறுவன வாடிக்கையாளர்கள் இரு வகையை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

பாடங்கள்

முதல் வாடிக்கையாளரை பெறுவது ஒரு சவாலாக இருந்தது என்றால் மூலதனம் அடுத்த சவாலாக இருந்தது. மூன்றாவது பெரிய சவால் பற்றி ஐஸ்வர்யா விளக்குகிறார்; எல்லாவற்றையும் உள்ளடக்கிய தீர்வை உருவாக்குவது மிகவும் சவலானது. இந்த துறையின் மாறிவரும் தன்மை காரணமாக நம்முடைய தீர்வுகளை எப்போதும் தனிப்பட்ட தன்மை கொண்டதாக அளித்து, சந்தை மற்றும் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதை அளிக்க தான் தினமும் முயன்று வருகிறோம்.

இந்த இணை நிறுவனர்கள் தங்கள் தினசரி அனுபவம் திருப்தி அல்லது அதிருப்தி போன்ற உணர்வுகளின் கலைவையாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஒரு தீர்வு என்பது அம்சங்கள் அல்லது தொழில்நுட்பத்தின் தொகுப்பு அல்ல என்கின்றனர். அது பிரச்சனைக்கு தீர்வாக அமைந்து பயனர் அனுபவத்தை மேம்படுத்த வேண்டும் என்கின்றனர்.

இறுதியாக இவர்களின் அனுபவம் தரும் பாடம்:

ஒரு தயாரிப்பை உருவாக்கும் போது சில கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும். இது யாருக்காக? இது தீர்க்கும் பிரச்சனை என்ன? ஆகிய கேள்விகளுக்கு பதில் இருக்க வேண்டும். இந்த கேள்விகளுக்கான பதில், எந்த அம்சங்கள் இருக்க வேண்டும், அவை இப்போதே இருக்க வேண்டுமா போன்றவற்றை தீர்மானிக்க உதவும். இந்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக மூலதன வளம் குறைவாக இருக்கும் நிலையில் மிகவும் முக்கியமானவை.

இதுவரை இந்த நிறுவனம் 39 ஒப்பந்தங்கள் மூலம் 519 மில்லியன் மதிப்பிலான முதலீட்டை பெற்றுள்ளது. இந்த துறையில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகளின் அடையாளமாக இது விளங்குகிறது.

இணையதள முகவரி: RobusTest